புதன், நவம்பர் 29

அகோபிலம் பகுதி 6

அகோபிலம் பகுதி 6
ஜ்வாலா நரசிம்மர் சன்னிதிக்குப் போவதற்கான எல்லா முஸ்தீபுகளையும் செய்து கொண்டு மேல அகோபில சன்னிதி பக்கத்தில் உள்ள மரப்பாலத்தின் வழியே இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு மேலே ஏறத்தயாரானோம் என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேன்.
மேலே ஏற குறைந்தது இரண்டு மணி நேரமாகும், திரும்பி வர இரண்டு மணி ஆகும் என்று பக்கத்தில் சென்று கொண்டிருப்பவர்கள் சொல்வது காதில் விழுந்தது. நாங்கள் மேலும் கீழும் பார்த்தோம்.
சுற்றுமுற்றும் பார்த்தோம். இந்த நேரத்திலேயே இப்படி இருளாக இருந்தால், திரும்பி வரும்போது பாதை தெரியுமா, என்று எங்களுக்கள்ளேயே கேட்டுக்கொண்டோம்.
இது சரிப்பட்டு வராது, பின்னர் பாத்துக்கலாம், என்று எங்களுக்கள்ளேயே பேசி தீரமானித்தோம்.

வாங்கிய கோல்களை திரும்பக் கொடுத்துவிட்டு பஸ்ஸை நோக்கி ஆட்டோவில் பயணமாகி பஸ் இருக்கும் இடத்தை நோக்கிப் பயணமானோம்

இதற்கு நடுவில் எங்களைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதை சிந்துக்கத் தவறிவிட்டோம். பஸ் அருகில் வந்து பார்த்தால், எங்களுக்கு ஒரே ஷாக்!!!
எங்களைத்தவிர ஒருவர் கூட பஸ்ஸுக்கு வந்து சேரவில்லை!!!
ஏற்கனவே என் மனைவி எங்க டூர் போனாலும் பஸ்ஸுக்கு முன்னால வந்து உட்காறுவது நீங்களாத்தான் இருக்கும், ன்னு சொல்லுவாங்க,அதே போல ஆகிவிட்டது.
என்னடா நமக்கு வந்த சோதனை?
தூரத்தில் எங்கள் வாலண்டியர்கள் மட்டும் ஒரு மரத்தடியில் அமர்ந்து மேசிக்கொண்டிருந்தனர். அவர்களை அணுகி, எப்ப பஸ்ஸை கிளப்புவீரகள? என வாலண்டியரைக் கேட்டோம்.
நீங்களே பாத்திங்கள்ள, உங்களைத் தவிர ஒருத்தரக் கூட காணோம், எல்லோரும் வந்த பிறகு பஸ்ஸ எடுப்போம், என்று கறாறாக கூறிவிட்டு மீண்டும் நண்பருடன் பேசத் தொடங்கிவிட்டார்.
நாங்க அகோபிலத்துல இரண்டு நாள் தங்கப்போறோம், நவ நரசிம்மர் கோயிலையும் அதுக்குள்ள பாரத்தாகவேண்டும், இங்கேயே அரைநாள் ஆகிவிட்டது, கீழே இருக்கும் மற்ற மூன்று நரசிம்மர் ஸ்தலங்களையாவது இன்றைக்குள் பாரத்துடுவோம்ன்னு நினைச்சா, பஸ் எல்லோரும் வந்தாத்தான் கிளம்பும் சொன்னா, எப்படியிருக்கும்?
இதுதான் இந்த மாதிரி டூர் போவதுல சிரமம்.
என்ன செய்யலாம்?
உடனே நாங்க எட்டு பேரும் உடனே ஒரு ஆட்டோக்கார்ரை பிடிச்சோம்.
கீழே உள்ள யோக நரசிம்மர் மற்றும் ஷத்ரவட நரசிம்மர் மற்றும் பார்க்கவ நரசிம்மர் ஸன்னிதிகளை காணபிக்கமுடியுமா? என வினவினோம்.
பாக்கவ நரசிம்மர் சன்னிதி பார்க்க நேரம் இருக்குமான்னு தெரியல, மற்ற இரு நரசிம்மர் சன்னிதிகளை பார்க்கலாம்,, எனத் தெலுங்குல சொன்னாரன்னு நாங்க நினைச்சுக்கிட்டு ஆட்டோவில் ஏறினோம்.சரியான நேரத்துக்கு ஷத்ரவட நரசிம்மர் சன்னிதியில் கொண்டுவந்து நிறுத்தினார்.

அரச்சகரும் எங்களுக்காகவே காத்திருந்து, வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தார். பெருமாள் பெயரில் ஒரு அர்ச்சனையை செய்து கொண்டோம். ஏற்கனவே நேரமாகி விட்டதால், அவரிடமே, யோக நரசிம்மர் சன்னிதி திறந்து இருக்குமா, என்று வினவினோம். ஏனெனில் யோக நரசிம்மர் சன்னிதி ஷத்ரவட நரசிம்மர் சன்னிதிக்கு எதிரில் சிறிது தொலைவில் தான் உள்ளது.
உங்க ராசி எப்படியோ, அதுக்குத் தகுந்த மாதிரி தான் இருக்கும், ஏன்னா எனக்கே நாழியாகி விட்டது, உங்களுக்காகத் தான் இருக்கேன், சொல்லிவிட்டு, கிளம்புங்கோ ன்னு சொல்லாத குறையா, சன்னிதி கதவச் சாத்தறதுலேயே குறியா இருந்தார்.
உடனே எல்லோரும் ஆட்டோவுல ஏறி, யோகானந்த நரசிம்மர் சன்னிதிக்கு போகலாம் என்றோம்.
கிட்டத்தட்ட 1400 பேர் அன்றைய தினமும் மறுநாளும் அகோபில நவ நரசிம்மர் ஸன்னிதிகளை தரிசிக்க இருக்கும் நிலையில், கோயில் பட்டரகள் அன்று ஒருநாள் மாலை வரை இருந்திருந்தால், எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பாரகள்.
யோகானந்த நரசிம்மர் ஸன்னிதி ஷத்ரவட நரசிம்மர் ஸன்னிதிக்கு அருகாமையில் தான் உள்ளது. அங்கு ஒரு தனியார் ஆஸ்ரமம் உள்ளது.அங்கு எல்லா நரசிம்மர்களுக்கும் விக்கிரஹங்கள உள்ளன. அருமையாக உள்ளன. நவ நரசிம்மர் ஸ்தலங்களையும் தரிசிக்க முடியாதவர்கள் இங்கே தரிசித்துக்கொண்டு திருப்தியடையலாம்.  அதனை தரிசித்துக் கொண்டு எதிரே உள்ள யோகானந்த நரசிம்மரைப் பார்க்கப்போனால், ஸன்னிதி கதவு சாத்தியிருந்தது. ஆம், ஒரு மணிக்கு மேல ஆகிவிட்டபடியால் அரச்சகரும் கிளம்பிச் சென்றுவிட்டார். மீண்டும் 4 மணிக்குத் தான் திறப்பாரகளாம். எங்களுக்கு கொடுத்துவைக்கவில்லை, அவ்வளவு தான், என்று திருப்திபட்டுக்கொண்டு, ஆட்டோவில் ஏறி மதிய ஆகாரம் கொடுக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
1400 பேருக்கு ஆகாரம் தயாரிப்பது என்றால் சும்மாவா? அதைவிட அதனைப் பரிமாறுவது என்பது எவ்வளவு சிரமம்?
இதற்கென ஸ்வாமிகள் செய்திருக்கும் ஏற்பாடு என்ன?
உங்களுக்கு சாப்பாடு கிடைத்ததா?

பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக