சனி, மே 9

உங்கப்பா எங்கப்பா த்த்துவம்

உங்க ப் பா எங்க ப் பா தத்துவம்!!! 
"டேய் கண்ணா,  இங்கே வாடா, அ ப் பாவை பாருடா,  என்னவோ மாதிரி இருக்கா. கூ ப் பிடக்  கூ ப் பிட பதிலையே காணோம்." 
அம்மா பதறியடித்துக் கொண்டு பையன் கண்ணனை  அழைக்கிறாள். 
கண்ணன் அவர்களுக்கு ஒரே பையன். செல்லமா வளர்ந்தவன்.   பொறு ப் பானவன். பதவிசானவன். இங்கிதம் தெரிந்சவன்.  
"என்ன ம்மா ஆச்சு அ ப் பாவுக்கு?", அம்மா கூ ப் பிட்ட சத்தம் கேட்டு, படித்துக் கொண்டிருந்த  கண்ணன் ஓடிவருகிறான். 
"அ ப் பா, என்ன ஆச்சு ப் பா, உன் பையன் கண்ணன் வந்திருக்கேன், பாரு ப் பா, என்ன பண்ணுது ப் பா ",  கண்ணன் பதறுகிறான். 
"டேய், அ ப் பா ஏதும் பேசமாட்டேங்கிறாடா, ஆம் புலன்ஸ்க்கு போன் பண்ணுடா," அம்மா. 
"எங்கம்மா போனை வச்சேன், காணோம்",
" பொறுமையாத் தேடுடா, மேஜை மேல தான் வச்சுருந்தே."
"ஆமாம் அம்மா, இங்கே தான் வச்சுருந்தேன், அங்கே காணோம்." 
பொறுமை  இழந்தவனாய்,  என்ன செய்வது என்று புரியாமல் அ ப் பாவின்  நிலைமையை  நினைத்து கவலையுடன் நின்று கொண்டிருக்கிறான்.  
"என்னடா வாசல்ல ஆம் புலன்ஸ் சத்தம்."  அம்மா. 
"தள்ளுங்க,  தள்ளுங்க," கண்ணன் நண் பன் மாதவன்,  ஸ்ரெச்சர் சகிதம்  ஆம் புலன்ஸ் டிரைவர்கூட  உள்ளே நுழைந்தான்.  
"என்னடா மாதவன், எனக்கு கையும் ஓடல , காலும்  ஒடல, நீ எ ப் படி? ",
"அதெல்லாம் அ ப் புறம் பாத்துக்கலாம்,  உன் அ ப் பாவை  
ஆஸ் பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போறேன்,  நீ மெதுவா வா", 
என்று சொல்லிவிட்டு அ ப் பாவை ஆம் புலன்ஸ்ஸில்  ஏத்தி கிளம் பிவிட்டான் மாதவன்.  
ஒரு வாரம் ஆகியிருக்கும், மாதவன் பக்கத்து வீட்டிலிருந்து   பதட்டத்துடன் ஓடிவந்தான்.  
"என்னடா மாதவா, 
என்னாச்சு உனக்கு,ஏன் இ ப் படி ஓடிவரே?"
"அம்மாவுக்கு திடிரென்று மயங்கி  கீழே விழுந்துட்டா, என்ன பண்றதுன்னு தெரியல, அதான் ஒன்னை ப் பாத்து   பேசலாம்ன்னு ", எழுத்தான்   பதட்டத்துடன். 
" பொறுமையா  இரு, ஆம் புலஸ்சுக்கு போன் பண்றேன், எல்லாம் சரியாயிடும்,  கவலை ப் படாதே." இது நான். 
ரெண்டு நாள் கழித்து,  மாதவன் அம்மா, ஆஸ் பத்திரியில் இருந்து  
வந்த   பின், 
"மாதவா, அன்னைக்கு எங்க  அ ப் பாவுக்கு  உடல்நலமில்லைன்னு ஆனவுடன் நான் பதட்ட ப் பட்டேன், நீ சாவகாசமா பொறுமையா எல்லாம் செஞ்சு கா ப் பாத்தினே, இ ப் ப  உன் அம்மாவுக்குன்னு ஆனவுடன் அன்னைக்கு அவ்வளவு வேகமா செஞ்ச நீ, சோர்ந்து   போயிட்டே?  இதுக்கெல்லாம் என்னடா  காரணம்." 
"தெரியலைடா, கொஞ்சம் இரு, அங்க பாரு டீவீயில் ஶ்ரீ.வேளுக்குடி ஸ்வாமிகள் ஏதோ  சொல்றார் பாரு". 
"நம்ம வீட்டுலெ ஏதாவது   பதட்டமான நிகழ்ச்சி நடந்தால்  நமக்கு 
கையும் ஓடாது, காலும் ஓடாது, ஆனா பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு  அ ப் படி ஒண்ணுமே நடக்காதது   போல நமக்கு சமயத்தில் வந்து  உதவுவாங்க. அதே போலத் தான் நாமும் அடுத்த வீட்டுல இந்த  மாதிரி நடக்கும் போது நாம நமக்கு பாதி ப் பு ஏற் படாத  மாதிரி நடந்து  கொள்வோம். 
இதை உங்க ப் பா, எங்க ப் பா தத்துவம் என் பாங்க. அதாவது பிரம்மத்தில் ஈடு பாடு ஏற் பட்டால், அதையே  நினைச்சுக் கொண்டிருந்தால்  நமக்கு  ஏற் படும் கஷ்டம், மற்றவர்களுக்கு  ஏற் படும் கஷ்டம்  எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கும். அதனால் 
நாம எ ப் பவும் அவன் மீது பற்றுவைத்து  விட்டால் நம்ம  கஷ்டம், அடுத்தவன் கஷ்டம் எல்லாம் ஒரே மாதிரிதான்  இருக்கும்." 

" பாருடா மாதவா, ஸ்வாமிகள் சொல்வது போல நாம நடந்து  இருந்தால்  இந்த  மாதிரி நமக்கு இனிமே நடக்காது."
ஶ்ரீ.உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் உ பனிஷத் பற்றிய உ பன்யாசத்தில், விஜய் டீவீயில், சனாதன தர்மம் 
நிகழ்ச்சியில் இருந்து  எடுத்து  எழுத ப் பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக