ஞாயிறு, ஆகஸ்ட் 30

ரசகுல்லா யாருக்கு?

படித்ததில் பிடித்தது.

இந்த விசயத்திற்காக இரு மாநிலங்கள் சண்டை போடுகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும்.


ரசகுல்லா என்பது வட இந்திய இனிப்பு வகையாகவே அறியப்பட்டு இருக்கும். இந்தியில் ரசம் என்றால் ஜூஸ் என்றும், குல்லா என்றால் வட்ட பந்து வடிவ பொருள் என்றும் பொருள்.



ஆனால் அதன் பிறப்பிடம் வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தது. இதில் துல்லியமாக வங்காளமா? ஒரிசாவா? என்பதில் தான் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ரசகுல்லாவிற்கு புவியியல் சார்ந்த காப்புரிமை பெறுவதற்கு இருமாநிலங்களுமே போட்டியிடுகின்றன.

இதற்கு ஒரிஸ்ஸா சொல்லும் கதை மிகப் பழமையானது.

ஒரிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதர் மனைவி லஷ்மியிடம் சொல்லாமல் ரத வலத்திற்கு சென்று விட்டார். அதனால் லட்சுமி கோபப்பட்டு கோவிலின் கதவை அடைத்து படுக்க சென்று விட்டார். அவரை சமாதனப்படுத்துவதற்காகத் தான் ஜெகந்நாதர் அல்வா போல் ரசகுல்லா தயாரித்துக் கொடுத்தார் என்று ஒரிசா மாநிலத்தவர் கூறுகின்றனர்.



அதனால் பணிரெண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரசகுல்லாவை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று ஒரிசா மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் வங்காளத்தவரோ நமது ஊர் இருட்டுக் கடை ஸ்டைலில் ஒரு கதை சொல்கின்றனர். 1868ல் தாஸ் என்பவர் ரசகுல்லாவை கண்டுபிடித்து தமது கடை மூலம் பிரபலமடைய செய்தார் என்று குறிப்பை பகிர்கின்றனர்.

கடவுளுக்கு படைக்கப்படும் 56 வகை வட இந்திய உணவுகளில் ரசகுல்லா இல்லையே என்று வங்காளிகள் எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரிசா ரசகுல்லா சிகப்பு நிறத்திலும், வங்காளிகள் ரசகுல்லா வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.

மம்தா பானர்ஜி இதை சும்மா விடக்கூடாது என்று காப்புரிமை பதிய சென்று விட்டார். ஆனால் ஒரிஸ்ஸாவில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆக, யார் ரசகுல்லாவைக் கண்டுபித்தார் என்பது பூரி ஜெகந்நாதருக்குத் தான் வெளிச்சம். ஆனால் தமிழில் ரசகுல்லா என்று கூகுளில் எழுதி தேடினால் ஹன்சிகா வருகிறார். அதனால் நாமும் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டிக் கொண்டால் காப்புரிமை பெற உரிமை கொண்டாடலாம்


நன்றியுடன் :http://www.revmuthal.com/p/finance-investment-index.html

புதன், ஆகஸ்ட் 19

உலகம் அழியப்போறதாம்!!!!!!!

என்னங்க, வாங்க பேங்க்ல இருக்குற பணத்தை எல்லாம் எடுத்து நகை வாங்கிடாலாம்.
என்ன ஆச்சு, உனக்கு?
விஷயம் தெரியாதா? அடுத்தாத்துல வேலை செய்யற வெலைக்காரி மாரியம்மாவுக்குத் தெரிஞசுது, உங்களுக்குத் தெரியலயே? என்ன தான் பேப்பர், டீவீன்னு மாஞ்சு மாஞ்சு பாக்குறிங்கலோ?
என்ன காலையிலே கரிச்சுக் கொட்டாட்டா உனக்கு அந்த நாள் இனிய நாளா இருக்காதே?
ஆமாங்க, எனக்கு வேறே வேலை இல்ல பாருங்கோ? மணி வேறே ஆயிண்டிருக்கு. சன் டீவீயில காலை சீரீயல் வேறே ஆரம்பிச்சுடுவாங்க. சட்டுபுட்டுன்னு பேண்ட மாத்திண்ண்டு வாங்க, பணத்தையெல்லாம் எடுத்துண்டு வந்த்துட்டு, சாயங்காலம் போய் நகைக்கடையில நகை வாங்கிண்டு வந்துடுவோம்.
அதுசரி.அடுத்தாத்து வேலைக்காரி மாரியம்மான்னா பேரு?
ஆமாம், அது ரொம்ப முக்கியம் இப்ப. அவ பேரு என்னவானா உங்களுக்கு என்ன? அவ என்ன சொன்னான்னு கேட்கமாட்டீங்களே?
சரி, சரி, ரொம்ப அலட்டிக்காதே, விஷயத்துக்கு வா. அவ என்ன சொன்னா?
பேப்பரிலெ பாத்தாளாம், அவ வச்சுருக்குற டீவீல கூடச் சொன்னாங்ககளாம். உலகம் கூடீய சீக்கிரத்திலே அழியப் போறதாம்.அதனால தான் சொல்றேன், ஒண்ணுத்துக்கும் உதவாத, குறஞ்ச வட்டி கொடுக்குற சேமிப்பு கணக்குல இருக்கூற பணத்தை எடுத்து,புடவை, நகைன்னு வாங்கி அனுபவிப்போம். யாருக்கும் உபயோகமில்லாத பனத்தை வச்சுடுண்டு என்ன பண்ணப்போறோம்!
என்ன இப்படிச் சொல்ற், நமக்கு என்ன வசாயிடுச்சா, இன்னும் பலகாலம் நானும் நீயும் இப்படியே இருந்துடுவோமா? உடம்புக்குன்னு வந்தா லச்ஷக்கணக்குல டாக்டருக்கு கோடுக்குணும் தெரியுமா?
ஏங்க நான் என்ன சொல்லிண்டு இருக்கேன், நீங்க என்ன சொல்றீங்க, உலகம் அழியப்போறது, எல்லாரும் செத்துப் போப்போறாங்க, அதுல டாக்ட்ரும் போய்ச் சேரமாட்டாரா, சும்மா சொல்லிண்டு இருக்காதீங்கோ. கிளம்பற வழியப் பாருங்க. நான் போய் சீரியல் ஆரம்பிச்சுட்டானான்னு பாக்கிறேன். நேத்திக்கே மாமியார்காரி மாட்டுப்பெண்ணை எப்படியெல்லாம் கொலை செய்யறதுன்னு திட்டம் போட்டுகொண்டு இருந்தாள். எத பயன்படுத்தறான்னு சஸ்பென்னுல நிறுத்திடாங்க.
அது சரி, என்னிக்கு உலகம் அழியப்போறதுன்னு அந்த வேலைக்காரி சொன்னாளா?
அதெல்லாம் பேப்பர்ல போய் பாத்துக்க்ங்க, எனக்கு பதில் சொன்ன நேரம் கிடையாது
சொல்லிக்கொண்டே ஹாலை நோக்கி சென்றாள்.
நான் என்னைக்கு இந்த உலகம் அழியப் போரதுன்னு தெரியாம, தலையப் பிச்சுக்கொண்டு என் அறைக்கு பேப்பரைத் தேடிச் சென்றேண்.
அறையில் இருந்த டீவீயில் அறிவிப்பாளர் ஒரு சன்னியாசியைப் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார். பேட்டி உலகம் அழியப் போறது என்பதைப் பற்றி என்பதால்,
கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டேன்.
அறிவிப்பாளர், “ஸ்வாமி, இன்னைக்கு ஒரு சயிண்டீஸ்ட்டு உலகம் அழியப்போறதுன்னு சொல்லி இருக்கார், அதப் பத்தி உங்க அபிப்பிராயம் என்னன்னு சொல்ல முடியுமா?”
ஸ்வாமி,
“நாங்க தான் பலகாலமா இதச் சொல்லிண்டு வரோமே. இந்த உலகத்துலெ எதுவுமே நிலையில்லாதது. இதுக்கு எதுக்கு சயிண்டீச்ட்டுக்கிட்டே வேறே போணும். எப்ப இறைவன் நம்மள, இந்த உலகம், அதில் உள்ள ஜீவராசி இவைகளை எல்லாம் படைச்சானோ அப்பவே அவன் சொல்லிட்டுப் போயிட்டான். கலிகாலத்து முடிவுல  நான் மீண்டும் பொறப்பேன், எப்ப தர்மம் அழிஞ்சு, அதர்மம் அதிகமாறதோ, அப்பலெல்லாம் தர்மத்தை நிலைனாட்ட பிறப்பேன்னு
பர்த்ராணாய சாதூனாம் விநாஷாய ச  துஹ்க்ருதாம்
       தர்ம ஸ்ம் ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே
என்று கீதையிலே கண்னன் சொல்லி இருக்கான். அதனாலே எல்லோரும் எப்பவும் நல்லதே செய்யனும், நல்லதே நினைக்கணும். ஹரி ஓம்”
அறிவிப்பாள்ர், “நன்றி ஸ்வாமி” அப்படின்னு சொல்லி முடித்து விட்டார்கள்.
ச்சே, எப்ப உலகம் அழியப்போறதுன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு பாத்தா முடியலயே, என  மனதுக்குள் நினைத்துகொண்டு, வேறே ஏதாவது சேன்ல்ல இதப் பத்தி சொல்றானான்னு பாக்க டீவீ ரிமோட்டைத்  திருகினேன்.
“உங்க அபிப்பிராயம் என்ன சொல்லுங்க,” மற்றொறு சேனல்ல, விஜயகாந்த்தை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆஹா, இவர் என்ன சொல்றார்ன்னு பாப்போம் என காதத் தீட்டிக்கொண்டு உக்காந்த்தேன்.
“இதெல்லாம் ஒரு கேள்வின்னு நினைச்சுண்டு வந்து கேட்கிறீர்களே. தமிழ் நாட்டுல மதுக்குடிச்ச்ட்டு மக்கள் ரோட்டுலெ உருண்டு கொண்டிருக்கான், அரசாங்கம் அதப் பத்திக் கவலைப்படாம இருக்கு. நீங்களும் அதெ பத்தி அம்மா கிட்ட கேக்காம, உலகம் அழியப் போறதப் பத்தி பேட்டி கேட்டா, நா  உங்களை சும்மா  உடமாட்டேன், அற வாங்காம போய்ச் சேருங்க” என பேட்டிய முடிச்சுக்கிடார்.
என்னடா இது,எப்படா உலகம் அழியப்போறது???????
வேறே எங்க போய் விடையைத் தெரிந்து கொள்வது? தலையப் பிச்சுண்டு இருக்கும் போது, வாசல்ல என்ன சத்தம்ன்னு எட்டிப் பாத்தேன்.
“உலகம் அழியாம என்ன செய்யும், இப்படி காய்கறி விலையெல்லாம் சகட்டுமேனிக்கு ஏறினா”, அடுத்தாத்து மாமி காய்கறிக்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகா, மாமிக்குத் தெரியும் போல இருக்கு, எப்ப உலகம் அழியப்பொறதுன்னு, நினச்சு,
“மாமி, எப்படி உங்களுக்குத் தெரியும் உலகம் அழியப்பொறதுன்னு? எப்ப மாமி அழியப்போறது? சொல்லுங்கோ” ந்னு அவங்களைப் பாத்து கேட்டேன்.
மாமி என்னை மேல கீழ இறங்கப் பாத்துட்டு, “உனக்கு வேறே வேலை இல்லையா, போ, எனக்கு இன்னைக்கு நா சசமைக்கிறதா அல்லது மறுமகளான்னு தெரியல, உலகம் அழியப்போறதப் பத்தி கவலைப் படறான்” சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போய் விட்டார்கள்.
சே, என்ன பொழப்புடா, ஒரு சின்ன விஷ்யம் தெரிஞ்சுக்க முடியலையே? கன்னத்துக்குள் கையை வைத்துக்கொண்டு சோபாவில் உக்காந்து இனி என்ன செய்யலாம்னு யோசித்துக் கோண்டு இருந்தேன்.
“தாத்தா, என்ன யோசனை பண்ணூறீங்க?” பேரன் தன் கையில் ஐபேடுடன் என் முன்னால் வந்து கேட்டான்.
காலையில் இருந்து நான் படும் அவஸ்த்தையை அவனிடம் சொன்னேன்.
“இவ்வளவு தானா தாத்தா. இன்னைக்கு காலையில் என்னுடைய பேஸ்புக்க்க்ல ஒருத்தர் வீடீயோ போட்டு இருக்கார், வா உனக்கு காண்பிக்கிறேன்”
என்று சொல்லி அந்த வீடீயோவை போட்டுக் காண்பித்தான்.
அப்பத்தான் எனக்கு விஷயம் புரிந்தது,
உலகம் நாளைக்கு அழியப் போறதில்லை, தற்போது ஒவ்வொறு கிரஹங்களும் தன்னுடைய சக்தியை அதன் ஆரம்ப நாளில் எவ்வளவு இருந்ததோ அதில் பாதியைத் தான் வெளியிடுகின்றன. அதானல் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு  தன் முழு சக்தியும் காணமல் போய் விடும். அபோது உலகம் அழிந்து விடும். ஆனால் அது நிகழ மில்லியன் ஆண்டுகள் ஆகலாம், நாளைக்கே அது நிகழ்ப்போவது இல்லை” என்றபடி ஆதாரங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தார்.
அப்பாடா, நாம் பிழைத்தோம், முதலில் என் மனைவியிடம் இதைச் சொல்ல வேண்டும். என்னை எவ்வளவு பயப்பட வைத்து விட்டாள்.
நீங்களும் அந்த வீடீயோவைப் பாருங்கள். மன நிம்மதியுடன் மிச்ச நாட்களை நம்பிக்கையுடன் கழியுங்கள்!!!!!!!!!!!!!