ஞாயிறு, மே 5

கதை சொல்லும் பாசுரங்கள்!!!!!!!!! முதல் பகுதி.



மதுரா



கதை சொல்லும் பாசுரங்கள்!!!!!!!!!
முதல் பகுதி.
”ஏண்டா கண்ணன், என்னடா பண்ணிண்டு இருக்கே?
”, எம் பேரனைப்  பார்த்துக் கேட்டேன்.
“இதோ வரேன் தாத்தா”.
“இல்லைடா, நீ என்னமோ செய்து கொண்டிருக்கியே, அதத் தான்
என்ன பண்ணீண்டு இருக்கேன்னு கேட்டேன்”.
என் பேரன் வயது நான்கு. இன்னும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. எல்லா வீட்டிலேயும் உள்ளது போல் என் பெண் வீட்டீலேயும், குழந்தைகளுக்கு என்னன்ன விளயாட்டுப் பொருட்கள் வேண்டுமோ அத்தனையும் பேரனுக்கு வாங்கி வைத்துளளார்கள். அதை வைத்துக் கொண்டு அவன் விளையாடுவான் என்று பார்த்தால், அவனோ கையில் ஐபோனை வைத்துக் கொண்டு அதில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். அவ்னின் கவனத்தை விலக்கும் பொருட்டுத் தான் அவனைக் கூப்பிட்டேன்.
தாத்தா பார்த்துவிட்டார் என்று தெரிந்து கொண்டு தான் அவனும் மேலே
சொன்ன பதிலைக் கொடுத்தான்.
நான் விடுவேனா?
“இங்கே வாடா, உனக்கு ஒரு கதை சொல்கிறேன், அப்புறம் ஐபோனில்
படம் பார்க்கலாம்”.
“என்ன கதை சொல்லப் போறே தாத்தா. எனக்கு கதைன்னா ரொம்ப
இஷ்டம்.”
“அப்படியா, இதுக்கு முன்னால எங்கேடா கதை கேட்டு இருக்கே?”
“ஆமாம் தாத்தா, எங்க ஸ்கூல்ல மிஸ் நிறைய கதை சொல்வாங்க தாத்தா”.
 ”என்னன்ன கதையெல்லாம் மிஸ் சொல்லி இருக்காங்க, எனக்கு ஒரு கதையைச் சொல்லுடா”.
“போ தாத்தா, நீ சொல்றேன்னு சொல்லிட்டு என்ன சொல்லச் சொல்றே”.
என்னை மடக்கி விட்டது போல் ஒரு பார்வை பார்த்தான்.
சொல்றது சரிதானே, நான் கதை சொல்றேன்னு சொல்லிட்டு, அவ்னைக்
கேட்டால்!
‘சாரிடா, நானே கதை சொல்றேன், அதுக்குப் பிறகு இந்த ஐபோனை வைத்துக் கொண்டு படம் பார்க்ககூடாது, என்ன நான் சொல்றது சரியா?”
“சரி தாத்தா, இனிமே இதை வச்சுண்டு படம் பாக்கமாட்டேன்”,ன்னு சொல்லி ஐபோனை மேஜையில் கொண்டு வச்சான்.
’என்ன கதையை ஆரம்பிப்போமா?”.
”இது ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்த கதை. இத அவதாரம்ன்னு
கூடச் சொல்லுவாங்க”.
“அவதாரம்ன்னா என்ன தத்தா?”
”எப்பல்லாம் நாம இருக்கிற உலகத்திலெ மக்களைக் கஷ்டப்படுத்துற அசுரர்கள் வராங்களோ, அவங்களை கொல்லறுதுக்காக கடவுள் அவ்தாரம் எடுப்பாராம்.”
“எடுத்து என்ன பண்ணூவார் தாத்தா?”
“அவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்னு மக்களைக் காப்பாத்துவார்”.
“ஆமாண்டா, அது மாதிரி இந்த அவதாரம் கிருஷ்ணாவதாராம்ன்னு பேரு”
“இவர் என்ன பண்ணார் தாத்தா, யாரைக் கொல்ல இவர் பிறந்தார் தாத்தா?”
”ஆமாம், இவர் ஒருத்தரைக் கொல்லத்தான் பிறந்தார், அந்தக் கதையைத் தான் உனக்குச் சொல்லப் போறேன்”.
"இந்தியாவின் வடக்குப் பகுதியில், மதுராங்கற ஊர்ல உக்கிரசேனன்னு ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு கம்சன்ன்னு ஒரு பையன். தேவகின்னு ஒரு பொண்ணு. உக்கிரசேன ராஜா தன் பொண் தேவகிக்கு பக்கத்து ஊர்ல உள்ள வசுதேவன் அப்படிங்கிறவருக்கு கலயாணம் பண்ணி வைக்கிறான். மாப்பிள்ளையையும் பொண்ணையும் சாரட் வண்டிலெ ஏத்தி அவங்க ஊருக்குக் கொண்டு போய் உட்டுட்டு வாங்கறான் ராஜா.
கம்சன் கோபக்காரன். எல்லாரையும் கஷ்டப்படுத்துறவன். அவன் அப்பா சொன்னாக்கூட கேட்கமாட்டான்னா பாத்துக்கோ.”
“ஏன் தாத்தா, அப்பா சொன்னா கேட்கமாட்டேங்கறான். தப்புத் தானே?”
“அதனாலே தான் அவ்னை நாம அசுரன்னு சொல்றொம்.”
“நீ அப்பா, அம்மா சொன்னா கேட்பியா?”
“ஆமாம் தாத்தா, நான் அப்பா, அம்மா சொன்னா கேட்பேன்”.
“கதையைச் சொல்லு தாத்தா”.
”சாரட்டுலே போய்ண்டு இருக்கும் பொது வானத்திலேர்ந்து ஒரு குரல்,
’கம்சா, இவங்களுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்”
அப்ப்டின்னு சொல்லுது.  இதைக் கேட்ட கம்சனுக்கு கோபம் அதிகமாகி,
தேவகியை கொன்னு போட்டுடலாம்ன்னு வரான். அப்ப
வசுதேவர் ”இவஙளுக்குப் பிறக்கப் போற குழந்தை தானே உன்னக் கொல்லப் போறது, அதனாலெ எப்பல்லாம் குழந்தை பொறக்கறதோ அப்பல்லாம் குழந்தையைக் உன்னிடம் கொண்டு வந்து கொடுக்கிறேன், அதனாலே தேவகியை  ஒண்ணும் செய்யாதே”, அப்படின்னு கெஞசறான்.
பாத்தான் கஞசன், “வசுதேவன் சொல்றதும் சரி”தான்னு நினைச்சு
அவங்க ரெண்டு பேரையும் யார் சொன்னாலும் கேட்காம, அப்பாவையும் ஜெயில்ல அடைச்சுறான்.
“அப்பறம் என்னாறது தாத்தா?”
“ஒவ்வொரு குழந்தையா பொறக்கறது.வசுதேவர் கம்சனிடம் கொழந்தையைக் கொடுத்தவுடன் கொன்னுடறான்.இது மாதிரி ஆறு குழந்தையைக் கொன்னுடறான். தேவகி ஏழாவது குழந்தை உருவாகும் போது பகவான் விஷ்ணு அந்தக் குழந்தையை வசுதேவரின் இரண்டாவது மனைவிக்கு மாற்றிவிடுகிறார். அவ்ருக்குப் பிறக்கும் குழந்தை தான் பலராமர். கம்சனிடம் ஏழாவது குழந்தை குறைப்பிரவசமாக முடிந்துவிட்டது என்று சொல்லிவிடுகிறார்கள்.
எட்டாவது குழந்தை தான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் பிறக்கும் போது அடாது மழை. ஜெயிலுக்குப் பக்கத்தில் உள்ள
யமுனை ஆற்றில் வெள்ளம்.”
”குழந்தை பிறந்தவுடன் அப்பா, அம்மாவிடம் பேசினார்ன்னா பாரு”
”என்ன தாத்தா சொல்றே, குழந்தை பிறந்தவுடன் பேசுமா?”
“அவர் கடவுள் அவதாரம் இல்லையா, அதனால் பேசினார்”
“என்ன பேசினார் தாத்தா?”
”என்னைக் கொண்டு போய் யசோதாவின் அருகில் விட்டுவிடுங்கள். அங்கிருக்கும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வாருங்கள்”, அப்ப்படின்னு கிருஷ்ணன் வசுதேவரிடம் சொன்னார்.

”அதே பொலவே வசுதேவரும் குழந்தையை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு  யமுனையை கடந்து சென்றார். அஞ்சு தலை பாம்பு ஆதிசேஷன் குடையா பிடிச்சுக்கிறார். யமுனை அவருக்கும் குழந்தைக்கும் வழி விடுகிறது. பின்னர் யசோதையின் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து தேவகி அருகில்
விட்டு விடுகிறார்.”

”அப்புறம் என்ன ஆகிறது தாத்தா?”
”கம்சன் வந்து அந்தப் பெண் குழந்தையை கொல்லத் தயாராகிறான். அந்தச் சமயம் அவன் கையில் இருந்து விலகி, “உன்னை கொல்ல வந்த குழந்தை நான் அல்ல, அவன் வேறே எடத்துலே இருக்கான்னு”, சொல்லிட்டு மறைந்து விடுகிறது.”
”அப்புறம் என்ன நடக்குது தாத்தா?”
”அதுக்கப்பறம் நிறைய இருக்கு, அதெ இன்னொரு நாள் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாலெ இந்தக் கதையை, ஒரு பாசுரமாக, ஆண்டாள் என்கிற பெண் குழந்தை தன் ’திருப்பாவை’ங்கிற முப்பது பாசுரங்களில் ஒரு பாசுரத்தில் எழுதி இருக்கிறார்.
“என்னது, பாட்டு எழுதி இருக்காங்களா தாத்தா? அது என்னது படிங்க தத்தா.”
அந்தப் பாசுரம் இது தான்.

   ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
                                             ஒருத்தி மகனா யொளித்து வளர
                                                          தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைத்த,
                                              கருத்தைப் பிழைப்பித்துக் கஞசன் வயிற்றில்,
                                                         நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை
                                              அருந்தித்து வந்தோம் பரைதருதி யாகில்,
                                                        திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,

                                              வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

”வயதான பிறகு இதுக்கு அர்த்தம் தெரிஞ்சுப்ப, என்ன நான் சொலறது
புரியுதா?’
”அப்புறம் என்ன ஆச்சு தாத்தா கிருஷ்ணனுக்கு?”
“நீ இனிமே ஐபோனை வச்சு விளையாடாம இருக்கியா சொல்லு”.
“மாட்டேன் தாத்தா, இது மாதிரி கதை சொன்னா ஐபோனை எடுக்க மாட்டேன் தாத்தா”.
“வெரி குட், கிருஷ்ண்னின் கதையை அப்புறம் சொல்றேன்”
இந்தக் கதையை வீடியோ வடிவில் கீழே கொடுத்துள்ள லின்கை கிளிக்
செய்வதன் மூலம் கிருஷ்ணன் பிறப்பை பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FhRPrbr6Y9M#!