கொடுக்க கொடுக்க இன் பம் கிடைக்குமாம். எ ப் படின்னு தெரியுணுமா?
மரத்தை எடுத்துக்குங்க, அது இரு ப் பதால் தான் மழை பெய்கிறது இல்லையா, ஒரு மரம் வெளியிடும் ஆக்ஸிஜன் அளவு இத்தனைன்னு கணக்கிட்டு இருக்காங்க, அதன் அளவை எத்தனை மனுஷனால கூட கொடுக்க முடியாதாம்!
பழங்கள் கொடுக்கும் மரங்கள், அந்த ப் பழங்கள் எவ்வளவு ருசியா இருக்குன்னு என்னைக்காவது சா ப் பிட்டு பாத்து இருக்கா? ஒரு நாளும் இல்லை.
பசு மாடு என்ன சா ப் பிடறது, புல்லு, வைக்கோல்ன்னு மனுஷனால சா ப் பிட முடியாததைத் தான் சா பிடறது, ஆனா அதையே திரு ப் பித் தறதா, இல்லையே, ஆரோக்யமான பாலைத் தானே தருது.
பணத்தைக் கொண்டு எதையும் வாங்கிட முடியாது இல்லையா?
நம்ம குழந்தைகளுக்கு நாம, அவங்க ஆரோக்யமா இருக்கணும்ன்னு என்ன பண்றோம், நம்மிடம் இருக்கும் பணத்தை வச்சு, நல்ல பானங்களை குடிக்க கொடுக்கிறோம்.
மனுஷனை மூணு விதமா பிரிக்கணுமாம், அதமன், மத்யமன், உத்தமன், என்று மூணு விதமனதாம்.
அதமன் என்ன பண்ணுவான்னா, மத்தவங்கட்டேர்ந்து வாங்க மட்டும்தான் செய்வானாம். துளிக் கூட தன்னிடம் உள்ளதை மத்தவங்களுக்கு கொடுக்கமாட்டானாம்.
மத்யமன் எவ்வளவு வாங்கறானோ அதே அளவு மத்தவங்களுக்கு கொடு ப் பானாம். கொஞ்சம் பரவாயில்லை.
எத கேட்டாலும் வஞ்சனை இல்லாமல் கொடுக்கறது உத்தமனுக்கு அழகாம்.
நாம எ ப் படி இருக்கணும், உத்தமனா, மத்யமனா, அதமனா?
உத்தமனா இருந்தா, என்ன கிடைக்கும்?
திருமங்கையாழ்வார் உத்தமனா இருந்தா,
குலந்தருஞ் செல்வந் தந்திடு மடியார்
படுதுய ராயின வெல்லாம்,
நிலந்தஞ் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்,
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
தாயினு மாயின செய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராய ணாவென்னும் நாமம்.
போன்றவை கிடைக்குமாம்.
ஶ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உ பன்யாசம் சனாதன தர்மம்
நிகழ்ச்சியில் கேட்டது.