ஞாயிறு, ஆகஸ்ட் 15

Jk effect

 


ராஜ கோபுரத்தின் உள்ளே ஏன் குளிர்சியாக உள்ளது?

ராஜகோபுரத்துக்கு அடியில என்ன இவ்வளவு பேர் கூட்டமாக உட்காந்து இருக்காங்க!. மனைவிக்கு சந்தேகம்.
கேட்டுத்தான் பாப்போமேன்னு தீர்மானம் பண்ணிட்டாங்க போல.
"என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்களேன். இவ்வளவு குளிர்ந்த காத்து உங்க வீட்டு ஏசியுல கூட கிடைக்காது!!!"
இது உட்காந்து இருப்பவரின் பதில்.
"ஆமாம், நின்னுண்டு இருக்கிற கொஞ்ச நேரத்துலேயே இவ்வளவு கூலா காத்து வீசுது பாருங்க அத்தான்"
மனைவியும் நானும் ராஜ கோபுரத்தின் அருகே இருக்கும் 10 ரூபாய் கடையில் சாமான்கள் வாங்க வந்தபோதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்தது.  அதுல தான் என் மனைவி, இந்த கூலான விஷயத்தை பார்த்துட்டு,
"அது என்ன எல்லா ஊர் கோபுரத்துக்கு அடியிலும் அவ்வளவு பேர் உட்காந்து இருக்காங்கன்னு ரொம்ப நாளாகவே யோசித்துண்டு இருந்தேன். இன்னைக்கு நேராகவே அனுபவிச்சுட்டேன். அது ஏங்க அங்க மட்டும் அவ்வளவு  கூலா இருக்கு?"
"ஆமாம், நீ கேட்கிறதும் சரி தான். எல்லா கோபுரத்துக்கும் அடியிலும்  ஜில்லுன்னு இருக்க ஒரு காரணம் இருக்கு. அதுக்கு J and K effect ன்னு பேர்."
"அப்படின்னா?'
"சொல்றேன்.
ஒரு வாயு அதிக அழுத்தமுள்ள இடத்தில் இருந்து குறைவான அழுத்தமுள்ள இடத்தை நோக்கி பயணிக்கும் போது அதன் வெப்பநிலை குறையும். இதுவே ஜூல்-கெல்வின் விளைவின் தத்துவம். (முழுமையாக படிக்க கூகுளில் தேடவும்)
இது தான் கோபுரங்களின் உள்ளே நடக்கிறது.
கோபுரத்தின் வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் போது அழுத்த வித்தியாசம் ஏற்பட்டு வெப்பநிலையைக் குறைக்கிறது.
அதனால் தான் கோபுரங்களின் உள்ளே குளிர்ந்த காற்று வீசுகிறது.புரிகிறதா?"
"புரிஞ்சுடுத்துங்க."

 

திங்கள், பிப்ரவரி 22

தண்ணீரில் அப்பளம் பொறிக்க!!!!

 பிஸிக்ஸ் அவ்வளவு ஈஸீயா?

இல்லையா பின்ன!!!!

நிறைய பேர் பிஸிக்ஸ் கஷ்டமான பாடம். அத யாரு படிப்பாங்கன்னு அது இருக்கிற பக்கம் கூட தலை வச்சு படுக்கமாட்டாங்க. 

அப்படியெல்லாம் இல்லை, ரொம்ப ஈஸீ. என்னுடைய இந்த தலைப்புல நிறைய ரொம்ப ஈஸீயாப் புரியும்படி நிறைய எழுதி இருக்கேன். அந்த மாதிரி தான் இப்ப சொல்லப் போறதும். பயப்படாம படியுங்கள். பிஸிக்ஸ் உங்கள பிடிச்சுக்கும். அப்பளம் தண்ணீர்ல பொறிக்க முடியுமா? 

ழுடியும்!!!!

இன்னைக்கு இந்த தலைப்பில தான் எழுதப் போறேன்.

என்ன கிண்டல் பண்றேன்னு நினைக்கிறீங்க தானே!.

அதான் இல்லை.

தண்ணில அப்பளத்தப் போட்டா ஊறிப் போயிடாதான்னு சொல்றது காதுல விழறது. 

ஊறித்தான் போகும்! அப்ப எப்படி சார் தண்ணீர்ல பொறிக்கிறது.

அதுக்கு முன்னால அப்பளத்த எதுல பொறிக்கிறாங்கன்னு பாருங்க.

எண்ணெயில் தானே பொறிக்கறாங்க. எண்ணெய், அப்பளம் பொறிக்கிற போது அதன் வெப்பநிலை கிட்டத்தட்ட 300 டிகிறி செல்சியஸ். அதனால ஈஸீயா பொறிக்க முடியுது.

தண்ணியின் கொதிநிலை 100 டிகிறிக்கு மேல உயர்த்த முடியாது.எவ்வளவு வெப்பம் கொடுத்தாலும் 100 டிகிறிக்கு மேல உயறாது. 

அப்ப எப்படி 300 டிகிறிக்கு உயர்த்தமுடியும். 

அடுத்த பகுதியில்!!!