திங்கள், ஜனவரி 20

மார்கழியில் நான் கோலம்!!!!!


மாதங்களில் நான் மார்கழி!!!!!!!!!
காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம்,
மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை!!!!
என்று வர்ணித்தான் கண்ணதாசன் ஒரு பெண்ணை.
கிருஷ்ணன் தனக்குப் பிடித்த மாதம் மார்கழி என்றான்.
ஆனால் என் மனைவிக்குப் பிடித்தது ’மார்கழி’யில் கோலம் இடுதல்.
அதுவும் வண்ண வண்ணப் பொடிகளில் அந்த இதிகாசத்தில் வரும் காட்சிகளை வரைவது மிக்க இஷ்டம், கஷடமாக இருந்தாலும்!!!!!
அப்படிப்பட்ட சில காட்சிகள் இந்த 2014 மார்கழியில் அரங்கேறின.
அவற்றில் இருந்து சில உங்கள் பார்வைக்கு!!!!!

1. அஹாசுர வதம்:
பகாசுரனின் சகோதரன். பகாசுரனை கண்ணன் கொன்றதால் அதற்குப் பழிவாங்க அஹாசுரன் கண்னனைக் கொல்லப் பெரிய பாம்பு வடிவில், கண்ணன் மேச்சலுக்குச் செல்லும் வழியில் மலை போன்று படுத்து இருக்கிறான். இது தெரியாத கண்ணன் நண்பர்கள் அதன் வாய்க்குள்
சென்று விடுகிறார்கள். இதனை தெரிந்து கொண்ட கண்ணன், அஹாசுரனின் வாய்க்குள் சென்று அவன் வாயைக் கிழித்து அவனைக் கொல்கிறான்.
இதனைத் தான் கோலமாவில் சித்திரமாக வரைந்துள்ளார்கள்.


















2. திருச்சி மலைக்கோட்டை காவிரிப் பாலத்தில் இருந்து:
திருச்சிக்கே முக்கியமானது மலைக்கோட்டை. அதில் இருந்து பார்த்தால் திருச்சியைப் பார்த்து விடலாம். திருச்சிக்கு மற்றும் தன்ஞைக்கு நீர் ஆதாரம் காவிரி. அதிலும் காவிரிப் பாலம் முக்கியமானது.
இது இரண்டையும் இணைக்கும் விதமாக பாலத்தில் இருந்து பார்க்கும் விதமாக மலைக்கோட்டையை வரைந்துள்ளார்.

3. கோதை நாச்சியாரின் கனவு:
”வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்” என்ற ஆண்டாளின் கனவுக்கு ஏற்ப, அவளின் கனவினை விளக்கும் வடிவாக வரைந்துள்ளார்.















4. ஏழுமலையப்பன் தரிசனம்:
புத்தாண்டு பிறப்பு அன்று, ஜனவரி 2014 அன்று, திருப்பதி சென்று அந்தக் கூட்டத்தில் ஏழுமலை அப்பனை தரிசிக்க முடியுமா?
அதனால் அவரை நம் கண்ணுக்கு விருந்தாக்கி விட்டார் புத்திசாலித்தனமாக.















5. பூலோக வைகுந்தம்:
”உன்னுடைய கடைசி ஆசை என்ன?”
”எப்படியாவது வைகுந்தம் அடைவது தான் என்னுடைய கடைசி ஆசை ஐயா!”
”வைகுந்தம் அடைவது மண்ணவர் விதி! ”
”அப்படியானால் அதற்கு முன்னால், பூலோக வைகுந்தத்தில் இருந்து பழகிக் கொள்ளும்”
இபபடியாகச் செல்கிறது நமக்கும் ஆன்டானுக்கும் இடையே நடக்கும் விவாதம்.
அப்படியானால் எப்படி இருக்கும் பூலோக வைகுந்தம்?
வாருங்கள் “பூலோக வைகுந்தம்” என்று நம்மை அங்கேயே அழைத்து செல்கின்றார்.
ஆம், ஸ்ரீரஙகம் ஏழு பிரகாரங்களுடன்,21 கோபுங்களைக் கொண்டது ஸ்ரீரங்கம், என்பதை இந்தப் படத்தின் வழியாக, ‘கருட பார்வை’ மூலமாக நம்க்கு உணர்த்துகிரார்.



6. அமர்னாத் சிவலிங்கம்:
அமர்நாத் சிவலிங்கம் , உருகாத சிவலிங்கத்தை, நம்மால் போய் தரிசிக்க முடியாததால், நம் வீட்டுக்கே கொணர்ந்துள்ளார்.




























7. பரம பதம்”
வைகுந்த ஏகாதசி அன்று அரங்கன், ரதன்கற்கள்  (ரத்னாங்கி) பதித்த ஆபரணங்கள் கூட, சொர்க்க வாசலை கடந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் காட்டுகிறார்.
அதே தினத்தில் எங்கள் குடியிருப்பில் அவரை அதே அலங்காரத்துடன் காட்சி அளிக்கச்செய்து விட்டார் எனது மனைவி!!!


8. ராமர் சீதை:
கல்யாணக்கோலத்தில் ராமனும் சீதையும் எப்படி இருப்பார்களோ அதே மாதிரி வரைந்துள்ளார்.


















9. கணேசன் மற்றும் முருகன்:
எந்த ஒரு சுப காரியத்துக்கும் பிரதானம் கணேசன. அவரைத் தனியாக வரசொன்னால் எங்கே வருத்தப்படுவாரோ என்று, முருகனையும் அழைத்து வரச் சொன்னோம். அப்படியே கணேசனும்
தன் தம்பி முருகனுடன் காட்சி அளிக்கிறார்.




10. பொங்கல் பானைகளின் அணிவகுப்பு:
பொங்கல் அன்று, பொங்கல் பானைகள் விற்பனைக்கு அணிவகுத்து நிற்கின்றன.








11.கன்றுடன் கண்ணன்.
எப்பவுமே படங்கள் போடுவதற்கு வசதியாக உள்ளவன் கண்ணன். இங்கு கண்ணன், தன் கன்றுடன் காட்சி அளிக்கிறான்.












12. குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்:
அன்று இந்திரன் கோபத்தில் கோகுலத்தில் விடாது மழை பெய்வித்து ஆயர்களுக்கு துன்பம்  


 









விளைவித்த போது, கோவர்த்தனத்தைக் குடையாக பிடித்து, ஆயர்குல மக்களை அதில் இருந்து காத்தான். அந்த்க் காட்சியை படம் பிடித்துள்ளார் இங்கு.