புதன், டிசம்பர் 4

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 6. காளிங்க நர்த்தனம்.பாசுரம் சொல்லும் கதை---பகுதி 6. காளிங்க நர்த்தனம்.

"என்ன தாத்தா ஓரே பாட்டா இருக்கு?”
"ஆமா கண்ணா, நான் பாடறது பாட்டு இல்லப்பா, பாசுரம்.”
"என்ன பாசுரம் அது தாத்தா?”
            நஞ்சுமிழ்நாகம்கிடந்த நற்பொய்கைபுக்கு
              அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டருள்செய்த
            அஞ்சன வண்ணனைப் பாடிப்பற்
              அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற
"கண்ணன் சின்னக் குழந்தையா இருக்கும் போது பல ஆச்சர்யங்களை நிகழ்த்தி இருக்கார். அதப் பற்றி நான் உனக்கு நிறையச் சொல்றேன். ஆனா இப்ப நான் பாடிய பாசுரம் கண்ணன் ஓரு பாம்பின் மேல டான்ஸ் காளிங்க நர்த்தனம், ஆடியது பற்றியது.”
"என்னது பாம்பு மேல டான்ஸா?”
"ஆமாம், பாம்பு மேல தான் டான்ஸ் தான்!”
"எதுக்கு தாத்தா பாம்பு மேல டான்ஸ் ஆடணும்.”
"அது ஒரு கதை கண்ணா!!!
கிருஷ்ணன் எப்போதும்  தன் நண்பர்களுடன் மாடுகளை மேச்சலுக்குக்காக யமுனை நதிக்கரைக்கு கொண்டு செல்வது வழக்கம். அந்த நதிக்குப் பக்கத்திலே ஒரு மடு இருக்கும்.”
"மடுன்னா என்ன தாத்தா?”
"மடுன்னா குளம் கண்ணா, அதாவது ரொம்ப தண்ணி இருக்காது, கலங்கி இருக்கும், தண்ணி தெளிவா இருக்காது, அதை தான் மடுன்னு சொல்லுவோம்.”
"சரி தாத்தா.”
"இதுக்கு முன்னாலே அந்த மடுவிலெ நிறைய மாடுகள், கன்னுக்குட்டிகள் செத்துப் போயிருக்கு. என்ன காரணம்ன்னு யாருக்கும் தெரியாது. அன்னிக்கு கண்ணன் தன் நண்பர்களோடு அந்த மடுப் பக்கம் தங்கள்
மாடுகளை ஓட்டின்ண்டு வராங்க.”
"ஐயய்யோ, கண்ணனுக்கு இந்த விஷயம் தெரியாதா, தாத்தா?”
"தெரியும் கண்ணா, அது மட்டும் இல்லை, அந்த மடுவில ஒரு பயங்கற விஷ்ம் கொண்ட நாகப்பாம்பு இருக்கும்ன்னும் தெரியும்.
அந்தப் பாம்பு தான் மாடுகள், கன்னுக்குட்டிகள் செத்துப் போகக் காரணம்ன்னும் தெரியும்.”
"தெரிஞ்சுண்டே எதுக்குத் தாத்தா அந்த மடுவுக்கு போகணும்.”
"அந்த பாம்புக்கு “காளியன்”   அப்படின்னு பேர், அவனுக்கு அஞ்சு தலை.”
"அப்பறம் என்ன ஆறது தாத்தா?”
"தன் நண்பர்களை அழைத்து மாடுகளை அந்த மடுவில் தண்ணீர் அருந்தச் அழைத்துச் செல்லும்படி சொல்றான்.
மடுவில் இருந்த காளியனுக்கு குஷி. இன்னிக்கு நமக்கு நல்ல விருந்துன்னு சொல்லிக்கிட்டே வெளியே வரான்."
"அப்புறம் என்ன நடக்குது தாத்தா?”
"நண்பர்கள் மாடுகளை அந்த மடுக்கு அருகாமையில் அழைத்துச் செல்கிறார்கள்.
திடீரென்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தா கண்ணனைக் காணோம். நன்ண்பர்களுக்கு பயம்.”
"கண்ணன் எங்க போயிட்டார் தாத்தா?”
”தண்ணிக்குள்ள குதித்தார், நீஞ்சினார், எங்க அந்தக் காளியன்ன்னு தேடினார்.
கண்ணனைக் காணோம்ன்னு நண்பர்கள் உடனே கோகுலத்துக்கு ஒடிப்போய் நந்தகோபனிடம், கண்னன் விஷப்பாம்பு
இருக்கக்கூடிய மடுவுக்குள் குதித்ததை சொல்லப் போறாங்க.
கோகுலத்தில் உள்ள எல்லாரும் பயந்து போய் உடனே ஓடி வராங்க.”
”கண்ணனுக்கு என்ன ஆறது தாத்தா, எனக்கு பயமா இருக்கு.”
”காளியனுக்கு குஷி. மாடுகள் தான் வரும்ன்னு நினைச்சான், மனுஷனே வந்து இருக்கான்னு ரொம்ப மகிழ்ச்சி. தன்னுடைய வாயை ‘ஆ” என்று திறந்து கொண்டு கிருஷ்ணனை முழுங்க ஒடி வரான்.
காளியனுக்குப் பலதடவை போக்குக் காட்டிக் கொண்டே இங்கும் அங்கும் ஒடி ஒடி, அவனுக்கு போக்குக் காட்டறார்.
காளியன் வாலைப் பிடித்து சுழற்றறார். அவனால் ஒண்ணும் பண்ணமுடியல. இந்த மாதிரி பல மணி நேரம் நடந்தபின், அவன் களைப்பாகிற நேரம் பாத்து அவன் தலை மேல ஏறி நின்னு ஆனந்தத்
தாண்டவம் ஆடறார்.
காளியனால் ஒண்ணும் பண்ணமுடியல. கண்ணனை கடவுள்ன்னு காளியன் புரிஞ்சுக்கறான்.”
”என்ன பண்றான், காளியன்.”
”கண்ணனிடம் மன்னிப்புக் கேட்கிறான்.”
”மன்னிப்புக் கொடுக்கிறாரா தாத்தா?”
”மன்னிப்பு கொடுப்பது தான் கடவுளின் செயல். யார் அவன் பாதத்தை அண்டினாலும் அவனுக்கு மன்னிப்புக் கொடுத்து .அவனை தன்னோடு இணத்து கொள்வது தான் கடவுளின் செயல் இல்லையா, அதனால், காளியனிடம் இனிமே யாருக்கும் நீ தொந்த்ரவு கொடுக்கக்கூடாது, அதனால் இந்த மடுவில் இருந்து உடனே கடலை நோக்கிப் போய்விடு, அப்ப்டிங்கறார் கண்ணன்.”
”காளியன் போயிடறானா தாத்தா?”
”ஆமாம் கண்ணா, காளியன் உடனே அந்த மடுவை விட்டு வெளியே போய் கடலுக்குப் போய் விடுகிறான்.”
”அப்பாடா, இப்பத்தான் எனக்கு உயிர் வந்தது தத்தா.”
”இந்தக் கதையை தான் பெரியாழ்வாரும், மற்றவர்களும் பாசுரமாகப் பாடியுள்ளார்கள், அதுலே ஒரு பாசுரத்தை தான் நான்
முன்னாலே பாடினேன், கண்ணா. மற்றவைகளை கீழே கொடுத்துள்ளேன்
                  காளியன் பொய்கைகலங்கப்பாய்ந் திட்டு, அவன்
            நீள்முடி யைந்திலும் நின்று நடஞ்செய்து,
                மீள் அவனுக் கருள்செய்த வித்தகன்
            தோள்வலி வீரமே பாடிப்பற்
                தூமணி வண்ணனைப் பாடிப்பற. 

என்று பெரியாழ்வார் பாடுகிறார். மேலும்,

   படவர வுச்சி தன் மேல் பாய்ந்துபல் நடங்கள் செய்து,
     மடவரல் மங்கை தன்னை மர்வகத் திருத்தி னானே,
   தடவரை தங்கு மாடத் தகுபுகழ் நாங்கை மேய,
     கடவுளே! காவ ளந்தண் பாடியாய்! களைகணீயே.

என்று திருக்காவளம்பாடி என்னும் திவ்யதேசத்தைப் பற்றிப் பாடும்போது திருமங்கையாழ்வார் இந்த காளியன் நடனத்தைப் பற்றி பாடுகிறார்.
உன்னுடைய பாட்டி அதனைக் கோலமாகப் போட்டுள்ளார்கள் பார்.
கோலத்தில் காளிங்க நர்த்தனம்


                                                          


இந்தக் காளியின் மேல் நடனம் செய்ததை உன் மாதிரி குழந்தைகளுக்கு புரியும்படி படமாக்க் கொடுத்துள்ளார்கள்.
அதயும் பார். நன்றாக இருக்கும்.”
http://www.youtube.com/watch?v=52iZ3lUv41U தமிழில்
http://www.youtube.com/watch?v=z1p7Lo8nwNI&list=SPB973DBD69DB69061 ஆங்கிலத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக