புதன், டிசம்பர் 4

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 5 கோவர்த்தன மலையைத் தூக்கின கதை!!!


பாசுரம் சொல்லும் கதை---பகுதி 5
கோவர்த்தன மலையைத் தூக்கின கதை.
"தாத்தா, புதுசா ௭ன்ன ௧தை சொல்லப் போறே?"
"௧ண்ணா, ௧ண்ணன் ஓர் மலையைத் தூக்கின ௧தை பற்றி தான் இன்னைக்கு உனக்குச் சொல்லப் போறேன்."
"என்ன மலையைக் கண்ணன் தூக்கினாரா?"
"ஆமாம் கண்ணா, கண்ணன் மலையைத் தூக்கினார்."
"௭துக்கு தாத்தா?"
கண்ணன் பிறப்பதுக்கு முன்னால் அந்த ஊர் மக்கள் வருஷாவருஷம் இந்திரனுக்கு விழா எடுத்து படையல் செய்வார்கள். எப்போதும் போல அந்த வருஷமும் விழாஎடுக்கலாம்ன்னு   ஊர் மக்கள் தீர்மானம் பண்ணறபோது, கிருஷணன் ,
ஏன் வருஷாவருஷம் இந்தினுக்கே படையல் பண்ணிரீங்க ஓரு மாறுதலுக்கு கோவர்த்தனமலைக்கு படையல்  செய்யலாமே, அந்த மலைதானே உங்களுக்குத் தேவையான பயிர்க ளை வளர்க்க உதவுது,"
என்று சொல்லி மக்களை மனம் திருந்தி கோவர்த்தனமலைக்கு படையல் செய்ய சம்மதம் வாங்கினான்.
"அப்புறம்என்னதாத்தா நடக்கிறது?"
மக்கள் சரின்னு கோவர்த்தனமலைக்கு படையல் செய்யராங்க.
"இந்திரனுக்குகோபம் வரலயா தாத்தா?"
"கோபம் வராம இருக்குமா?"
"அபபறம் என்ன ஆச்சு தாத்தா?"
இந்திரன் பாத்தான், என்னடா வருஷாவருஷம நமக்கு படையல் பண்ணுவாங்களே அது போல இந்த வருஷம் படையல் பண்ணலையேன்னு. நம்மளை ஏன் படையலுக்கு கூப்பிடலைன்னு 
பூமிக்குப் போய் பாக்கலாம்ன்னு பூமிக்கு வரார் இந்திரன்.
"அப்பறம் என்ன ஆறது தாத்தா?"
"மக்கள் கோவர்த்தனமலைக்கு படையல் பண்ணறதைப பாக்கிறார் இந்திரன்."
பயங்கறகோபம் வரது இந்திரனுக்கு!"
பாரு உங்களைஎல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிறேன்னுன்னு!
"என்ன தாத்தா பண்றார்?"
மழை அரக்கனைக்  கூப்பிட்டு உடனே பயங்கர மழை பெய்ய உத்தரவு போடறார் இந்திரன்.
"மழை அரக்கன் என்ன பண்றார் தாத்தா?"
"இந்திரன் சொன்னா மீறமுடியுமா என்ன?"
மழை பெய்யத் தொடங்கியது. மழைன்னா அப்படிப் பட்ட மழை. ஊரே வெள்ளக்காடா மாறுகிறது. ஒதுங்கறதுக்குஒருஇடம் கூட இல்லை. மக்கள் என்ன பண்றதுன்னு தெரியல.ஓடி கிருஷ்ணன் கிட்ட வராங்க.
கிருஷ்ணா எங்களைக் காப்பாத்து, ஊரே வெள்ளக் காடா இருக்கு, எங்களால எங்க போரதுன்னு தெரியல, 
"நீ சொன்னதாலத் தானே கோவர்த்தன மலைக்கு படையல் செய்தோம், இப்ப நீ தான எங்களைக் காப்பாத்த வேணும்"
அப்படீன்னு மக்கள் கிருஷ்ணன் கிட்ட வந்து கதறாங்க."
கிருஷ்ணன் மக்களைப் பார்த்து, கவலைப் படாதீங்க, உங்களைக் காப்பாத்துவது என்னுடைய கடமைன்னு சொல்றார்.
"அப்பறம் என்ன பண்றார தாத்தா?"
உடனே தன்னோட சுண்டு விரலால கோவர்த்தன மலையை அப்படியே தன் தலைக்கு மேல தூக்கி மக்கள்,ஆடு, மாடு போன்ற எல்லா உயிரினங்களையும் மலைக்குக் கீழே வரச் சொல்றார்.
"மலையைத் தூக்க முடியுமா தாத்தா?"
"நமக்குத் தான் சின்னப் பொருளக்கூட தூக்க முடியாது,ஆனா கண்ணன் பெருமாள் இல்லையா,அவருக்கு மலை கூட கடுகு மாதிரி சிறுத்துப் போயிடும் கண்ணா!"
"அப்புறம் என்ன ஆறது தாத்தா?"
"இந்திரன் வேறு வழில்லாம தோத்துப் போயிடறான்.
சின்னக் குழந்தையா இருக்கிறகிருஷணன் பெருமாள்ன்னு புரிஞ்க்கிறான். அவர்கிட்ட தான்பண்ண தப்புக்கு  மன்னிப்புக் கேட்கிறான்."
"மழையும் நின்னு போயிடறது. இடையர்கள் கண்ணன் யாருனனு புரிஞ்சுக்கிறாங்க."
"இந்த கோவர்த்தன மலையைத் தூக்கினதைப் பற்றி பல ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரப்பந்தத்தில்  பல இடங்களில் பாடியுள்ளார்கள் கண்ணா,அதுல ஓரு பாசுரத்துக்குத் தான் இந்த அர்த்தம் வர மாதிரி 
உள்ளதை கீழே கொடுத்துள்ளேன்."

                                 இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
                                         எழில்விழ வில்பழ நடைசெய்,
                                 மந்திர விதியில் பூசனை பெறாது
                                         மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
                                 எந்தமோ டினவா நிரைதள ராமல்
                                         எம்பெரு மானரு ளென்ன,
                                 அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்
                                         திருவல்லிக் கேணிக்கண் டேனே.

என்று திருவல்லிக்கேணிப் பெருமானைப் பற்றி பாடும் போது திருமங்கையாழ்வார் பாசுரம் விளக்கம் தான் மேலே உள்ள கதை.
"நல்லா இருந்தது தாத்தா."
"இதை ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு என படமாக எடுத்துள்ளார்கள கண்ணா, பாத்தா அசந்துடுவே."
"அப்படியா, எங்க இருக்கு தாத்தா?"
கீழே கொடுத்துள்ள லின்கை சொடுக்கினா நேரே அங்கேயே கொண்டு போய் விடும், பாரு அசந்துடுவே.
http://www.youtube.com/watch?v=6-UKAJ6dO-U&list=SPB973DBD69DB69061 
ஆங்கிலத்தில் யூ டுயுபில் பாருங்கள்
கோவர்த்தன மலையைத் தூக்குதல்

கண்ணன் மலையை தூக்குதல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக