திங்கள், ஏப்ரல் 26

தூங்குவதற்கு சில வழிகள்


தூக்கம் வரவில்லையா? முடிந்தால் "தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே "என்ற பாடலைப் பாடிப் பாருங்கள். அப்பவும் தூக்கம் வரவில்லையா? கவலைப் படாதிர்கள் . கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்தில் உள்ளது போல ஏதேனும் ஒரு வழியைப் பயன்படுத்திப் பாருங்கள் நிச்சயம் தூக்கம் வரும் .


வெள்ளி, ஏப்ரல் 23

அன்னையர் தினம்

அன்னையர் தினம்அன்னையர் தினம் வருடா வருடம் கொண்டாடுகிறோம். எதற்காக? , நம்மை ஈன்றவரை வருடம் பூரா நினைக்கிறோமோ இல்லையோ அன்று ஒரு நாளாவது நினைக்கட்டும் என்று தான் நினைக்கிறேன் .என்ன நான் சொல்வது சரிதானே !கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் வெட்கமாக இருக்கிறது .

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ,ஆலயம் தொழுவது சாலவும் சிறந்தது",என்று முன்னோர்கள் சரியாகத் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள் .நமது தாய் நமக்கு என்ன செய்யவில்லை!

தான் தாய் ஆகிவிட்டோம் என்றவுடன் தனக்காக இல்லாவிட்டாலும் தன சிசுவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறாள் .தன உணவு முதல் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு விடுகிறாள் .

எனக்குத் தெரிந்த ஒருவர் ,தன சொத்துக்களை எல்லாம் கொடுத்த தாயை , "நீ எப்போது சாவாய் ,நான் எப்போது சொத்தை பெறுவது " என்று எல்லாம் இகழ்ந்து பேசி இருப்பதை கேட்டிருக்கிறேன் . இவ்வளவு இகழ்ந்து பேசிய மகனை மகனை அந்தத் தாய் மன்னித்து தான் இருக்கும் போதே சொத்துக்களை எழுதி வைத்தது எனக்குத் தெரியும் .

பீகாரில் உள்ள ஒரு இடத்தில் இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது மரபு.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ,தந்தைக்கு,முன்னோர்களுக்கு,தாய்க்கு என்று பலருக்கும் சாத் உருண்டைகளை வைப்போம் .மற்றவர்களுக்கு வைப்பதை விட தாய்க்கு அதிகமான உருண்டைகள் வைக்கச் சொல்வார்கள் .மேலும் ஒவ்வொரு உருண்டைக்கும் ,தாய் கர்ப்ப காலத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை சிரமப்பட்டதை சொல்லிச்சொல்லி சாத் உருண்டைகளை வைக்க சொல்லும் போது கண்களில் நீர் சொறியும் .அவ்வளவு பவித்திரமானது தாய் உறவு என்றால் பாருங்கள் .

வெவ்வேறு காலக் கட்டங்களில் பல அவதாரங்கள் கடவுள் எடுத்திருக்கிறார் என்றால் ,கலிகாலத்தில் கடவுள் தாயைப் படைத்துள்ளார் போலும்.

அந்த வகையில் இந்த வருடம் வரும் may 9 ம தேதி அன்னையர் தினம் .அன்று மட்டும் அல்லாமல் எல்லா நாட்களும் அன்னையரை நினைவிற் கொள்வோம் .எல்லா அன்னையருக்கும் நம் வணக்கத்தைச் செலுத்துவோம்

ஆங்கிலத்தில் MOTHER என்ற சொல்லுக்கு கவிதை ஒன்றினைக் கீழே கொடுத்துள்ளேன். மிகச்சரியாக உள்ளது இல்லையா!

MOTHER

"M" for million things she gave for me

"O" means she is growing old

:T" the tears she shed to save me

:H" the heart of purest gold

:E" for her eyes with love light shining

"R" for the right,right she always be

put them all together in one word they spell "MOTHER"
" a word that means a world to me"
வியாழன், ஏப்ரல் 22

நாங்கள் அமெரிக்கா போகப் போறோம்அமெரிக்க காட்சிகள்
நயுயார்க் காட்சிகள்


நியுயார்க்கின் இரவுக் காட்சி .
நாங்க அமெரிக்கா போகப் போறோம்.


உலகத்துக்கெல்லாம் யார் சொன்னார்கள் "நாங்கள் அமெரிக்கா போகப் போறோம் "என்று தெரியவில்லை .யாரைப் பார்த்தாலும் என்றைக்கு கிளம்புகிறீர்கள் .எந்த வழியாகப் போகப் போகிறீர்கள் என்று எங்களைத் துளைத்து எடுத்து விட்டார்கள்.இது போதாது என்று ,ஒருநாள் , வாசலக் கதவை யாரோ தட்டினார்கள் ஏன் மனைவி கதவைத் திறந்தாள் . "நாங்கள் அடுத்த தெருவில் இருக்கிறோம் .நான் திருச்சியில் பங்கில் வேலை பார்க்கிறேன். .எனமனைவி ஆசிரியராகப் பணி புரிகிறார்."என்று தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டார்."சரி,என்ன விஷயமாகப் எங்களைப் பார்க்க வந்தீர்கள் " என்று நான் கேட்டேன் .
"உங்கள் மனைவியின் பிரண்டு நீங்கள் அமெரிக்கா போகப் போவதாகச் சொன்னார்கள் ,அதனால் உங்களைப் பார்த்து விட்டு போகலாம் என்று வந்தோம் " என்றார்கள் . "நாங்கள் அடுத்த மாதம் போகப் போகிறோம்"என்று நான் சொன்னேன் ."ஒன்றுமில்லை, எங்கள் பெண் us ல் இருக்கிறாள்,நீங்கள் போகும் போது எங்கள் பேரன் பேத்திகளுக்கு சில சாமான்கள் கொடுக்கிறோம் ,அதனை நீங்கள் எடுத்துச் செல்லவேண்டும் ,அவர்கள் வந்து வாங்கிக் கொள்வார்கள்' என்று சொன்னார்.
வேறு வழி இல்லாமல் நானும் "அதற்கென்ன ,நீங்கள் தாராளமாகக் கொடுங்கள் ,நாங்கள் எடுத்துச் செல்கிறோம்"என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை அனுப்பினோம்.
இது போல இன்னும் சிலரும் தங்கள் பெண் அல்லது பையன் ,பேரன் என்று யாரையாவது சொல்லி சாமான்களைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் கொடுத்தவற்றை வைக்கவே ஒரு சூட்கேஸ் வந்துவிட்டது.
நாங்கள் எந்த இடங்களைப் பார்க்கவேண்டும் ,எப்படிப் போக வேண்டும் ,என்று பலரும் தங்கள் தங்கள் யோசனையை கொடுக்க ஆரம்பித்தார்கள் .எதோ தாங்களே அமெரிக்கா சென்று வந்தவர்கள் போல சொல்ல ஆரம்பித்தார்கள் .
ஒரு வழியாக எங்களுக்கு வேண்டிய சாமான்களை (மளிகை சாமான்கள் )உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தோம்
இனிமேல் தான் விஷயம் உள்ளது.
நாங்கள் என்ன ஊரைச் சுற்ற வந்தோம் என்று நினைத்தீர்களா? அப்படியெல்லாம் இல்லை.எங்கள் பேரன் பேத்திகளை பார்த்தக் கொள்ள வந்துள்ளோம் .எனவே வந்து இறங்கிய நாளில் இருந்து சரியான் வேலை எங்களுக்கு. வேலைக்கு ஆள் கிடைக்காது .நாங்களே தான் எல்லா வேலையையும் செய்ய வேண்டும் .நமது ஊரில் கூட இத்தனை வேலை இருந்திருக்காது , அத்தனை கஷ்டம் .இதில் நாங்கள் வந்து இறங்கியது மிகச் சரியான குளிர்காலம் வேறு எதோ வெளியே போனோம் என்று இல்லை, என்றால் . பார்த்துக் கொள்ளுங்கள்.எவ்வளவு கஷ்டம் என்பதை .
அப்போது தான் இங்கு ஒரு நண்பரைப் பார்த்தோம் .
அவர்களைப் பார்த்தபிறகு எங்கள் கஷ்டம் பனி போல விலகியது. அது எப்படி? அது ஒன்றும் இல்லை,அவர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தி ஆகியோர் மாற்றி மாற்றி ஆறு மாதத்திற்கு ஒரு முறை இங்கு வருவார்களாம்.ஏனெனில் அவர்கள் பெண்ணும் மாப்பிளையும் வேலைக்குச் செல்வதால் பேரன் பேத்திகளை மாற்றி மாற்றிப் turn போட்டுக் கொண்டு பார்த்துக் கொள்வார்களாம். இங்கு அவர்களை DAY CARE ல் விடுவது என்பது மிக செலவான கார்யம். அதே போல வேலைக்கு ஆள் என்பது குதிரைக் கொம்பு. அதனால் தான் சம்பளம் இல்லாத! இதுதான் நிறைய வீடுகளில் நடக்ககூடிய சமாசாரம் ..
இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு !
"நாங்கள் அமெரிக்கா போகிறோம் "என்று யாராவது சொன்னாள் , எங்களுக்கே உள்ளூர ஒரு சிரிப்பு வரும் .இனி உங்களுக்கும் சிரிப்பு வரும் என்று நினைக்கிறேன் .
அது சரி ,எதற்காக் அந்தப் போட்டோக்களைப் போட்டிருக்காய், என்று தோன்றுகிறதா! அதெல்லாம் சும்மா உங்களுக்காகத் தான்.

புதன், ஏப்ரல் 21

தாமஸ் ஆல்வா எடிசன்
ஆய்வகத்தில் ஒரு நாள் :
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன் . மின்சாரம் இல்லாத ஒரு நாளை நினைத்துப் பாருங்கள்.
குளிக்கும் இடத்தில் இருந்து படுக்கை அறை வரை மின்சாரம் இல்லாமல் இருந்து பாருங்கள். முடியுமா? முடியாது.சமையல் அறையில் மின்சாரம் இல்லாவிட்டால் என்ன ரகளை நடக்கும் பாருங்கள்.இரவு ஒருநாள் மின்சாரம் இல்லாமல் தூங்க முடியுமா? சிறிது சிந்திப்போம்.
என்ன? இத்தனை பீடிகை போடுகிறானே என்று யோசிக்கின்றீகளா. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்.நமக்கு மிக முக்கியமான மின்சார பல்பு ,பாடக்கூடிய கருவி மற்றும் பலவற்றையும் கண்டுபிடித்து உலகப் புகழ் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வகத்திற்கு ஒருநாள் மாலைப் போது சென்றிருந்தேன், அதைப் பற்றிய படைப்பு தான் இது.
தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புக்களில் பல்பு, போனோகிராப் மற்றும் நகரும் சினிமா படம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன .அவர் 1947 -1931 வரையான ஆண்டுகளில் .இருந்து மேற்கண்ட கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார் அவரின் ஆய்வகத்தில் ஒருநாள் நாங்கள் குடும்பத்தினருடன் சென்றிந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ஆகும்
அவரின் 84 வருட காலத்தில் 1093 பொருட்களுக்கு பேடண்ட் வாங்கி இருந்தாராம் என்றால் பாருங்கள் அவருடைய காலத்தில் அவர் மிகப் பெரிய தயாரிப்பாளராகவும், அவர் கண்டுபித்தவைகளை விற்பவராகவும் விளங்கி இருந்தாராம். படிப்பு சரியாக வரவில்லை என்ற காரணத்தினால் 1859 ம ஆண்டு ட்ட்ராயிடு நகரில் நாளிதழ்களை விற்கும் பையனாக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கி, வேதியல் ஆராய்சிக் கூடம் மற்றும் அச்சுக்கூடம் போன்றவைகளை நிறுவினாராம் 12 வயது ஆகும் போது காதுகேட்காமல் இருந்தும், அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய சிந்தனையை ஆராய்ச்சியில் செலுத்தி இருப்பதை அவருடைய ஆய்வகத்தைப் பார்த்தாலே புரியும் ஆய்வகத்தின் சில போடோக்களை இங்கே கொடுத்துள்ளேன் 1877 ல் கிரகாம் பெல் தயாரித்த தொலைதொடர்பு அனுப்பி மாதிரியைப் பயன்படுத்தி வேகமாக நகரக்கூடிய தகரப் பேப்பரின் மேல் ஒரு ஊசியைப் பயன்படுத்தி தன்னுடைய குரலை "mary had a little lamb" என்ற பாடலை பதிவு செய்து பின்னர் அதனைப் பாடும் படியும் செய்தார் . இவ்வாறு போனோக்ராப் என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.அது தற்போது கூடப் பாடிக்கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். (பார்க்க படம்)


http://picasaweb.google.com/krishnalakshmi48/ThomasEdisonSLab?feat=directlink


1878 ல் கார்பன் கம்பியைப் பயன்படுத்தி நீண்ட நாட்களுக்கு எரியும்படியான மின்விளக்கைக் கண்டுபிடித்தார். அதனைக் காண பல இடங்களில் இருந்தும் மக்கள் வந்து பார்வை இட்டனராம். நமக்கு மிக முக்கியமான கண்டுபிடிப்பு அல்லவா! 1888 - ல் நகரக்கூடிய (சலன) படத்தைக் கண்டுபிடித்தாராம். இவைகளை எல்லாம் அவருடைய நியூ ஆரஞ் (நியூ ஜெர்சி ) அமெரிக்காவில், மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார்கள். அவைகளைப் பார்க்கும் போது பிரமிப்பும் ஆச்சர்யர்மும் உண்டாகின்றன. மிகப் பெரிய கனடுபிடிப்பாளர் வாழ்ந்த மற்றும் அவருடைய ஆய்வகத்தையும் பார்வையிடக் கிடைத்தது எங்களுக்கு மிகவும் பாக்கியம் ஆகும் நீங்களும் நேரம் கிடைத்தால் ஒரு தடவை பார்த்து அவருக்கு மரியாதையை செய்து விட்டு வாருங்கள்

வியாழன், ஏப்ரல் 15

நேர்காணல்--ஓர் அனுபவம்.
"என்ன அப்பா, எல்லாம் தயார் செய்து விட்டாயா?'
என் மகள் அமெரிக்காவில் இருந்து ஸ்கைப்பில் கூப்பிட்டு மேலே கண்டவாறு என்னை வினவினாள்
"என்ன தயாரா?'
"டெலிஃபோன் ந்ம்பரை ஒரு தடவை சொல்லு"
"9737943834"
"ஒகே"
"வீட்டு அட்ரஸை சொல்லு"
"எல்லாம் எனக்குத் தெரியும்"
"அதெல்லொம் கிடையாது, ஒரு தடவை சொல்லு"\
"ஏண்டி என்னைத் தொந்தரவு செயயரெ?"
"உனக்கு தெரியாது அம்மா,துளி தப்பாச் சொன்னாலும் கிடைக்காது அம்மா,ரொம்ப க்வனமாக இருக்கணும்"
"சரிடி,சொல்லரேன். அட்ரஸை சொன்னேன்.
"சரியாக உள்ளது, இன்னிக்கு இது போதும்,நாளைக்கு மறுபடியும் கேட்பேன், ஞாபகம் வைத்துக் கோள்ளவேண்டும்,என்ன சரியா"
.......

மறுநாளும் காலையில் வழக்கம் போல் என் பெண் ஸ்கைப்பில் கூப்பிட்டாள்.எல்லா விஷயங்களைப் ப்ற்றிப் பேசிவிட்டு நேற்றைய தினம் விட்ட இடத்திற்கே வந்தாள்.
"என் வீட்டுக்காரர் அனுப்பிய விஷ்யங்களை ப்த்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்..அவர் வேலை பார்க்கும் விவரங்கள் எல்லாம் கேட்பார்கள்.எனவே அவற்றை ஒரு தடவைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்
"எல்லாம் சரிடி,நாங்கள் என்ன படிக்காதவர்களா? உன் அப்பா ஒரு கல்லூரியில் வேலை பார்த்து விட்டு ரிடையர் ஆனவர்,நானோ கல்லூரியில் வேலை பார்க்கிறேன்.என்ன சின்னக் குழந்தைகள் மாதிரி சொல்கிறாய்' என்று அவளைக் கோவித்துக் கொண்டேன்
நேர் காணல் காண்பத்ற்கான நாள் நெருங்க நெருங்க எனக்கு ப்யம் பிடித்துக் கொண்டது."என்மகள் அபி" படத்தில் வரும் கதா பாத்திரம் பிரகாஷ்ராஜ் மாதிரி, நானும் எனது வீட்டுக்காரரும் எந்நேரமும் இதைப் பற்றியே சிந்தித் கொண்டிருந்தோம்.ஏதாவது தப்பு செய்து பெண்ணிடம் வாங்கிக் கட்டிக் கொள்வோமோ என்ற பயம் வேறு ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த்து.அது சரி, இவள் எதற்காக இத்தனை பீடிகை போடுகிறாள்? என்று நினைக்கின்றீகளா.காரணம் உள்ளது,அதைக் கடைசியில் சொல்கிறேன்.
...............
இன்றைய தினம் மாலை 2 மணிக்கு நேர் காணல்.அதற்கு வசதியாக என் உறவினர் வீட்டில்த் தங்கிக் கொண்டோம்.அவர்க்ளே அவர்கள் காரில் நேர் காண்ல் நடைபெறும் இடத்திற்குக்
கொண்டு விட்டனர் இன்ட்ர்வியு நடைபெறும் இடத்தில் என்ன இவ்வளவு கூட்டம் எனத் திகைத்து விட்டோம்,அப்புறம் தான் தெரிந்த்து ஒவ்வொரு அரைமணிக்கும் பல பேர்களுக்கு இன்டர்வியு ந்டக்கவுள்ளது என்பது.எல்லொரையும் வரிசையாக உட்கார வைத்த்னர்.
எங்க்ள் நேரமும் வந்தது இருவர் பெயரையும் கூப்பிட்ட்னர்.எல்லொ கடவுளையும் வேண்டிக்கொண்டுஇன்ட்ர்வியு அதிகாரி முன் போய் நின்றோம்.
"Hello.R you Mr.krishnamoorthy and Mrs.Krishnamoorthy?"
"நீங்கள் தானே மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மிஸ்ஸ கிருஷ்ண்முர்த்தி"
என்று ஆங்கில்த்தில் வினவினார்.
"ஆம்",என்று எனது கணவர் ஆங்கிலத்தில் பதில் அளித்தார்
எல்லாக் கேள்விகளுக்கும் நாஙகள் தயாராக இருந்தோம்.
நிறையக் கேள்விகள் கேட்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு அடுத்த கேள்விக்குத் த்யாரானோம்.
அங்கு தான் க்ளைமாக்ஸ.
இது வரையில் எல்லொருக்கும் பல ச்ந்தேகங்கள் வந்திருக்கும்.இவர்கள் என்ன வேலைக்குப் போகப்போகிறார்கள்.இந்த வயதில் அவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும்,ஏற்கனவே இவர்களில் ஒருவர் கல்லூரிப்பேராசிரியராகப் பணிபுரிந்து ரிடையர் ஆனவர்.ம்ற்றொருவர் கல்லூரியில் வேலைபார்க்கிறார்.என்ன இவர்கள் 'இன்டர்வியு' என்று கதை சொல்கிறார்களா என்றுச் சொல்லத் தோன்றுகிறதா."ஆம்" "இன்டர்வியு" என்பது உண்மைதான்,ஆனால் வேலை என்று எங்காவது சொன்னேனா?விஷ்யத்திற்கு வருவோம்.
"give your passports"என்று அதிகாரி கூறிய உடன் தான் மீண்டும் சுயநினைவுக்கு வந்தோம்.
எங்கள் பேப்பர்களை எல்லாம் பார்த்துவிட்டு "oh,you are retired from a college? what is your pension?."என்று என் கணவரைப் பார்த்துக் கேட்டார்.
என் கணவர் பதில் கூறியதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டார்.
"ok,Best of luck".வேறு ஏதேனும் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது"next". அடுத்த ந்பரைக் கூப்பிட ஆரம்பித்தார்,எங்களுக்கோ ஆச்சர்யம்,"இவ்வளவுது தானா கேள்விகள்?" என்று.பிரகாஷ்ராஜ் கதைதான் போங்கள்
"எத்தனை நாட்கள் கஷ்ட்ப்பட்டு தயாரித்தோம்,ஒரு கேள்விகள் கூடக் கேட்கவில்லையே என்று பேசிக் கொண்டே வெளியில் வந்தோம்அருகில் உள்ள் பென்ச்சில் அமர்ந்து இருந்த நபர் எங்களைப் பார்த்து,"உங்கள் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டார்கள் என்றால் உங்களுக்கு விசா நிச்சயம் என்று அர்த்தம் மகிழ்ச்சியாகப் போங்கள் " என்றார்.
அப்போது தான் மூச்சு வந்த்து.ஆம்,இரண்டு நாட்களிள் எங்கள் வீடு தேடி அமெரிக்கா செல்வதற்கான விசா வந்தது.அப்போதுதான் நாங்கள் நிம்மதியானோம்.இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும்,இதுவரை நான் சொன்னது அமெரிக்கா செல்ல விசா பெறுவதற்கான இன்டர்வியுக்கு த்யார் செய்த விவரம் என்பது.


"

ஞாயிறு, ஏப்ரல் 4

தாமஸ் எடிசன்'ச பிரஸ்ட் phonograph

தாமஸ் எடிசன் அவர்களின் முதல் ஆடியோ போனோக்ராப் இன் ஒளிப்பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது