புதன், ஏப்ரல் 21

தாமஸ் ஆல்வா எடிசன்
ஆய்வகத்தில் ஒரு நாள் :
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன் . மின்சாரம் இல்லாத ஒரு நாளை நினைத்துப் பாருங்கள்.
குளிக்கும் இடத்தில் இருந்து படுக்கை அறை வரை மின்சாரம் இல்லாமல் இருந்து பாருங்கள். முடியுமா? முடியாது.சமையல் அறையில் மின்சாரம் இல்லாவிட்டால் என்ன ரகளை நடக்கும் பாருங்கள்.இரவு ஒருநாள் மின்சாரம் இல்லாமல் தூங்க முடியுமா? சிறிது சிந்திப்போம்.
என்ன? இத்தனை பீடிகை போடுகிறானே என்று யோசிக்கின்றீகளா. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான்.நமக்கு மிக முக்கியமான மின்சார பல்பு ,பாடக்கூடிய கருவி மற்றும் பலவற்றையும் கண்டுபிடித்து உலகப் புகழ் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வகத்திற்கு ஒருநாள் மாலைப் போது சென்றிருந்தேன், அதைப் பற்றிய படைப்பு தான் இது.
தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புக்களில் பல்பு, போனோகிராப் மற்றும் நகரும் சினிமா படம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன .அவர் 1947 -1931 வரையான ஆண்டுகளில் .இருந்து மேற்கண்ட கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினார் அவரின் ஆய்வகத்தில் ஒருநாள் நாங்கள் குடும்பத்தினருடன் சென்றிந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் ஆகும்
அவரின் 84 வருட காலத்தில் 1093 பொருட்களுக்கு பேடண்ட் வாங்கி இருந்தாராம் என்றால் பாருங்கள் அவருடைய காலத்தில் அவர் மிகப் பெரிய தயாரிப்பாளராகவும், அவர் கண்டுபித்தவைகளை விற்பவராகவும் விளங்கி இருந்தாராம். படிப்பு சரியாக வரவில்லை என்ற காரணத்தினால் 1859 ம ஆண்டு ட்ட்ராயிடு நகரில் நாளிதழ்களை விற்கும் பையனாக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கி, வேதியல் ஆராய்சிக் கூடம் மற்றும் அச்சுக்கூடம் போன்றவைகளை நிறுவினாராம் 12 வயது ஆகும் போது காதுகேட்காமல் இருந்தும், அதைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய சிந்தனையை ஆராய்ச்சியில் செலுத்தி இருப்பதை அவருடைய ஆய்வகத்தைப் பார்த்தாலே புரியும் ஆய்வகத்தின் சில போடோக்களை இங்கே கொடுத்துள்ளேன் 1877 ல் கிரகாம் பெல் தயாரித்த தொலைதொடர்பு அனுப்பி மாதிரியைப் பயன்படுத்தி வேகமாக நகரக்கூடிய தகரப் பேப்பரின் மேல் ஒரு ஊசியைப் பயன்படுத்தி தன்னுடைய குரலை "mary had a little lamb" என்ற பாடலை பதிவு செய்து பின்னர் அதனைப் பாடும் படியும் செய்தார் . இவ்வாறு போனோக்ராப் என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.அது தற்போது கூடப் பாடிக்கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். (பார்க்க படம்)


http://picasaweb.google.com/krishnalakshmi48/ThomasEdisonSLab?feat=directlink


1878 ல் கார்பன் கம்பியைப் பயன்படுத்தி நீண்ட நாட்களுக்கு எரியும்படியான மின்விளக்கைக் கண்டுபிடித்தார். அதனைக் காண பல இடங்களில் இருந்தும் மக்கள் வந்து பார்வை இட்டனராம். நமக்கு மிக முக்கியமான கண்டுபிடிப்பு அல்லவா! 1888 - ல் நகரக்கூடிய (சலன) படத்தைக் கண்டுபிடித்தாராம். இவைகளை எல்லாம் அவருடைய நியூ ஆரஞ் (நியூ ஜெர்சி ) அமெரிக்காவில், மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார்கள். அவைகளைப் பார்க்கும் போது பிரமிப்பும் ஆச்சர்யர்மும் உண்டாகின்றன. மிகப் பெரிய கனடுபிடிப்பாளர் வாழ்ந்த மற்றும் அவருடைய ஆய்வகத்தையும் பார்வையிடக் கிடைத்தது எங்களுக்கு மிகவும் பாக்கியம் ஆகும் நீங்களும் நேரம் கிடைத்தால் ஒரு தடவை பார்த்து அவருக்கு மரியாதையை செய்து விட்டு வாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக