புதன், நவம்பர் 29

அகோபிலம் பகுதி 6

அகோபிலம் பகுதி 6
ஜ்வாலா நரசிம்மர் சன்னிதிக்குப் போவதற்கான எல்லா முஸ்தீபுகளையும் செய்து கொண்டு மேல அகோபில சன்னிதி பக்கத்தில் உள்ள மரப்பாலத்தின் வழியே இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டு மேலே ஏறத்தயாரானோம் என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேன்.
மேலே ஏற குறைந்தது இரண்டு மணி நேரமாகும், திரும்பி வர இரண்டு மணி ஆகும் என்று பக்கத்தில் சென்று கொண்டிருப்பவர்கள் சொல்வது காதில் விழுந்தது. நாங்கள் மேலும் கீழும் பார்த்தோம்.
சுற்றுமுற்றும் பார்த்தோம். இந்த நேரத்திலேயே இப்படி இருளாக இருந்தால், திரும்பி வரும்போது பாதை தெரியுமா, என்று எங்களுக்கள்ளேயே கேட்டுக்கொண்டோம்.
இது சரிப்பட்டு வராது, பின்னர் பாத்துக்கலாம், என்று எங்களுக்கள்ளேயே பேசி தீரமானித்தோம்.

வாங்கிய கோல்களை திரும்பக் கொடுத்துவிட்டு பஸ்ஸை நோக்கி ஆட்டோவில் பயணமாகி பஸ் இருக்கும் இடத்தை நோக்கிப் பயணமானோம்

இதற்கு நடுவில் எங்களைத் தவிர மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதை சிந்துக்கத் தவறிவிட்டோம். பஸ் அருகில் வந்து பார்த்தால், எங்களுக்கு ஒரே ஷாக்!!!
எங்களைத்தவிர ஒருவர் கூட பஸ்ஸுக்கு வந்து சேரவில்லை!!!
ஏற்கனவே என் மனைவி எங்க டூர் போனாலும் பஸ்ஸுக்கு முன்னால வந்து உட்காறுவது நீங்களாத்தான் இருக்கும், ன்னு சொல்லுவாங்க,அதே போல ஆகிவிட்டது.
என்னடா நமக்கு வந்த சோதனை?
தூரத்தில் எங்கள் வாலண்டியர்கள் மட்டும் ஒரு மரத்தடியில் அமர்ந்து மேசிக்கொண்டிருந்தனர். அவர்களை அணுகி, எப்ப பஸ்ஸை கிளப்புவீரகள? என வாலண்டியரைக் கேட்டோம்.
நீங்களே பாத்திங்கள்ள, உங்களைத் தவிர ஒருத்தரக் கூட காணோம், எல்லோரும் வந்த பிறகு பஸ்ஸ எடுப்போம், என்று கறாறாக கூறிவிட்டு மீண்டும் நண்பருடன் பேசத் தொடங்கிவிட்டார்.
நாங்க அகோபிலத்துல இரண்டு நாள் தங்கப்போறோம், நவ நரசிம்மர் கோயிலையும் அதுக்குள்ள பாரத்தாகவேண்டும், இங்கேயே அரைநாள் ஆகிவிட்டது, கீழே இருக்கும் மற்ற மூன்று நரசிம்மர் ஸ்தலங்களையாவது இன்றைக்குள் பாரத்துடுவோம்ன்னு நினைச்சா, பஸ் எல்லோரும் வந்தாத்தான் கிளம்பும் சொன்னா, எப்படியிருக்கும்?
இதுதான் இந்த மாதிரி டூர் போவதுல சிரமம்.
என்ன செய்யலாம்?
உடனே நாங்க எட்டு பேரும் உடனே ஒரு ஆட்டோக்கார்ரை பிடிச்சோம்.
கீழே உள்ள யோக நரசிம்மர் மற்றும் ஷத்ரவட நரசிம்மர் மற்றும் பார்க்கவ நரசிம்மர் ஸன்னிதிகளை காணபிக்கமுடியுமா? என வினவினோம்.
பாக்கவ நரசிம்மர் சன்னிதி பார்க்க நேரம் இருக்குமான்னு தெரியல, மற்ற இரு நரசிம்மர் சன்னிதிகளை பார்க்கலாம்,, எனத் தெலுங்குல சொன்னாரன்னு நாங்க நினைச்சுக்கிட்டு ஆட்டோவில் ஏறினோம்.சரியான நேரத்துக்கு ஷத்ரவட நரசிம்மர் சன்னிதியில் கொண்டுவந்து நிறுத்தினார்.

அரச்சகரும் எங்களுக்காகவே காத்திருந்து, வாருங்கள், வாருங்கள் என்று அழைத்தார். பெருமாள் பெயரில் ஒரு அர்ச்சனையை செய்து கொண்டோம். ஏற்கனவே நேரமாகி விட்டதால், அவரிடமே, யோக நரசிம்மர் சன்னிதி திறந்து இருக்குமா, என்று வினவினோம். ஏனெனில் யோக நரசிம்மர் சன்னிதி ஷத்ரவட நரசிம்மர் சன்னிதிக்கு எதிரில் சிறிது தொலைவில் தான் உள்ளது.
உங்க ராசி எப்படியோ, அதுக்குத் தகுந்த மாதிரி தான் இருக்கும், ஏன்னா எனக்கே நாழியாகி விட்டது, உங்களுக்காகத் தான் இருக்கேன், சொல்லிவிட்டு, கிளம்புங்கோ ன்னு சொல்லாத குறையா, சன்னிதி கதவச் சாத்தறதுலேயே குறியா இருந்தார்.
உடனே எல்லோரும் ஆட்டோவுல ஏறி, யோகானந்த நரசிம்மர் சன்னிதிக்கு போகலாம் என்றோம்.
கிட்டத்தட்ட 1400 பேர் அன்றைய தினமும் மறுநாளும் அகோபில நவ நரசிம்மர் ஸன்னிதிகளை தரிசிக்க இருக்கும் நிலையில், கோயில் பட்டரகள் அன்று ஒருநாள் மாலை வரை இருந்திருந்தால், எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பாரகள்.
யோகானந்த நரசிம்மர் ஸன்னிதி ஷத்ரவட நரசிம்மர் ஸன்னிதிக்கு அருகாமையில் தான் உள்ளது. அங்கு ஒரு தனியார் ஆஸ்ரமம் உள்ளது.அங்கு எல்லா நரசிம்மர்களுக்கும் விக்கிரஹங்கள உள்ளன. அருமையாக உள்ளன. நவ நரசிம்மர் ஸ்தலங்களையும் தரிசிக்க முடியாதவர்கள் இங்கே தரிசித்துக்கொண்டு திருப்தியடையலாம்.  அதனை தரிசித்துக் கொண்டு எதிரே உள்ள யோகானந்த நரசிம்மரைப் பார்க்கப்போனால், ஸன்னிதி கதவு சாத்தியிருந்தது. ஆம், ஒரு மணிக்கு மேல ஆகிவிட்டபடியால் அரச்சகரும் கிளம்பிச் சென்றுவிட்டார். மீண்டும் 4 மணிக்குத் தான் திறப்பாரகளாம். எங்களுக்கு கொடுத்துவைக்கவில்லை, அவ்வளவு தான், என்று திருப்திபட்டுக்கொண்டு, ஆட்டோவில் ஏறி மதிய ஆகாரம் கொடுக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
1400 பேருக்கு ஆகாரம் தயாரிப்பது என்றால் சும்மாவா? அதைவிட அதனைப் பரிமாறுவது என்பது எவ்வளவு சிரமம்?
இதற்கென ஸ்வாமிகள் செய்திருக்கும் ஏற்பாடு என்ன?
உங்களுக்கு சாப்பாடு கிடைத்ததா?

பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!!!

பகுதி 5 அகோபிலம்

பகுதி 5
கரஞ்ச நரசிம்மர் ஸன்னிதியில் இருந்து மேல அகோபிலம் நோக்கி நடையைக் கட்டினோம் என்று போன பகுதியில் முடித்து இருந்தேன்.
எங்க நடக்கிறது?
ஆபத் பாந்தவனா நமக்கு தான் ஆட்டோககாரர்,இருக்காரே. ஆளுக்கு 10 ரூபாய் என பேசி, ஏறி உக்காந்தோம்.
இதோடு சரிங்க, இதுக்கு மேல நீங்க நடந்து தான் போகணும், என்று எல்லோரையும் இறக்கிவிட்டுட்டு அடுத்த சவாரியப் பாக்கப் போய்விட்டார் ஆட்டோ ஓட்டுனர்.

இறக்கி விட்ட இடத்தில் இருந்து மேல அகோபில ஸன்னிதி 15 நிமிஷமாவது மலையில ஏற வேண்டும். 
சுற்றிலும் ரம்மியமான சூழ்நிலை. நடந்து போவது தெரியாமல் பேசிக்கொண்டே மலை ஏறி ஸன்னிதியை அடைந்தோம்.
இவர் ஸ்வயம்பு மூர்த்தியாக மலைக் குகையின் உட்பாறையில் புடைப்பு சிற்ப வடிவில் இருப்பாராம். இந்த குகைக்கோயில் எழுந்தருளியிருக்கும் நரசிம்மப்பெருமானே இந்த திவ்ய தேசத்தின் ப்ரதான மூர்த்தியாகும். வேடுவர்களின் குலதெயவமான ஶ்ரீமஹாலக்‌ஷமி, ஶ்ரீசெஞ்சுலக்‌ஷ்மி என்ற திருநாமத்துடன் கரப்பகிரஹத்தின்அருகே இடைகழியில் கோயில் கொண்டுள்ளார்.
என்னமோ இழுக்குறீங்களே, ஏன் நீங்க பாக்கலையா,
காதுல விழறது.
கோயில் புனருத்தாரணம் செய்வதற்காக மூலவர் சன்னிதி சாத்தியுள்ளாரகள், அதனால உற்சவரை மட்டும் பார்த்துவிட்டு, நப்பாசையால் ஜ்வாலா சன்னிதி போகலாமா என்று நினைத்து மேலே ஏற தீர்மானித்தோம். பக்கத்தில் கடையில் இரு பெண்மணிகள், ஒரு கோல் 10 ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள் மலை மேலே ஏறுவதற்கு ஊன்றுகோலாக இருக்கும் என்பதனால், ஆளுக்கு ஒன்று வாங்கிக்கொண்டோம்.
முஸ்தீபு எல்லாம் பலமாத்தான் இருந்தது
மேலே ஏற கோயிலின் அருகே உள்ள மரப்பாலத்தின் வழியே நடக்க ஆரம்பித்தோம்.
அங்கே பாருங்கள், எவ்வளவு அருமையா அருவி ஓடிக்கொண்டிருக்கு!!!
ஆஹா, எத்தனை பேர் அருவியில் ஆனந்தமாக நீராடிக்கொண்டிருக்கிறாரகள்.
இறங்கி நீராடலமா? எல்லோருக்கும் ஆசைதான், ஆனா மாத்து துணி இல்லையே. ஆசைய அடக்கிகிட்டு, மேலே பார்த்தோம். அடர்ந்த காடு, இருட்டு, இவையெல்லாம் எங்களை ஒரு கணம் சிந்நிக்க வைத்தது.
ஜ்வாலா நரசிம்மர் ஸன்னிதியை பார்த்து விட்டு திரும்பி வரும் போது நிச்சயம் இருட்டிவிடும்.
என்ன செய்யலாம்?
பாரப்போமா அடுத்த பகுதியில்!!!!!!
அகோபிலம்.ஆந்திரப்பிரதேசத்தில்
நரசிம்ம ஷேத்ரம் அகோபிலம். “திருச்சிங்கவேள் குன்றம்திருமங்கையாழ்வார் அவர்களால் 10 பாசுரங்களால் பாடபட்ட 108 திவயஷேத்ரங்களில் முக்கியமான ஒன்றாகும். பக்தன்

பிரஹலாதனின் நம்பிக்கையை, எங்கும் உளன் கடவுள் என்ற உண்மையை மெய்ப்பிக்கும் வகையில் தூணை பிளந்து காட்சி அளித்த இடம் அகோபிலம் ஆகும்.
கருடன் தவம் புரிந்ததால் கருடாசலம் என்றும், வேதங்களை மீட்டுக் கொடுத்ததால்வேதாசலம்என்றும் அழைக்கப்படுகிறது. பல புராணங்களிலும் அகோபிலம் பற்றி பேசப்பட்டிருக்கிறது.
அகோபிலமடத்தை ஸ்தாபித்த ஸீஆதிவண்சடகோப ஜீயர் ஸ்வாமிகள் இந்த ஊரில் இருந்து தான் அகோபில மடத்தை ஸ்தாபித்துள்ளார். அகோபிலத்தில் நவநரசிம்மருக்கும் ஸந்நிதிகள் உள்ளன
1.பிரஹலாத வரத நரஸிம்ம பெருமாள்


1. மலையடிவாரத்தில் உள்ள ப்ரஹலாத வரதஶ்ரீலக்‌ஷ்மிநரசிம்மர் கிழக்கு நோக்கிய கோயில்.
 2.   ஶ்ரீபாரக்கவ நரசிம்மர் பெருமாள்.

ப்ரஹலாத வரத நரசிம்மர் பெருமாள் கோயிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பார்க்கவ நரசிம்மர் கோயில் உள்ளது. பாரக்கவராமர் எனப்படும்  பரசுராமர் நரசிம்ம பகவானைக் காண தவம் செய்த இந்த இடத்தில் பாரக்கவராமனாகிய பரசுராமனுக்கு காட்சி அளித்த சிங்கபிரான் பார்க்கவ நரசிம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

1.   3. யோகானந்த நரசிம்மப் பெருமாள்.

கீழ் அகோபிலத்திலிருந்து தென்கிழக்கே 2.5 கிலோமீட்டர் தொலைவில் 

ப்ரஹலாதனுக்கு பல்வேறு யோகநிலைகளை கற்பிக்கும் முறைகளை 

சொல்லிக்கொடுக்கும் நிலையில் அமைந்துள்ளார் யோகானந்த நரசிம்மர்

 4.  சத்ரவட நரசிம்மர் சன்னதி.

யோகானந்த நரசிம்மர் சன்னிதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது 

சத்ரவட நரசிம்மர் சன்னிதி.ஹாஹா மற்றும் ஹூஹூ என்ற இரு 

கந்தர்வர்கள்இவரை தரிசித்து பாடல்கள் பாடியுள்ளனர். 

சத்ரவட நரசிம்மர் சன்னிதி

5. மேல அகோபில நரசிம்மர் பெருமாள்.
   கீழகோபிலத்தில இருந்து 8
  கிலோமீட்டர் தொலைவில் ஸ்வயம்பு
  மூர்த்தியாக மலைக்குகையின் உட்பாறையில்
  புடைப்பு சிற்ப வடிவில் கரப்பகிரஹத்தில்
  காட்சியளிக்கிறார். வேடுவர்களின் குலதெயவமான ஶ்ரீசெஞ்சுலக்‌ஷ்மி என்ற திருநாமத்துடன் மஹாலக்‌ஷ்மி கோயில் கொண்டுள்ளார்]


6. காரஞ்ச நரசிம்மர் பெருமாள்.
 மேல அகோபிலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.காரஞ்ச மரத்தின் கீழ், ஒரு திருக்கரத்தில் சாரங்கம் எனும் வில்லும் மறு கரத்தில் ஸுதர்ன சக்கரத்தையும் தரித்துக்கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார்

.7. ,ஶ்ரீக்ரோட நரசிம்மர் கோயில்.
  மேல அகோபிலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இவர் சேவை சாதிக்கிறார். க்ரோட என்றால் வராகம் எனப்படும். பெரிய பிராட்டியுடன் வராக வதனத்துடன் சேவை சாதிக்கிறார்

 
8.. மாலோல நரசிம்மர் சன்னதி.
 மேல அகோபிலத்தில் இருந்து மலை மேல செல்லும் போது க்ரோட நரசிம்மர் சன்னதியில் மேல படி ஏறினால் மாலோல நரசிம்மர் பெருமாளை தரிசிக்கலாம். ஶ்ரீமஹாலக்‌ஷமி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இவரின் உற்சவரை ஶ்ரீமத் அகோபில மடத்தை ஸ்தாபித்த ஜீயர் ஸ்வாமிகளின் நித்ய திருவாரதனத்தில் இன்றளவும் சேவிக்கலாம்.

  

9.. ஶ்ரீபாவன நரசிம்மர் சன்னிதி.
மேல அகோபில சன்னிதியின் பின்பக்கம் 250 படிகள் ஏறி பின்னர் 6 கிலோமீட்டர் ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றால் ஶ்ரீபாவன நரசிம்மர் கோயிலை அடையலாம் 
மாற்றாக கீழ் அகோபிலத்தில் இருந்து டிராக்டர் அல்லது ஜீப்பில் 2 மணி நேரம் பயணித்தால் ஶ்ரீபாவன நரசிம்மர் கோயிலை அடையலாம். அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைந்துள்ளது

10.. ஜ்வாலா நரசிம்மர் கோயில்.
மேல அகோபிலத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் அடர்ந்த கானகத்திறகிடையே, க்ரோட நரசிம்மர் சன்னிதியைத் தாண்டி ஆற்றின் ஓரமாகமே மேலே பயணித்தால், ஜ்வாலா நரசிம்மர் சன்னிதியைத் அடையலாம். வயதானவர்கள் ஏறுவது சிரம்ம். இங்கு தான் ஹிரணயகசிபுவினை தன் மடியில் கடத்தி தன் இரு கரங்களால் நகத்தினைப் பயன்படுத்தி குடலை உருவிய  கோலத்தில் காட்சி அளிக்கிறார்


இவை தவிர உக்ர ஸ்தம்பம் என்ற உயரமான தூண் போன்ற அமைப்பு பாரக்கத் தூண்டும். இங்கு தான் நரசிம்மர் தூணைப் பிளந்த இடம் என்றும் சொல்கிறார்கள்.
இவைகளை அகோபிலத்தில் பாரக்கத் தவறாதீர்கள்.


ராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.4


ராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.
சென்ற பகுதியில் கல்யாண மண்டபத்தில் குளித்துவிட்டு அகோபிலத்தை நோக்கி புறப்பட்டோம் என்ற அளவில் நிறுத்தியிருந்தேன்.
அகோபிலத்தில் என்னென்ன பார்க்க வேண்டும் என்றும் எழுதியிருந்தேன். அகோபிலம் முழுமையாகப் பார்க்க இரண்டு நாடகளாவது வேண்டும். நாங்களோ குளித்து ஆகாரம் எல்லாம் முடிக்க பகல் 11 மணி ஆகிவிட்டது. அல்லகட்டா ஊரில் இருந்து அகோபிலம் போகவே ஒரு மணி ஆகிறது. போய் சேர்ந்தவுடன், எங்கள் வாலண்டியர், நீங்கள் உடனே மேல அகோபிலம் சென்று தரிசித்துவிட்டு, ஜ்வாலா நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்று ஸ்வாமிகள்   சொல்லியிருக்கிறாரகள், என்றார்.
க்ரோடநரசிம்மர்
எங்கள் எல்லோருக்கும் பயங்கர கோபம். ஏற்கனவே கடப்பாவில இருந்து கிளம்பும் போதே நாங்கள் வந்த பஸ் மட்டுமல்ல, எங்களுடன் வந்த ஐந்து பஸ்களும் (நாங்கள் ஐந்து பேரும்  ஒன்றாகத்தான் போவோம் டிரைவர் அடம் பிடித்தது தனிக்கதை) அல்லகட்டா ஊரைக் கண்டுபிடித்து வந்து சேரவே அதிக நேரம் எடுத்துக்கொண்டதில் கடுப்பை உண்டாக்கியிருக்கும் வேளையில், இந்த மாலை வேளையில், ஜ்வாலா நரசிம்மரை பார்த்துவிட்டு வா என்றால், எப்படியிருக்கும். ஏன்னா, ஜ்வாலா நரசிம்மர் போய்ச் சேரவே இரண்டு மணி நேரம், சாதாரணமாக நடந்தாலே ஆகும்போது, அடர்ந்த காட்டுக்குள் போய்விட்டு திரும்புவதற்குள் இரவு வந்துவிடும், காட்டில் வழிதெரியாமல் திண்டாட வேண்டியிருக்கும் என்பதால், எங்கள் குருப்பில் உள்ள யாரும் ஜ்வாலா நரசிம்மரைப் பார்க்க போகவேண்டாம் எனத் தீரமானித்தோம். சரி, மேல அகோபில நரசிம்மரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைக்கும் வேளையில் பஸ் நின்றது.
க்ரோடநரசிம்மர் சன்னிதி
இதோடு பஸ் எல்லாம் நின்றுவிடும், இதற்கு மேல எல்லோரும் நடந்து செல்லுங்கள், என்று எங்கள் வாலண்டியர் சொல்லவே, இறங்கிப் பார்த்தால், நாங்கள் நின்ற இடம் ஶ்ரீக்ரோட நரசிம்மர் ஆலய வாசல்.
(இவரைப்பற்றி முன்னரே பார்த்து இருப்பீர்கள்)
இங்கிருந்து மேல அகோபிலம் நடந்து செல்ல ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும் என்பதால், (இதற்குள் ஒரு சிலர் க்ரோட நரசிம்மரை பார்ப்போம்என்றும், ஒரு சிலர் வேண்டாம் என்றும் சொல்லி முடிவு எடுப்பதற்குள்,அரைமணி நேரம் ஆகிவிட்டது)

க்ரோட நரசிம்மரை தரிசித்துவிட்டு, மேல அகோபிலம் நோக்கி நடையைக் கட்டினோம்.

ராமானுஜ அனுயாத்ரா பகுதி 3 அகோபிலம்

ராமானுஜ அனுயாத்ரா பகுதி 2
 அகோபிலம்
சென்ற பகுதியில் நாங்க பஸ்ல கடப்பாவில் இருந்து அகோபிலம் போறோம்ன்னு நினைச்சுண்டு இருக்கோம்ன்னு முடிச்சேன். ஆனா நாங்க போனது, வழியிலே இருக்கிறஅல்லகடாஅப்படீங்கிற ஊர். அகோபிலத்தில் இருந்து 25 கிலோமீட்டர் முன்னாலேயே உள்ள ஊர்
எங்க பஸ் வாலண்டியர் (ஒவ்வொரு பஸ்ஸுக்கும் இரண்டு பேர் வருவாங்க, அவங்க சொல்லறதான் நாங்க கேட்கணும்)
எல்லோரும் கீழே இறங்கி குளிச்சுட்டு காலை உணவு எடுத்துக்கொண்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிக்கொள்ளுங்கள், அகோபிலம் போய் எல்லா இடங்களையும் பார்ப்போம்என்றுசொல்லி விட்டு நாங்கள் ஏதும் கேள்வி கேட்பதற்கு முன்னறே கீழே இறங்கிச் சென்று விட்டார்.
கீழே இறங்கிப் பார்த்தால் கல்யாண மண்டபம். இதற்கு முன்னறே வாலண்டியர்,”எல்லா பெட்டிகளையும் இறக்கக்கூடாது, மாற்றுத் துணிகளை மட்டும் தான் எடுத்துக் கொள்ளவேண்டும்என்று ஆணையிட்டுவிட்டார்.
உள்ளே குளிக்கப் போனால், ஆச்சர்யம்.ஆம், ஏற்கனவே ஐந்து பஸ்களில் இருந்து இறங்கிய 200 பேர்களுக்குமேல், உள்ள நண்பர்கள் பாத்ரூமுக்கும் குளியல் அறைக்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள் என்றால் பாருங்கள்.
 கல்யாண மண்டபத்தில் மொத்தமே நாலு பாத்ரூம்தானாம். சரிதான், எப்ப நாங்க ஸ்நாநம் பண்ணி பெருமாளை சேவிக்கப்போறோமோ தெரியல. ஒருவழியா  காலைக்கடன் களை முடித்து விட்டு  டிபனையும்     முடித்துக்கொண்டு   பஸ் ஏறி அகோபிலம் நோக்கிப் பயணமானோம்.
உங்களுக்கு எங்க தங்க அறைகள் கொடுத்தார்கள், நீங்க கேட்கிறது காதுல விழறது. பொறுங்க சொலறேன்.
அங்கு என்ன பார்த்தோம்,

பார்ப்போம் அடுத்த பகுதியில்.