புதன், நவம்பர் 29

பகுதி 5 அகோபிலம்

பகுதி 5
கரஞ்ச நரசிம்மர் ஸன்னிதியில் இருந்து மேல அகோபிலம் நோக்கி நடையைக் கட்டினோம் என்று போன பகுதியில் முடித்து இருந்தேன்.
எங்க நடக்கிறது?
ஆபத் பாந்தவனா நமக்கு தான் ஆட்டோககாரர்,இருக்காரே. ஆளுக்கு 10 ரூபாய் என பேசி, ஏறி உக்காந்தோம்.
இதோடு சரிங்க, இதுக்கு மேல நீங்க நடந்து தான் போகணும், என்று எல்லோரையும் இறக்கிவிட்டுட்டு அடுத்த சவாரியப் பாக்கப் போய்விட்டார் ஆட்டோ ஓட்டுனர்.

இறக்கி விட்ட இடத்தில் இருந்து மேல அகோபில ஸன்னிதி 15 நிமிஷமாவது மலையில ஏற வேண்டும். 
சுற்றிலும் ரம்மியமான சூழ்நிலை. நடந்து போவது தெரியாமல் பேசிக்கொண்டே மலை ஏறி ஸன்னிதியை அடைந்தோம்.
இவர் ஸ்வயம்பு மூர்த்தியாக மலைக் குகையின் உட்பாறையில் புடைப்பு சிற்ப வடிவில் இருப்பாராம். இந்த குகைக்கோயில் எழுந்தருளியிருக்கும் நரசிம்மப்பெருமானே இந்த திவ்ய தேசத்தின் ப்ரதான மூர்த்தியாகும். வேடுவர்களின் குலதெயவமான ஶ்ரீமஹாலக்‌ஷமி, ஶ்ரீசெஞ்சுலக்‌ஷ்மி என்ற திருநாமத்துடன் கரப்பகிரஹத்தின்அருகே இடைகழியில் கோயில் கொண்டுள்ளார்.
என்னமோ இழுக்குறீங்களே, ஏன் நீங்க பாக்கலையா,
காதுல விழறது.
கோயில் புனருத்தாரணம் செய்வதற்காக மூலவர் சன்னிதி சாத்தியுள்ளாரகள், அதனால உற்சவரை மட்டும் பார்த்துவிட்டு, நப்பாசையால் ஜ்வாலா சன்னிதி போகலாமா என்று நினைத்து மேலே ஏற தீர்மானித்தோம். பக்கத்தில் கடையில் இரு பெண்மணிகள், ஒரு கோல் 10 ரூபாய் என்று விற்றுக்கொண்டிருந்தார்கள் மலை மேலே ஏறுவதற்கு ஊன்றுகோலாக இருக்கும் என்பதனால், ஆளுக்கு ஒன்று வாங்கிக்கொண்டோம்.
முஸ்தீபு எல்லாம் பலமாத்தான் இருந்தது
மேலே ஏற கோயிலின் அருகே உள்ள மரப்பாலத்தின் வழியே நடக்க ஆரம்பித்தோம்.
அங்கே பாருங்கள், எவ்வளவு அருமையா அருவி ஓடிக்கொண்டிருக்கு!!!
ஆஹா, எத்தனை பேர் அருவியில் ஆனந்தமாக நீராடிக்கொண்டிருக்கிறாரகள்.
இறங்கி நீராடலமா? எல்லோருக்கும் ஆசைதான், ஆனா மாத்து துணி இல்லையே. ஆசைய அடக்கிகிட்டு, மேலே பார்த்தோம். அடர்ந்த காடு, இருட்டு, இவையெல்லாம் எங்களை ஒரு கணம் சிந்நிக்க வைத்தது.
ஜ்வாலா நரசிம்மர் ஸன்னிதியை பார்த்து விட்டு திரும்பி வரும் போது நிச்சயம் இருட்டிவிடும்.
என்ன செய்யலாம்?
பாரப்போமா அடுத்த பகுதியில்!!!!!!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக