புதன், நவம்பர் 29

ராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.4


ராமானுஜர் அனுயாத்திரை 2 பகுதி.
சென்ற பகுதியில் கல்யாண மண்டபத்தில் குளித்துவிட்டு அகோபிலத்தை நோக்கி புறப்பட்டோம் என்ற அளவில் நிறுத்தியிருந்தேன்.
அகோபிலத்தில் என்னென்ன பார்க்க வேண்டும் என்றும் எழுதியிருந்தேன். அகோபிலம் முழுமையாகப் பார்க்க இரண்டு நாடகளாவது வேண்டும். நாங்களோ குளித்து ஆகாரம் எல்லாம் முடிக்க பகல் 11 மணி ஆகிவிட்டது. அல்லகட்டா ஊரில் இருந்து அகோபிலம் போகவே ஒரு மணி ஆகிறது. போய் சேர்ந்தவுடன், எங்கள் வாலண்டியர், நீங்கள் உடனே மேல அகோபிலம் சென்று தரிசித்துவிட்டு, ஜ்வாலா நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும் என்று ஸ்வாமிகள்   சொல்லியிருக்கிறாரகள், என்றார்.
க்ரோடநரசிம்மர்
எங்கள் எல்லோருக்கும் பயங்கர கோபம். ஏற்கனவே கடப்பாவில இருந்து கிளம்பும் போதே நாங்கள் வந்த பஸ் மட்டுமல்ல, எங்களுடன் வந்த ஐந்து பஸ்களும் (நாங்கள் ஐந்து பேரும்  ஒன்றாகத்தான் போவோம் டிரைவர் அடம் பிடித்தது தனிக்கதை) அல்லகட்டா ஊரைக் கண்டுபிடித்து வந்து சேரவே அதிக நேரம் எடுத்துக்கொண்டதில் கடுப்பை உண்டாக்கியிருக்கும் வேளையில், இந்த மாலை வேளையில், ஜ்வாலா நரசிம்மரை பார்த்துவிட்டு வா என்றால், எப்படியிருக்கும். ஏன்னா, ஜ்வாலா நரசிம்மர் போய்ச் சேரவே இரண்டு மணி நேரம், சாதாரணமாக நடந்தாலே ஆகும்போது, அடர்ந்த காட்டுக்குள் போய்விட்டு திரும்புவதற்குள் இரவு வந்துவிடும், காட்டில் வழிதெரியாமல் திண்டாட வேண்டியிருக்கும் என்பதால், எங்கள் குருப்பில் உள்ள யாரும் ஜ்வாலா நரசிம்மரைப் பார்க்க போகவேண்டாம் எனத் தீரமானித்தோம். சரி, மேல அகோபில நரசிம்மரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைக்கும் வேளையில் பஸ் நின்றது.
க்ரோடநரசிம்மர் சன்னிதி
இதோடு பஸ் எல்லாம் நின்றுவிடும், இதற்கு மேல எல்லோரும் நடந்து செல்லுங்கள், என்று எங்கள் வாலண்டியர் சொல்லவே, இறங்கிப் பார்த்தால், நாங்கள் நின்ற இடம் ஶ்ரீக்ரோட நரசிம்மர் ஆலய வாசல்.
(இவரைப்பற்றி முன்னரே பார்த்து இருப்பீர்கள்)
இங்கிருந்து மேல அகோபிலம் நடந்து செல்ல ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும் என்பதால், (இதற்குள் ஒரு சிலர் க்ரோட நரசிம்மரை பார்ப்போம்என்றும், ஒரு சிலர் வேண்டாம் என்றும் சொல்லி முடிவு எடுப்பதற்குள்,அரைமணி நேரம் ஆகிவிட்டது)

க்ரோட நரசிம்மரை தரிசித்துவிட்டு, மேல அகோபிலம் நோக்கி நடையைக் கட்டினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக