ராமானுஜா அனு யாத்ரா இரண்டாம் பகுதி.
வேளுக்குடி ஸ்வாமிகள் 2017, ஆயுத பூஜை அன்று ராமானுஜா அனு யாத்ரா இரண்டாம் பகுதியைத் துவக்கினார்.அதில் சுமார் 1400 பேர் நாட்டின் வெவ்வேறு பகுதியில் இருந்தும் கலந்து கொண்டனர். நானும் எனது மனைவியும் கலந்துகொள்ளும் பாக்யம் பெற்றோம். அகோபிலம், பத்ராசலம், சிம்மாசலம், ஸீகூர்மம், பூரீஜகன்னாதர் ஆலயம், கயா, அயோத்தி, அலகாபாத், காசி, நைமீசாரண்யம் போன்ற இடங்களை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஸ்வாமிகளுடன் போவதே ஒரு அனுபவம் தான். ஆம், நம்மால் சாதாரணமாக நினைத்தப் பார்க்க முடியாத, போகமுடியாத இடங்களை எல்லாம் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பதில் அவரை மிஞ்ச முடியாது. அதுமட்டுமா, அந்தந்த இடங்களின் மகாத்மியங்களையும் கூடவே சொல்வதில் அவருக்கு நிகர் யார்?
அதோடுகூட எல்லா இடங்களிலும் நேரத்துக்கு சுவையான ஆகாரம் பரிமாற்றும் அழகை என்ன சொல்வது!!!!!!!
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் சொல்வதில் ஆரம்பித்து எல்லாவற்றையும் அந்தந்த நாட்களில் ஞாபகப்படுத்தி முறைப்படுத்துவதில், கிஞ்திக்காரம் டிரஸ்டை என்னவென்று சொல்வது!!!
ஒருதடவை அவரோடு சென்று பாருங்கள், பிறகு நீங்களே எப்போது அடுத்த டூர் எப்போது ஆரம்பிப்பார் என ஏங்குவீர்கள்.
போதும், ஆரம்பிப்போமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக