அகோபிலம்.
ஆந்திரப்பிரதேசத்தில் நரசிம்ம ஷேத்ரம் அகோபிலம். “திருச்சிங்கவேள் குன்றம்” திருமங்கையாழ்வார் அவர்களால் 10 பாசுரங்களால் பாடபட்ட 108 திவயஷேத்ரங்களில் முக்கியமான ஒன்றாகும். பக்தன்
பிரஹலாதனின்
நம்பிக்கையை, எங்கும் உளன் கடவுள் என்ற உண்மையை மெய்ப்பிக்கும் வகையில் தூணை
பிளந்து காட்சி அளித்த இடம் அகோபிலம் ஆகும்.
கருடன்
தவம் புரிந்ததால் கருடாசலம் என்றும், வேதங்களை மீட்டுக் கொடுத்ததால் “ வேதாசலம்” என்றும் அழைக்கப்படுகிறது. பல புராணங்களிலும்
அகோபிலம் பற்றி பேசப்பட்டிருக்கிறது.
அகோபிலமடத்தை
ஸ்தாபித்த ஸீஆதிவண்சடகோப ஜீயர் ஸ்வாமிகள் இந்த ஊரில் இருந்து தான் அகோபில மடத்தை ஸ்தாபித்துள்ளார். அகோபிலத்தில் நவநரசிம்மருக்கும்
ஸந்நிதிகள் உள்ளன
1.பிரஹலாத வரத நரஸிம்ம பெருமாள்
1. மலையடிவாரத்தில் உள்ள ப்ரஹலாத வரதஶ்ரீலக்ஷ்மிநரசிம்மர்
கிழக்கு நோக்கிய கோயில்.
2. ஶ்ரீபாரக்கவ நரசிம்மர் பெருமாள்.
ப்ரஹலாத
வரத நரசிம்மர் பெருமாள் கோயிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பார்க்கவ
நரசிம்மர் கோயில் உள்ளது. பாரக்கவராமர் எனப்படும்
பரசுராமர் நரசிம்ம பகவானைக் காண தவம் செய்த இந்த இடத்தில் பாரக்கவராமனாகிய
பரசுராமனுக்கு காட்சி அளித்த சிங்கபிரான் பார்க்கவ நரசிம்மன் என்று
அழைக்கப்படுகிறார்.
1. 3. யோகானந்த நரசிம்மப் பெருமாள்.
கீழ்
அகோபிலத்திலிருந்து தென்கிழக்கே 2.5 கிலோமீட்டர் தொலைவில்
ப்ரஹலாதனுக்கு பல்வேறு
யோகநிலைகளை கற்பிக்கும் முறைகளை
சொல்லிக்கொடுக்கும் நிலையில் அமைந்துள்ளார்
யோகானந்த நரசிம்மர்
4. சத்ரவட நரசிம்மர் சன்னதி.
யோகானந்த
நரசிம்மர் சன்னிதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது
சத்ரவட நரசிம்மர் சன்னிதி.ஹாஹா
மற்றும் ஹூஹூ என்ற இரு
கந்தர்வர்கள்இவரை தரிசித்து பாடல்கள் பாடியுள்ளனர்.
சத்ரவட நரசிம்மர் சன்னிதி |
5. மேல
அகோபில நரசிம்மர் பெருமாள்.
கீழகோபிலத்தில இருந்து 8
கிலோமீட்டர் தொலைவில் ஸ்வயம்பு
மூர்த்தியாக மலைக்குகையின் உட்பாறையில்
புடைப்பு சிற்ப வடிவில் கரப்பகிரஹத்தில்
காட்சியளிக்கிறார். வேடுவர்களின் குலதெயவமான ஶ்ரீசெஞ்சுலக்ஷ்மி என்ற திருநாமத்துடன் மஹாலக்ஷ்மி கோயில் கொண்டுள்ளார்]
6. காரஞ்ச
நரசிம்மர் பெருமாள்.
மேல அகோபிலத்தில் இருந்து 1 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது.காரஞ்ச மரத்தின் கீழ், ஒரு திருக்கரத்தில் சாரங்கம் எனும் வில்லும் மறு
கரத்தில் ஸுதர்ன சக்கரத்தையும் தரித்துக்கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை
சாதிக்கிறார்
.7. ,ஶ்ரீக்ரோட
நரசிம்மர் கோயில்.
மேல அகோபிலத்தில் இருந்து 1 கிலோமீட்டர்
தொலைவில் இவர் சேவை சாதிக்கிறார். க்ரோட என்றால் வராகம் எனப்படும். பெரிய
பிராட்டியுடன் வராக வதனத்துடன் சேவை சாதிக்கிறார்
8.. மாலோல
நரசிம்மர் சன்னதி.
மேல அகோபிலத்தில் இருந்து மலை மேல செல்லும் போது
க்ரோட நரசிம்மர் சன்னதியில் மேல படி ஏறினால் மாலோல நரசிம்மர் பெருமாளை
தரிசிக்கலாம். ஶ்ரீமஹாலக்ஷமி தாயாருடன் சேவை சாதிக்கிறார். இவரின் உற்சவரை
ஶ்ரீமத் அகோபில மடத்தை ஸ்தாபித்த ஜீயர் ஸ்வாமிகளின் நித்ய திருவாரதனத்தில்
இன்றளவும் சேவிக்கலாம்.
9.. ஶ்ரீபாவன
நரசிம்மர் சன்னிதி.
மேல
அகோபில சன்னிதியின் பின்பக்கம் 250 படிகள் ஏறி பின்னர் 6 கிலோமீட்டர்
ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றால் ஶ்ரீபாவன நரசிம்மர் கோயிலை அடையலாம்
மாற்றாக கீழ் அகோபிலத்தில் இருந்து டிராக்டர் அல்லது ஜீப்பில் 2 மணி நேரம்
பயணித்தால் ஶ்ரீபாவன நரசிம்மர் கோயிலை அடையலாம். அடர்ந்த காட்டுக்கு நடுவே
அமைந்துள்ளது
10.. ஜ்வாலா
நரசிம்மர் கோயில்.
மேல
அகோபிலத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் அடர்ந்த கானகத்திறகிடையே, க்ரோட
நரசிம்மர் சன்னிதியைத் தாண்டி ஆற்றின் ஓரமாகமே மேலே பயணித்தால், ஜ்வாலா நரசிம்மர்
சன்னிதியைத் அடையலாம். வயதானவர்கள் ஏறுவது சிரம்ம். இங்கு தான் ஹிரணயகசிபுவினை தன்
மடியில் கடத்தி தன் இரு கரங்களால் நகத்தினைப் பயன்படுத்தி குடலை உருவிய கோலத்தில் காட்சி அளிக்கிறார்
இவை தவிர உக்ர ஸ்தம்பம் என்ற உயரமான தூண் போன்ற அமைப்பு பாரக்கத் தூண்டும். இங்கு தான் நரசிம்மர் தூணைப் பிளந்த இடம் என்றும் சொல்கிறார்கள்.
இவைகளை
அகோபிலத்தில் பாரக்கத் தவறாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக