ஞாயிறு, டிசம்பர் 22

ஷாக் டிரிட்மெண்ட்ஷாக் டிரிட்மெண்ட்
"ஹலோ,ராமநாதனா?"
"ஆமாம், நான்தான் ராமநாதன் தான் பேசறேன்."
"நீங்க யாரு பேசறது, தெரியலயே?"
"நான் கிருஷ்ணஸ்வாமி, மாம்பலத்தில் இருந்து பேசறேன்."
சொல்லுங்க சார்.
"போன மாசம் நீங்க உங்க பையன் ஜாதகத்தை என் பெண்ணுக்கு
பொருத்தமா இருக்குன்னு அனுப்பினுங்க இல்லை, அந்தப் பெண்ணின் அப்பா தான் பேசறேன்."
"ஆமா சார்,  ஞாபகம் வருது, நீங்க தான், நான் நல்லா பொருத்தமா இருக்குன்னு சொல்லியும், 
நீங்க பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டீங்களே."
"ஆமாம் சார்,வெரி சாரி சார், அன்னைக்கு நான் பாத்த ஜோசியர அப்படி சொன்னதால 
நான் உங்ககிட்ட அப்படி சொல்லிட்டேன், அப்பறமா எங்க ஆஸ்தான ஜோசியர் உங்க பையனின் ஜாதகம்  என் பொண்ணோட ஜாதகத்தோட நல்லாப் பொருந்தி இருக்குன்னும், இந்தப் பொருத்தத்தை விட்டுடாதீங்கன்னும் 
சொன்னார்,அதனால தான்.........."
போன்ல இழுத்தார். 
அந்த சமயம் பார்த்து,
"என்னங்க போன்ல யாருங்க?”
என் மனைவி.
"சார், என் சகபத்னி ஏதோ சொல்லணுங்கிறாங்க, நானே கூப்பிடுறேன.”
சொல்லி ரிஸீவரைக்கீழே வைத்தேன்.
மீண்டும் போன் சிணுங்கியது.
"ராமநாதன், நான் திருவல்லிக்கேணி கோபாலன் பேசறேன், என் பெண் கவுஸல்யா கல்யாண விஷயமா  உஙகளை நேரில் பாக்க வரணும், எப்ப உங்களுக்கு வசதிப்படும்.”
எனக்கு தூக்கிவாரிப போட்டது!
இந்த  கோபாலன் பெண்ணை என் பையனுக்கு பொருத்தமா இருக்கான்னு  
கேட்டு எத்தனை முறை அவர் வீட்டுக்கு படை எடுத்திருப்பேன்.
இன்னும் ஜாதகம் பாக்கலை, ஜோசியர் ஊரில இல்லை, பெண்ணோட பெரியம்மாகிட்ட கேட்கணும், 
இப்படி என்னன்ன சாக்கெல்லாம் சொன்னார, இப்ப என்ன திடீரென்னு!! ஓண்ணும் புரியலயே!!
"அதுக்கென்ன சார், எப்ப வேணாலும் பாக்கலாம் சார், வறதுக்கு முன்னால போன் பண்ணுங்க,”
என்று சொல்லி போனை வைத்தேன்.
அடுத்த அரைமணி நேரத்துக்குள், நான்கு பேர், இதே மாதிரி, சொல்லி வைத்தார்போல் போன் செய்தார்கள்.
என் பையனுக்காக நான் நாயா அலைந்தத நினைத்துப் பாரத்தேன்
என் மனைவியிடம், "என்ன நம்ம பையனுக்கு இதுவரை நூறு ஜாதகமாவது வாங்கி இருக்கமாட்டோம்”,
என்று மனைவியிடம் என் ஆதங்கத்தைச் சொன்னேன்.
அந்தக் காலத்தில பெண்ணப் பெத்தவன் மாப்பிள்ளைக்காக அலைந்ததாக என்தகப்பனார் சொல்லிக் கேட்டு இருக்கிறேன், 
இப்ப நான் பிள்ளைக்காக அலையவேண்டு இருக்கு. எல்லாம் காலம் தான் செய்யுது.
அன்னிக்கு இப்படித்தான் ஓரு பெண்ணின் அம்மாகிட்ட, எல்லா விவரத்தையும் சொல்லி, என்பையன் ஜாதகம் அனுப்பி 
ஓரு வாரம் ஆகிறது, உங்க பெண்ணோட ஜாதத்தை நீங்க இன்னும் அனுப்பலை, அனுப்பினா நன்னா இருக்கும், 
அப்படீன்னு சொன்னா, 
நாங்க இப்ப எங்க பெண்ணுக்கு கல்யாணம் பண்றதால்லை, அப்படின்னு கூலா பதில் சொல்றாங்கன்னாப் பாருங்க சார்!!
இதுவாவது பரவாயில்லை சார்.
இன்னொருத்தர், என் பெண் நாப்பதாயிரம் சம்பாதிக்கிறா, உங்க பையன் அதவிட கூட வாங்குவானா. இதுக்கு சம்மதம்ன்னா, ஜாதகம் அனுப்புங்க, அப்படிங்கறாங்க சார். இதுல வேடிக்கை என்னன்னா அவரோட 
பெண் பிளஸ் கூட படிக்கல்ல.
இப்பத் தான் கிளைமாக்ஸ்!!!
இன்னொருத்தர் கூசாம,
பையனைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தபிறகு மாப்பிள்ளை அவங்க வீட்டோட வந்துடுவாரான்னு கூலாக, 
என்னிடம் கேட்கிறார் சார்.
எப்படி இருக்கு பாருங்க கல்யாண  மார்க்கெட்!!
இப்படி என்னுடைய  பையன் ஜாதக அனுபவம் இருக்கும் போதுதான் மேலே சொன்னபோன் கால்கள்.
இத்தனை போன் அழைப்புகளையும் கேட்ட பிறகு நானும் என் மனைவியும் மயக்கம் போடாத குறை.
இத்தோடு அது நிக்கல.
அப்புறம் நடந்தது தான் முக்கியம்.

கவுஸல்யா பேசறேன் சார்!

இது என்ன புதுக் குழப்பம்?

”நான் திருவல்லிகேணி மிஸ்டர் கோபாலன் அவர்களின் பெண்.  எஙக வீட்டுக்கு நீங்க அடிக்கடி வரதைப் பார்த்துள்ளேன்.
என் அப்பா உங்களிடம் பொறுமையாகப் பேசாமல் உங்களை அடிக்கடி அலைக்கழித்து இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். அதற்காக உஙகளிடம்  மன்னிப்புக் கோருகிறேன். நீங்கள் போனபிறகு என் தாயாருக்கும் தந்தைக்கும் இடையே நடந்த விவாதம் தான் இப்போது  என்னை உங்களிடம் பேசத் தூண்டியது.”
”அப்படிஎன்னம்மா அங்கு நடந்தது?” இது நான்.
”அதைச் சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது சார், இருந்தாலும்
சொல்லாமல் இருக்கமுடியவில்லை சார்.”
ஓரு பிளாஷ் பேக!!!

”என்னங்க,உங்க பெண்ணுக்கு இத்தனை ஜாதகம் வந்து இருக்கே,
எந்த பையனைப் பாக்கப்போறீங்க?  அவ நல்ல வேலையில் நல்ல சம்பளத்தோட இருப்பதால், நல்ல பையனாப் பாருங்க,என்ன நான் சொல்லறது சரிதானே?” இது என் அம்மா.
”ஏண்டி, ஓண்ணும் புரியாத மாதிரி இருக்கே?” அப்பா.
”என்னங்க சொல்றீங்க? எனக்கு ஓண்ணும் புரியலயே?”
”எண்டி, நமக்கு இருக்கிறது ஓரே பெண். அவ சம்பளத்தை நம்பித்தான் நம்ம குடும்பம் இருக்குல்லியா? அவ கல்யாணம் ஆகி போயிட்டா நாம சாப்பாட்டுக்கு என்னபண்றது?”
”அதுக்காக, நம்ம பெண்ணுக்கு கல்யாணம் பண்ணப் போறதில்லையா?”
”ஏன் பண்ணப் போறதில்லை? வீட்டோட மாப்பிளையா, அவ சம்பளத்தில கைவைக்காத பையன் கிடைக்கற போது கல்யாணம் பண்ணாப் போச்சு, அது வரைக்கும் உன் திருவாயை மூடிக் கொண்டிருக்கையா?”


”இதைக் கேட்டவுடன் எனக்கு ஷாக்காகிப் போச்சு. இவ்வளவு மோசமானவங்களா என் பெற்றோர்கள்!
எனக்கு ஓரு நிமிஷம் என்ன பண்ணறதுன்னு  தெரியல. எதாவது பண்ணனும். என் கல்யாணத்தை வியாபாரம் ஆக்கிவிட்டார்களே!!”
”இவங்க பேசினதை நான் கேட்காதது மாதிரி அன்று இரவு முழுதும் தூக்கமில்லாமல் கழித்தேன்.
அப்பத் தான், எனக்கு ஓரு ஐடியா தோணித்து. எங்க வீட்டுக்கு வரும், எங்க ஆபீஸ்ல வேலை செய்யும் நண்பர், என்னைவிட வயதில் முத்தவர், ராமகிருஷ்ணன் ஞாபகம் வந்தது. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. அவரை நான் ஆபீஸில என் உடன் பிறந்தவனைப் போலத்தான் பழகுவேன். ஆனால் இது என பெற்றோர்களுக்குத் தெரியாது.
எனவே இவரை வைத்து ஏதாவது செய்யணும்னு தோணித்து.
காலையில எழுந்தவுடன் முதல் காரியமா ராமகிருஷ்ணனுக்கு போன் பண்ணேன்.”

”என்ன பண்ணீங்க நீங்க? இது நான்.

”இதுக்கு முன்னால, நீங்க எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனபோது உங்க பையை இங்கு வச்சிட்டு போயிட்டீங்க போல. அதத் திறந்து பார்த்தேன். அதுல உங்க போன், அட்ரஸ் மற்றும் நீங்க பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களின் அட்ரஸும் கிடைத்தது. அவங்களுக்கு போன் பண்ணி எங்க வீட்டில நடந்த விஷயத்தைச் சொல்லி, நான் பண்ணப போற  விஷயத்தையும் சொன்னேன்.
அவங்க ளுக்கெல்லாம் ஓரே ஷாக். நான் பண்ணப்போற விஷயத்துக்கு முழு ஓத்துழைப்பு தரதாச் சொன்னாங்க.

சரி, விஷயத்துக்கு வரேன்.”

”ஆமாம்,ஏதோ போன் பண்ணப்போறேன்னு சொன்னீங்களே?” இது நான்

”ஆமாம், நான் போன் பண்ணறது என் பெற்றோர்களுக்குத் தெரியும்படி பார்த்துக் கொண்டேன்.”

                         ”ராமகிருஷ்ணன், டியர், என்ன மறந்துட்டீங்களா?”
இப்படி ஆரம்பித்தேன். ஓவ்வொரு வார்த்தையிலும் எதிராக இருப்பவர் கிட்ட அதிகமான அன்பைப்  பொழிவது மாதிரி பேசினேன். நடுவில என் பெற்றோர்கள் முகம் என்ன மாதிரி இருக்குன்னு பார்த்துக் கொண்டேன்.
அதாவது நாம கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம், அதுக்கு நம்ம பெற்றோரகளை கூப்பிடலாமா அல்லது  வேண்டாமா என்பது போன்ற வசனங்களைப் பயன்படுத்தினேன்.”
”உண்மையிலே என் பெற்றோர்கள் கொஞ்சம் அப்செட் ஆன மாதிரி தான் எனக்குத் தெரிந்தது.
ஷாக் டிரிட்மெண்ட் கொடுத்து இருக்கேன், என்ன நடக்குதுன்னு
பார்ப்போம் சார், உஙகளை ரொம்ப நேரம்  போர் அடிக்க வைத்துட்டேன்னு நினைக்கிறேன்.
சாரி சார், உஙக பையனுக்கு கூடிய சீக்கிரம் மணமாக என்னுடைய வாழ்த்துக்கள்.”

”கொஞ்சம் இரும்மா கவுஸல்யா, நீங்க கொடுத்த ஷாக் டிரீட்மெண்ட் வேலை செய்ய ஆரம்பிடுத்துன்னு நினைக்கிறேன்.”

”என்ன சார சொல்றீங்க?”

”நீங்க இந்த விஷயங்களைப் பத்தியெல்லாம் பேசறதற்கு முன்னால தான் உங்க தகப்பனார் என்னைப் பார்க்கணும்னு சொன்னார்,அது ஓருவேளை நீங்க எடுத்துண்ட முயற்சியாகக் கூட இருக்கும்னு நினைக்கிறேன்.
உங்க முயறசிக்கு நனறி.”கோல மாவில் என் மணிவியின் கைவண்ணம்.

ஆக நல்லவங்களும் ஊரில் இருக்காங்க போல.
பெண் பாக்க் கிளம்பிட்டேங்க!!!
கீழே பாருங்க, பெண்ணை அழைத்து வரும் காட்சியை!!!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக