ஞாயிறு, ஆகஸ்ட் 30

ரசகுல்லா யாருக்கு?

படித்ததில் பிடித்தது.

இந்த விசயத்திற்காக இரு மாநிலங்கள் சண்டை போடுகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும்.


ரசகுல்லா என்பது வட இந்திய இனிப்பு வகையாகவே அறியப்பட்டு இருக்கும். இந்தியில் ரசம் என்றால் ஜூஸ் என்றும், குல்லா என்றால் வட்ட பந்து வடிவ பொருள் என்றும் பொருள்.



ஆனால் அதன் பிறப்பிடம் வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தது. இதில் துல்லியமாக வங்காளமா? ஒரிசாவா? என்பதில் தான் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ரசகுல்லாவிற்கு புவியியல் சார்ந்த காப்புரிமை பெறுவதற்கு இருமாநிலங்களுமே போட்டியிடுகின்றன.

இதற்கு ஒரிஸ்ஸா சொல்லும் கதை மிகப் பழமையானது.

ஒரிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதர் மனைவி லஷ்மியிடம் சொல்லாமல் ரத வலத்திற்கு சென்று விட்டார். அதனால் லட்சுமி கோபப்பட்டு கோவிலின் கதவை அடைத்து படுக்க சென்று விட்டார். அவரை சமாதனப்படுத்துவதற்காகத் தான் ஜெகந்நாதர் அல்வா போல் ரசகுல்லா தயாரித்துக் கொடுத்தார் என்று ஒரிசா மாநிலத்தவர் கூறுகின்றனர்.



அதனால் பணிரெண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரசகுல்லாவை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று ஒரிசா மக்கள் கூறுகின்றனர்.

ஆனால் வங்காளத்தவரோ நமது ஊர் இருட்டுக் கடை ஸ்டைலில் ஒரு கதை சொல்கின்றனர். 1868ல் தாஸ் என்பவர் ரசகுல்லாவை கண்டுபிடித்து தமது கடை மூலம் பிரபலமடைய செய்தார் என்று குறிப்பை பகிர்கின்றனர்.

கடவுளுக்கு படைக்கப்படும் 56 வகை வட இந்திய உணவுகளில் ரசகுல்லா இல்லையே என்று வங்காளிகள் எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.

ஒரிசா ரசகுல்லா சிகப்பு நிறத்திலும், வங்காளிகள் ரசகுல்லா வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.

மம்தா பானர்ஜி இதை சும்மா விடக்கூடாது என்று காப்புரிமை பதிய சென்று விட்டார். ஆனால் ஒரிஸ்ஸாவில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆக, யார் ரசகுல்லாவைக் கண்டுபித்தார் என்பது பூரி ஜெகந்நாதருக்குத் தான் வெளிச்சம். ஆனால் தமிழில் ரசகுல்லா என்று கூகுளில் எழுதி தேடினால் ஹன்சிகா வருகிறார். அதனால் நாமும் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டிக் கொண்டால் காப்புரிமை பெற உரிமை கொண்டாடலாம்


நன்றியுடன் :http://www.revmuthal.com/p/finance-investment-index.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக