வியாழன், மார்ச் 13

ஸ்ரீ கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீவேதநாயகப்பெருமாள் ஸன்னதி ஸ்தல புராணம்.

ஸ்ரீ கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீவேதநாயகப்பெருமாள் ஸன்னதி ஸ்தல புராணம். வளையமாதேவி, ஸ்ரீமுஷ்ணம் அருகில்;

முகப்புத் தோற்றம்

கோயில் வாசல்

துவயஸ்தம்பம்
கோயில் 
கோயில் "எயிற்றிடை மண்கொண்ட எந்தை", "ஏனத்துருவாகிய ஈசன் எந்தை", "கோல வராகமொன்றாய் நிலம் கோட்டிடக் கொண்ட எந்தாய்",
என்று ஆழ்வார்கள் பலராலும் கொண்டாடப் பட்ட ஸ்ரீபூவராகப்பெருமாளின் திருக்கல்யாண மண்டபமாகவும், புக்ககமாகவும்  அமைந்த்து இந்த ஊர் "வளையமாதேவி" என்கிற இந்தத் திருத்தலம்..

ஸ்தல புராணம்.

ஸ்ரீமுஷ்ணம் என்ற ஸ்வயம்பு க்ஷேத்திரத்தில் இரணியாக்ஷ்ன மகள் ஜில்லிகை என்ற மணிமாலையும், முத்தமாலையும் பூவராகப் பெருமாளை குறித்து தவம் புரிநது மணிமுத்தா நதி மற்றும் சுவேத நதி என இரு ஆறுகளாக ஓடுகின்றனர்.
குருத்தரோகம் புரிந்த காத்யாயன முனிவர் தன் பாவம் அகல மணிமுத்தா நதியின் வடக்கே ஓரு குளம் அமைத்து, வெகுகாலம் தவம்புரிநது தன் பாவம் நீங்கப் பெற்றான்.
புத்திரப் பேறு வேண்டி, தாயாரை நோக்கி தவம் புரிந்தான். தவத்தை மெச்சி தாயார் தானே அவருக்கு மகளாக அவதரித்தார்.
காதயாயனி என்று பெயரிட்டு வளர்ந்து வந்தாள்.
பருவம் வந்தபின், மானிடர்களையோ அல்லது தேவர்களையோ மணக்கமாட்டேன் என்று உறுதி கொண்டு, பூவராகனையே 
மணமகனாக் கொள்வேன் எனறு உறுதியுடன் தவம் பரிந்து வந்தாள்.
பெருமானும் அம்மை காணும்படி காட்டில் மெதுவாகச் சென்றான். அவரிடம் தோழி போய், ”என் நாயகி உங்களுக்காக  காத்திருக்கிறார்கள். உங்களை அழைத்து வரச் சொன்னார்கள”, என்கிறாள்.
இதற்கு மறுத்து பெருமான் சென்று விடுகிறான்.
பின்னர் காத்யாயன முனிவரும் பெண்ணின தவ வலிமையை பார்த்து, பூவராகப் பெருமானை வேண்டி, தன் புதல்வியின்
நிலையை விளக்கி, தன் புதல்வியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினான்.
பூவராகப் பெருமானும் இசைந்து திருமணம் செய்து கொள்கிறான்.
திருமணத்திற்கு தன் மகளான பெரியபிராட்டிக்கு சீதனமாக ”வளையம்” என்னும் செம்பொன் அணியை காத்யாயன முனிவர் அளிக்கிறார். அதனால் தாயார் ”வளையமாதேவி” என்று அழைக்கப்பட்டார்.
திருமணத்திற்கு வந்திருந்த தேவர் முதலானோர் இறைவனை இறைஞ்சி திருமணக்கோலத்துடன் கமலவல்லித் தாயாரோடு இப்”பாவன தீர்த்தக் கரை”யில், 

பின்னனார் வணங்கும்படி கோயில் கொண்டு எழுந்தருளும் படி பிரார்த்திக்க, அவ்வாறே  இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கு எழுந்தருளி இருக்கும் மூர்த்திகள.

1.  மூலவர்        வேதநாராயணப் பெருமாள , உபய நாச்சியாரகளுடன்   
                              வீற்றிருந்த திருக்கோலம்.
வேதநாராயணப் பெருமாள , உபய நாச்சியாரகளுடன்  

மூலவர் சன்னிதி

2. உற்சவர்        வேதநாராயனப் பெருமாள், வீற்றிருந்த திருககோலம்,    உபயநாச்சியார்கள் நின்ற திருககோலம்.
3. நித்ய உற்சவர்   வேதநாராயணப் பெருமாள் நின்ற திருககோலம்.

உற்சவர்
சன்னிதி தோற்றம்

4. காளீயமர்த்தனக் கண்ணன்    உற்சவர்.
5. ஆதி நாராயணப் பெருமாள்   வீற்றிருந்த திருக்கோலம்.
6. ஸ்ரீ பூவராகப் பெருமாள்    மூலவர் வீற்றிருந்த திருககோலம்.

பூவராகர்


7. பிராட்டியுடன் சக்கரவர்த்தித்திருமகன், இளையபெருமாள், அனுமார 
                               உற்சவர் மூலவர் நின்ற திருக்கோலம்.

ஆதி காலத்து ராமர் சீதை லக்ஷ்மணன், அனுமார்.


8. ஸ்ரீ  ஆண்டாள்    மூலவர்   
             உற்சவர்  நின்ற திருக்கோலம்.
ஸ்ரீ ஆண்டாள்

9. ஸ்ரீ நம்மாழ்வார்   திருமங்கையாழ்வார மூலவர் உற்சவர்.
10. ஸ்ரீ திருக்கச்சி நம்பிகள்  மூலவர்.
11.ஸ்ரீ உடையவர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் மூலவர் உற்சவர்.
12. ஸ்ரீ கமலவல்லித் தாயார் மூலவர் உற்சவர்
ஸ்ரீ கமலவல்லித் தாயார் மூலவர் உற்சவர்


13. காத்யாயனமுனிவர் மூலவர் வீற்றிருந்த திருககோலம்.
காத்யாயன முனிவர்

14. கருடர்,அனுமார்  மூலவர் நின்ற திருககோலம்.

அனுமார்

கருடர்
15. விஷ்வக்சேனர்  வீற்றிருந்த திருக்கோலம்.
16. துவார பாலகர்கள் நின்ற திருககோலம்.

இங்கு நடைபெறும் வருடாந்திர உற்சவங்கள்.

சித்திரை மாதம்     வருஷப்பிறப்பு, எம்பெருமானார் சாற்றுமுறை.
வைகாசி மாதம்     பிரம்ம உற்சவம், நம்மாழ்வார் சாற்றுமுறை.
ஆடி மாதம்         திருவாடிப்பூரம், ஆடி வெள்ளி ஆண்டாள் ஸ்ரீவேதநாராயணப்பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
ஆவணி மாதம்      ஸ்ரீஜயந்தி உற்சவம்.
புரட்டாசி மாதம்     நவராத்திரி உற்சவம்.
ஐப்பசி மாதம்       தீபாவளி உற்சவம்,
                           ஐப்பசி மூலம் மணவாளமாமுனகள் சாற்றுமுறை.
கார்த்திகை மாதம்  திருமங்கையாழ்வார் சாற்றுமுறை, தீப உற்சவம்.
மாரகழி மாகம்     தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி உற்சவம்.
தை மாதம்        தைவெள்ளி தாயார் உற்சவம்.
மாசி மாதம்        மாசி மகம்.
பங்குனி மாதம்     ஸ்ரீராம நவமி உற்சவம், அகண்ட நாம பஜனை.

வளையமாதேவி, ஸ்ரீமுஷ்ணம் அருகே, விருத்தாச்சலத்தில் இருந்து செல்லலாம். சிறிய கோயில். சோழர்கள் காலத்தில்
இருந்து, அவர்களால் பாராமரிக்கப்பட்டு வந்துள்ள கோயில். சிறந்த வரம் அளிக்கக்கூடியவர்.. சமீபத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரனாம
பாராயண சபா அங்கத்தினர்கள் சுமார் 60 பேர், ஒரு பேருந்தில், இங்கு வந்து அகண்ட பாராயணம் செய்தார்கள்.
இந்த ஸ்தல புராணத்தை படிக்கும் அன்பர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்ரீ கமலவல்லித்தாயார் சமேத ஸ்ரீ வேத நாராயணப் பெருமானை தரிசித்து, பெருமானின் அனுக்க்கிரஹம் கிடைக்கப் பெற வேண்டுகிறோம்.
மேற்கொண்டு விபரம் வேண்டுவோர், 
கோயில் அர்ச்ச்கர்,
 திருவேங்கட ராமானுஜம், M.Com., M.Ed., Ph.D.,
 வேத நாராயணப் பெருமாள் தேவஸ்தானம்,
 வளையமாதேவி, 608704,
 சிதம்பரம் தாலுக்கா

என்பரிடம் தொடர்பு கொள்ளலாம்.
அவருடைய மின்னஞசல்:   thiruvenkatam2012@gmail.com

தாயார் சன்னிதி
ஸகஸ்ரநாம பாராயணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக