செவ்வாய், மார்ச் 11

பாசுரம் சொல்லும் கதை---பகுதி 7.


பாசுரம் சொல்லும் கதை---பகுதி 7.
மொய்த்த வல்வினையுள் நின்று, மூன்று எழுத்துடைய பேரால்
கத்திர பந்தும் அன்றே, பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை அடியரானார்க்கு, இரங்கும் நம் அரங்கனாய,
பித்தனைப் பெற்றும் அந்தோ, பிறவியுள் பிணங்கு மாறே!!

”வாப்பா கண்ணா, என்ன பண்ணிகிகிட்டு இருக்கே?”
“ஸ்லோகம் படிச்சுண்டு இருக்கேன் தாத்தா”
”பள்ளிகூடத்தில் ஏதாவது விஷேஷம் உண்டா கண்ணா?”
“ஆமாம் தாத்தா, இன்னைக்கு ரெண்டு பேர் புதுசா சேர்ந்து இருக்கா தாத்தா.”
“அவா பேர் என்ன கண்ணா?’
“ஒருத்தன் பேர் கிட்டு, இன்னொருத்தன் லட்டு தாத்தா.”
“இப்படியெல்லாம பேர் ரெஜிஸ்டர்ல எழுதுவா?”
“இல்லை தாத்தா, கிருஷ்ணன் அப்ப்டிங்கற பேரைத்தான் நாங்க கிட்டுன்னு கூப்பிடறோம்.
அதே போல லக்ஷ்மணன் என்பதைத் தான் லட்டுன்னு கூப்பிடுவோம் தாத்தா.
"எதுக்கு தாத்தா இதெல்லாம் கேக்கிற?”
”இல்லைப்பா, பேர் வைககிறதுல நிறைய விஷயம் இருக்குப்பா.”
”என்னது பேர் வைக்கிறதுல நிறையவிஷயம் இருக்கா?”
”ஆமாம், அதப்பத்தி ஆழ்வார் ஓரு பாசுரத்துல கத்திரப் பந்துங்கர
ஓத்தரப் பத்தி சொல்லும் போது பேர் வைக்கறதப் பத்தி சொல்றார். அந்தக் கதையை உ. வே. வேளுக்குடி. 
ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் சொன்னதை உனக்கு இப்ப சொல்றேன் கேளு.”
”சொல்லு தாத்தா.”
”கத்திர பந்துன்னு ஓருத்தன் உடம்பு முடியாம, வியாதில இறக்கும் தருவாயில இருந்தான். அவனுக்கு மூணு பசங்க. வாழ்க்கை பூராவும் கடவுளை எப்பவும் திட்டிண்டே இருப்பான். கடவுளைக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது. அதுக்காகவேஓரு பையனுக்கு நாராயணன்னு பேர் வச்சான். அடிக்கடி அவனைக் கூப்பிடற சாக்குல திட்டுவான்.
அன்னைக்கு உடம்பு ரொம்ப முடியாம போய், வலி தாங்கல.”
”நாராயணா ,நாராயணா” னனு கூப்பிட்டு பார்த்தான், அவன் வரல.”
”செத்துப் போயிட்டான்.”
”அப்பறம் என்னாச்சு தாத்தா?”
”மேல் உலகத்தில் இருந்து பெருமாள் நாராயணன் சேவகர்களும்,
எமன் சேவகர்களும் அவனை தஙகள் லோகத்துக்குக் கூட்டிண்டு போக ரெடியா வந்துட்டா.”
”ஏன் தாத்தா நாம செத்துப் போனா எங்க போவோம் தாத்தா?”
”அது நாம நிறைய பண்ணியம் பண்ணி இருக்கோமா
அல்லது பாபம் பணணி இருக்கோமாங்கறதைப் பொறுத்து இருக்கு கண்ணா.”
”நிறையப் புண்ணியம் பண்ணி இருந்தா சொர்க்கம் போவோம், பாபம் பண்ணி இருந்தா நரகம் போவோம்”.
”அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?”
”நாராயணன் சேவகர்கள் இவன் சாகற போது நாராயணன்னு கூப்பிட்டு இருக்கான், அதனால  இவனை நாங்க சொர்க்கத்துக்கு தான் கூப்பிட்டுக்கொண்டு போவோம், நீங்க இடத்தை காலி பண்ணுங்க”, 
அப்படின்னு சொல்றாங்க.
”அதெல்லாம் முடியாது, அவன் வாழ்நாள் பூரா கடவுளை திட்டிக் கொண்டே இருந்தான், அதனால  அவனுக்கு நரகம் தான் நிச்சயம். நாங்க தான் அவனைக் கூட்டிக் கொண்டு போவோம்.” ”அப்படீன்னு 
எமன் சேவகர்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.”
”அப்புறம் என்ன ஆச்சு தாத்தா?
"ரெண்டு பேரும் விட மாட்டேங்கறாங்க.
கடைசியில எமன் சேவகர்கள் எமன் கிட்ட் போய் நடந்த  விஷயத்தைச் சொல்றாங்க.எமன் தன் ஆட்களைக் கூப்பிட்டு நாராயணன் ஆட்கள் அங்க வந்திட்டா நீங்க போகாதீங்க, அவங்க 
சொல்றது தான் சரியா இருக்கும்", அப்படீன்னு சொல்லி அவன் ஆட்களை அங்கிருந்து விலகிப் போகச் சொல்றான்.
கத்திர பந்துவும் சொர்க்கத்துக்கு போயிடறான்."
"சூப்பர் தாத்தா, பேர் வைக்கிறதுலயும், அதைக் கூப்பிடறதுலயும்
இவ்வளவு விஷயம் இருக்கா தாத்தா. இனிமே என் நணபர்களை முழுப் பேரையும் சொல்லி கூப்பிடுறேன் 
தாத்தா".
"இது மட்டும் இல்லை, குழந்தைகளுக்கு என்ன பேர் வச்சா நல்லதுன்னு கூடப் பாசுரங்கள் இருக்கு, அதப் பத்தி 
பின்னால ஒரு நாள் சொல்றேன், இப்ப நீ போய் நாராயணான்னு சொல்லிக் கொண்டே தூங்கு."
"ஒகே தாத்தா"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக