செவ்வாய், டிசம்பர் 5

அகோபிலம் பகுதி 7

பிரஹலாத ஸன்னிதிக்கு அருகாமையில் கூடாரத்திற்குள் பெரிய பெரிய பாத்திரங்களுக்கு நடுவில் கேஸ் அடுப்பு தீஜ்வாலையுடன் எரிந்து கொண்டிருந்தது. அங்கே சென்று விஜாரித்ததில், பக்கத்து கட்டிடத்தில் ஆகாரம் விநியோகம் செய்கிறார்கள், அங்கே செல்லுங்கள், என்றார்கள்.
பக்கத்தில் பஞ்சாயத்து கட்டிடம் என நானைக்கிறேன், சுமார் 5அல்லது 6 ஆறு இடங்களில், தலா இரண்டு பேர் வீதம், இரண்டு பெரிய பாத்திரங்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்து கொண்டு இருந்தார்கள்.
 1400 பேர சாப்பிட கூட்டம் இருக்குமே,
ஹூஹூம்,
அப்படியெல்லாம் இல்லை, ஆறு அல்லது ஏழு பேர்கள் தான் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
எப்படி இது சாத்தியம்?
அதுதான், வேளுக்குடி ஸ்வாமிகளின் ஆளுமை!!!!
இதற்கு முன்னால நானும் என் மனைவியும் மதுராவிற்கு ஏழு நாட்கள் பாகவத ஸப்தாகத்திற்கு சென்ற போதே வியந்திருக்கிறேன்.
மதுராவில் எல்ல்றோருக்கும் ஒரே நேரத்தில்
உணவு பரிமாற்வசதியாக அமர்வு
எப்படித்தெரியமா?
ஒவ்வொரு நாளும் 7500 பேர் மாலை நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து அவருடைய உபன்யாசத்தை கேட்டுக்கொண்டு இருப்போம். இரண்டு மணித்துளிகள் போனதே தெரியாது. ஒவ்வொரு நாளும் இத்தனை பேரையும் ஏழாகப்பிரித்து, முதல் நாள், முதல் குழு முதல் இடத்திலும், இரண்டாம் நாள், முதல் குழு பின்னால் கடைசி இடத்திற்கு நகர, இரண்டாம் குழு முதல் இடத்திற்கு இடம் பெயரவேண்டும். இப்படி எல்லோருக்கும் அருகில் இருந்து உபனயாசம் கேட்கமுடியும். அதோடு கூட, உபனயாசம் முடிந்தவுடன் அவர்கள் எல்லோரையும் சாப்பிடும் தட்டோடு (போட்டோவில பார்த்து இருப்பீர்கள், 
எல்லோருடைய தோளகளிலும் ஒரு ஜோலனா பை தொங்குவது அதில் தான, எங்களுக்குத் தேவையான மருந்துகள், அவசரத்துக்கு சாப்பிட பிஸ்கட், மற்றும் முக்கியமான தட்டு, டமளர் ஆகியவை) இருந்த இடத்திலேயே வரிசையாக அமரச்செய்து, நிறைய வாலண்டியர்கள் உதவியுடன், பதினைந்தே நிமிஷத்தில், மறுபடியும் சொல்கிறேன், பதினைந்தே நிமிஷத்தில் 7500 பேருக்கும் ஆகாரத்தை பகிரந்ததைச் சொல்லாமல் இருக்கமுடியாது.
அதுபோல இப்பவும் வரிசையில் நின்று, ஆகாரத்தை வாங்கிக்கொண்டு வந்தோம்.
பின்னர் வெளியே வந்து, பார்க்கவ நரசிம்மர் ஸன்னிதிக்கு போகலாம் என்று ஆட்டோவை விஜாரித்தோம். முந்தைய தினம் இரவு பலத்த மழை பெயதிருந்தமையால், போகும் வழியெங்கும் சேறும் சகதியுமாக இருக்கும் என்பதால் ஆட்டோககாரர் வர மறுத்துவிட்டார். சரி, பிரஹலாத வரத நரசிம்மர் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தோம். வரும் வழியில் ஶ்ரீவேளுக்குடி ஸ்வாமிகள் அமர்ந்து எல்லோரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம். மாலை 7 மணிவாக்கில் பிரஹலாத வரத ஸ்வாமி கோயிலுக்குப் போகும் வழியில் நாலு கால் மண்டபத்தில் ஸ்வாமிகளின் உபனயாசத்தை கேட்க அன்பர்கள் கூடியிருந்தனர். நாங்களும் அமர்ந்து உபனயாசத்தை ரசித்தோம்.

கேட்க கேட்க மதுரமாக இருந்தது.
பிரஹலாத வரதரின் ஸன்னிதியப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக