வெள்ளி, டிசம்பர் 8

“தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே “ அகோபிலம் பகுதி 10

பகுதி 10. ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி
சென்ற பகுதியில் ஃபேன் கீழ் உள்ள இடத்தை நோக்கி  ஓடினோம்  என்று முடித்து இருந்தேன் அல்லவா,  எப்படி கிடைக்கும், அதுதான் நமக்கு முன்னாலேயே நாலைந்து பஸ் பயணிகள்  துண்டு விரித்துவிட்டார்களே!
சரி கிடைத்த இடத்தில் இன்று இரவைப் போக்குவோம் எனத் தீர்மானித்து படுக்கையை விரித்தோம்.
சரியாகக் கூட தூங்கியிருக்க மாட்டோம், திடீரென கசமுசா என சத்தம். பார்த்தால் அநேகம் பேர் பாத்ரூம், குளியல் அறை என மாத்தி மாத்தி  போய்க்கொண்டிருந்தார்கள்
மணி என்னவாக இருக்கும்?  மணி மூன்று தான் ஆகியிருந்தது. என்னடா அதுக்குள்ளேயே குளித்துவிட்டார்களா?
இல்லையா பின்ன,ஓவ்வொருவராக இருக்கும் பாத்ரூமில் குளித்து வர நேரமாகாதா?  டூர் போவதே பொழுதுபோக்கு  போல் இவர்களுக்கு.  எப்போது எழுந்தால் சரியாக இருக்கும் எனத் தெரிந்து வைத்துள்ளார்கள் பாருங்கள்!!
NOTE THIS POINT MR, THOSE WHO ARE GOING ON TOUR.
நமது கோஷ்டியும் சுதாகரித்து, பேஸ்ட் பிரஷ், துண்டு சகிதம் எந்த பாத்ரூம் காலியாகும் என தேட ஆரம்பித்த்து.
ஓரு வழியா எல்லாற்றையும் முடித்துக் கொண்டு. பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.  அகோபிலத்தில் போய் நின்றவுடன், ஸ்வாமீகள்
இன்றைக்கு பிரோகிராம் இதுதான். நேற்றைய தினம் ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி சேவிக்காதவர்கன்  இன்றைக்கு அதனை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு மற்ற சன்னிதிளை பார்க்கவேண்டும். எந்த க்ருப்பும் பாவனா சன்னிதிக்கு செல்ல வேண்டாம். காரணம் நேற்றையதினம் பலத்த மழை பெய்ததால் அங்கு டிராக்டர் ,ஜீப் போள்றவைகள்  போகாது. நேற்றைய தினம் போனவர்களின் டிராக்டர் சகதியில் மாட்டிக்கொண்டு இங்கிருந்து மற்றொரு டிராக்டர்  அனுப்பி  அந்த டிராக்டர் மக்களை  TOE பண்ணி இழுத்துக்கொண்டு வரவேண்டியதாயிற்று. இரவு 12 மணிக்குத்தான் அவர்கள் வந்து சேர்ந்தனர்.  போகவேண்டிய எல்லா சன்னிதிகளையும் மதிய ஆகாரத்துடன் முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு இங்கிருந்து பத்ராசலத்துக்கு புறப்பட வேண்டும்என்று அறிவுரை வழங்கினார்.
ஆம், முதல்  இரவு முழுவதும் அகோபிலத்தில் மழை பெய்து நாற அடித்ததை நான் சொல்ல மறந்துட்டேன்.
ஸ்வாமிகள் சொல்லியபடி எங்கள் பஸ்ஸில் ஏறி மேல் அகோபிலம் நோக்கி பயணமானோம். முதல் நாள் போலவே அவரவர்களுக்குத் தேவையான கம்புகளை பெற்றுக்கொண்டு  இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே
ஜ்வாலா  
ஜ்வாலா நரசிம்மர்
நரசிம்மர் சன்னிதியை நோக்கி பணத்தை துவக்கினோம்.
திருமங்கையாழ்வார் முதல் பாசுரத்தில் பாடியபடி
அங்கண் ஞாலமஞ்ச அங்கோர் ஆளரியாய்* அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால்* அடிக்கீழ்
செங்கணால் இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே*
என்று ஜ்வாலா நரசிம்மரைத் தான் பாடியிருப்பார் போலும்.
பூமியில் உள்ள அனைவரும் நடுங்கும் படி ந்ருசிம்மப் பெருமானாய்த் தோன்றி இரணியனின் உடம்பை கூர்மையான நகங்களைக் கொண்டு இரு பிளவாகப் பிளந்த புனிதன் எழுந்தருளி இருக்கும் இடம்,
ஜ்வாலா நரசிம்மர்  சன்னிதி
 எல்லோராலும் போகமுடியாதாம். ஆழ்வார் நாலாவது பாசுரத்தில்
தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே
தேவதைகள் தவிர மற்ற யாராலும் அணுகு முடியாத இடமான சிங்கவேள்குன்றமாகும். அப்படிப்பட்ட ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி  அடைந்தீர்களா?
எனக் கேட்கத்தோன்றுகிறதா?

பார்ப்போம் அடுத்த பகுதியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக