வெள்ளி, டிசம்பர் 15

இந்நின்ற தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன் அகோபிலம் பகுதி 11
பகுதி 11 ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி
திருமங்கையாழ்வார் பாடியபடி, ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி  தரிசிப்பது அவ்வளவு சுலபம் இல்லை தான்.இரண்டு வழியில் போகலாம். ஒன்று பவநாசினி ஆறு வழியா. மற்றொன்று மாலோல நரசிம்மர் சன்னிதி தரிசித்து விட்டு செல்லுதல்.
 ரெண்டுமே கடினமான பாதைதான். முதல் நாள் மழை பெய்திருந்தபடியால் பவநாசினி ஆற்றில் ஒருவேளை நீர்வரத்து அதிகமாக இருக்கலாம் என நினைத்து நாங்கள் மாலோல நரசிம்மர் வழியாகச் செல்ல தீர்மானித்தோம்.
முதலில் க்ரோட நரசிம்மர் சன்னிதி வரும்.அதிலிருந்து இடது பக்கத்தில் படிகளில் ஏறவேண்டும். கடினமான பாதைதான். வயதானவர்கள் ஏறுவது சிரமம் தான்.
நாங்கள் எட்டு பேர். எப்போதும் ஒரே குழுவா செல்வது வழக்கம்.அத இங்கேயும் கடைபிடிக்கலாம்ன்னு  நினைத்தோம். என் மனைவிக்கு ரத்தஅழுத்தம் அதிகம் என்பதாலஉன்னால அவ்வளவு உயரம் ஏற முடியுமாஎன்று முதல்லயே கேட்டுண்டேன்.”அதெல்லாம் என்னால முடியும் கவலைப் படாதீங்க,நிச்சயம் ஜ்வாலா நரசிம்மர தரிசனம் பண்ணுவேன்என்று உறுதியாச் சொன்னார்கள்.
க்ரோட நரசிம்மர்
க்ரோட நரசிம்மர் சன்னிதிய பார்த்துட்டு வெளியே வந்தோம்.'
 “இப்பகூட யோஜனை பண்ணிக்கோ உன்னால முடியுமான்னுஎன் மனைவிகிட்ட ஊர்ஜிதம் செய்து கொண்டேன்
க்ரோட நரசிம்மர் சன்னிதி
சரி மெதுவா மேலே ஏறலாம் என்று ஒவ்வொருவராக பக்கத்தில் உள்ள படிகளில் மேலே ஏற ஆரம்பித்தோம். பக்கத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் இருவரும்  மெதுவா மேல ஏறி வருகிறோம், நீங்கள் மேலே ஏறிக்கொண்டு இருங்கள்என்று சொல்லி அவர்களை மெதுவா போகச் சொன்னேன்.
மாலோல நரசிம்மர் சன்னிதி 

மாலோல நரசிம்மர் சன்னிதி  பக்கத்தில் தான் உள்ளது  
மாலோல் நரசிம்மர் 
மெதுவா மேலே ஏறி வாஎன்று மனைவியிடம் சொல்லி என்னுடன் கூட வந்தவர்களிடம் நீங்கள்  போய்க்கொண்டே இருங்கள், நான் என் மனைவியுடன் வருகிறேன்என்று சொன்னேன்.
இதில் எங்களுடன் வந்தவர்கள் வேகமா மேலே ஏறிவிட்டார்கள். நானும் என்  மனைவியும் மெதுவாக ஒவ்வொருபடியாக ஏறிக்கொண்டிருந்தோம்.   என் மனைவி எப்பலெல்லாம் படிகளில் ஏற முடியவில்லையோ அப்பலெல்லாம்
எங்களுடன் கூடவே வந்த இவர் 
 என் மனைவியின் கையை பத்திரமாக பிடித்து மேலே ஏற்றிவிடுவார். “நீங்கள் முன்னால் செல்லுங்கள்என்று எவ்வளவு தடவை சொன்னாலும், சிரித்துக்கொண்டேஆகட்டூம் போகிறேன்என்று சொல்லி மழுப்பிவிடுவார். நாங்கள் ஜ்வாலா நரசிம்மரைப் பார்த்துவிட்டு வரும் அன்பர்களிடம் இன்னும் ரொம்பதூரம் போகவேண்டுமா”, என்று  கேட்டால் அவர்களுக்கு கண்ஜாடை காட்டி இன்னும் அஞ்சு நிமிஷத்தில் போயிடலாம் இல்லையாஎன்று இவரே அவர்களுக்கு பதிலாக சொல்லி என் மனைவியை சமாதானம் செய்வார்  என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எங்களுடன் வந்தவர்களை கடைசியில் ஜ்வாலா நரசிம்மர் சன்னிதியில் தான் பார்த்தோம். ஆனால் இவர் எங்களை ஒரு வினாடி கூட விடவில்லை. அவர்எங்கள் பஸ்ஸில் வந்தார் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதால்  கடைசியில் அவரின்   பெயரைக் கேட்டோம், “இந்த   தூணில் இருப்பானா என்று இரணியன் கேட்டதுக்கு

                   சாணிலுமுளன் ஓர்தன்மை அணுவினைச் சத கூறிட்ட

                      கோணினுமுலன்  மா மேருக்குன்றினுமுளன்  இந்நின்ற

                   தூணிலும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன்

ஸ்ரீ நாராயணன்
என்று பிரஹலாதன்  தான்   சொன்னபடி வருவான் என்று நம்பிய அந்த சாட்ஷாத் நாராயணன் தான் அவர் பெயராம்!!!!!

என் மனைவியுடன் நாராயணன் 

ஒரு வழியாக மாலோல  நரசிம்மர்  சன்னிதியை தரிசித்துக்கொண்டு  மீண்டும் மேலே ஏறினோம் .நிறையபடிகள். வழுக்கல்கள். அதுவும் கடைசி 200 படிகள் இருக்கே, கஷ்டம் தான். வழியில் மிக உயரமான தூண் போன்ற பாறை!!!
ஸ்தம்பம்
ஸ்தம்பம் என்று பெயராம்!!
அதுதான் நாராயணன் சிங்கவடிவில் தூணைப் பிளந்த இடம் ஸ்தம்பம் என்கிறார்கள். அதனை எளிதில்  அடைய முடியாதாம்.
பின்னால் அருவி 
அருவி

ஜ்வாலா அடைவதற்குள் பவநாசினி அருவியாக வீழ்கிறது. பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது
அதைக் கடந்து ஜ்வாலாவை அடைவதில் உள்ள ஆனந்தம் விவரிக்கமுடியாது.
ஜ்வாலா நரசிம்மர்
ஒரு வழியாக தரிசனம் முடிந்து கீழே இறங்கினோம். இறங்கும்போது ஆற்றின் போக்கின் வழியா இறங்கினோம். அது தனி அனுபவம் தான். யாரும் மிஸ் பண்ணிவிடாதீர்கள்,
சாதாரணமாக ஜ்வாலா நரசிம்மரை தரிசித்து விட்டு வர 4 மணி நேரம் ஆகும்.அதற்கு ஏற்றாற்போல் உங்கள் பயணதிட்டத்தை வகுத்துக் கொள்ளவும்.
கீழ் அகோபிலம் வந்து ஆகாரத்தை முடித்துக் கொண்டு வந்தோம். ஸ்வாமிகள் மாலை 3 மணி அளவில் எல்லா பஸ்களும் கிளம்பி பத்ராஜலம்  அடைய வேண்டும்என்று ஆணையிட்டு விட்டார்.
அப்ப மீதியுள்ள நரசிம்மர்  சன்னிதிகளை  தரிசனம் செய்தோமா?

பார்ப்போம் அடுத்த பகுதியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக