அகோபிலம் பகுதி
9
சென்ற பகுதியில் பஸ் ஏறி அறையை நோக்கிச் சென்றீரகளே , என்னவாயிற்று என் று கேட்கத் தோன்றுகிறதா?
என்னவாச்சு இத்தனை நேரமா ஆகும் அறைக்குச் செல்ல?
ஆம், கிட்டத்ததட்ட அரைமணிநேரம் ஆயிருக்கும், வாலண்டியர் எல்லோரது தாக்கத்தையும் கலைத்து, “எழுந்திருங்கள் நமது தங்குமிடம் வந்துவிட்டது,
காலை ஆறு மணிக்கெல்லாம் டிபனை முடித்துக்கொண்டு பஸ்ஸுக்கு வந்துவிடுங்கள். நாளைக்கு
மீதி உள்ள இடங்களை தரிசித்து விடுவோம்”
என்று சொல்லிவிட்டு இறங்கினார்.
நமக்கு எந்த அறை கொடுப்பார்கள்,
என்று எங்களுக்குள்ளேயே பஸ்ஸை வீட்டு இறங்கிப் பார்த்தால் ஒரே ஷாக்.
என்ன தெரியுமா?
காலை காலைக்கடன்களை முடித்துவிட்டு கிளம்பினோமே அதே கல்யாண மண்டபம் தான்!!!!
இது தான் இத்தனை பேருடன் வரும் போது உண்டாகும் சிரமம். தனித்தனி ரூம்கள் இந்த மாதிரி சிறிய ஊர்களில் கிடைப்பது சிரமம் வேறு வழியில்லை எப்படி கல்யாணம் ஆனபிறகு ஒருவரு க்கொருவர் அட்ஜட் செய்து கொள்கிறோமோ,
அதுமாதிரி, ஒருவழியா மண்டபத்தின் உள்ளே சென்று எங்கு ஃபேன் இருக்கோ அதன் அடியில் படுக்கை விரிப்பை விரிக்கலாம் என்று தேடினோம்.
பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி பேசுவாறே
, “ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே”,
என்று, அது மாதிரி,
ஃபேன் அடியை நோக்கி.
கிடைத்ததா? பார்ப்போம் அடுத்த பகுதியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக