பத்ராசலம் ராமர் |
அனு யாத்திரை தொடர்ச்சி பத்ராசலம்
சென்ற பகுதியில் அகோபிலத்தில் மற்ற
நரசிம்மர் சன்னிதிகளை பாரத்தீரகளா என்ற கேளவியுடன் நிறுத்தியிருந்தேன்.
என்னத்த சொலறது, ரெண்டு நாட்கள்னு
பேரு, ஆனா அகோபிலத்தில இருந்ததோ ஒண்ணறை நாள் கூட இல்லை. எப்படி எல்லா
சன்னிதிகளையும் பாரக்கறது.
மற்றவைகளை அடுத்த முறை பார்த்துக்
கொள்ள வேண்டியதுதான், எங்களுக்கு கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்ற திருப்தியுடன்
பத்ராசலம், அதான், எங்களின் அடுத்த திவ்ய தேசம், அதை நோக்கி பயணம்செய்ய பஸ்ஸுல ஏறி
அமரந்தோம்.
அகோபிலம்-பத்ராசலம் தொலைவு |
பத்ராசலம், ஆமாங்க, பக்த ராமதாஸ், ஊர்,
அதுக்குத் தான் பயணமானோம்.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு,
அகோபிலத்தில் இருந்து மாலை 4 மணிக்கு மேல பயணத்தை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட 510
கிலோமீட்டர் தொலைவு பத்ராசலம், அகோபிலத்தில் இருந்து. இரவு 8 மணிவாக்கில ஒரு
பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டது எல்லா பஸ்களும். அங்கு தான் எல்லா பெண்
பயணிகளும் சிரம பரிகாரம் செய்து கொண்டனர். இந்த மாதிரி 1400 பேர் செல்லும் போது
ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சிரம பரிகாரம் செய்து கொள்ள முடியும், ஆனால் பெண்கள்?
ஸ்வாமிகள் அதனைப்பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்!!!
பஸ்ஸுலயே கொண்டுவந்த ஆகாரத்தை
முடித்துக்கொண்டு மீண்டும் பயணம் துவங்கியது.
பொலபொலவென்று சூரியன் வந்துவிட்டான் பத்ராசலம்
அடையும் போது.
கோயில் அமைப்பு |
ரொம்ப பெரிய ஊர் மாதிரி தெரியவில்லை.
முன்னாலேயே போன ஸ்வாமிகளின் ஸிஷ்யர்கள் எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை காண்பிக்க,
எங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு அறைகளுக்குள் சென்றோம்.
பத்ராசலம் கோதாவரியின் கரையில் அமைந்த
அழகான ஊர். முன்னரே எங்களுக்குச் சொல்லி இருந்தபடி, மாற்றிக்கொள்ளக்கூடீய உடைகளை
மட்டும் எடுத்துக்கொண்டு, கோதாவரி நதியை நோக்கி ஆட்டோவில் பயணமானோம்.
நிறைய சத்திரங்கள், தங்கும் விடுதிகள்
இருக்கின்றன. கோயில் நிர்வாகமே
முன்னரே பதிவு செய்து கொள்ளக்கூடிய
வகையில் (internet) சத்திரத்தை நடத்துகிறது.
தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நதிக்கரையில் நங்கள் |
நதிக்கரையில் ராமர் அம்பு விடும் காட்சி |
மிகவும் அகலமான நதி கோதாவரி ஆறு. படித்துறைகள் மிக நேர்த்தியாக உள்ளன. கிட்டத்தட்ட 50-60அடி உயரத்திற்கு கரை. அடிக்கடி கோதாவரியில் வெள்ளம் வந்து ஊருக்குள் வந்துவிடாமல் இருக்க அவ்வளவு உயரம் போலும். இக்கரையில் இருந்து அக்கரை செல்ல படகு சவாரி உள்ளது. ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் இப்படித்தான் பயணப்பட்டு இருப்பார்கள் போலும்.
கோதாவரி நதிக்கரையில் ஸ்வாமிகள் உரை |
நாங்களும் நதியில் நீராடினோம். புது அனுபவம். சுகமாகத்தான் இருந்தது.
பத்ராசலம் என்ன விசேஷம்?
பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக