புதன், ஜனவரி 3

இராமானுஜா அனு யாத்திரை பத்ராசலம் பகுதி 2இராமானுஜா அனு யாத்திரை பத்ராசலம் பகுதி 2
பத்ராசல ராமர். மேல் கரத்தில் பாஞ்சஜந்யம், மேல இடது கரத்தில் ஶ்ரீசுதரசன சக்கரம், கீழ் இடது கரத்தில் வில், கீழ் வலது கரத்தில் அபயஹஸ்தம் கூடிய அம்பு இவற்றுடன் பிராட்டி ஶ்ரீதையாக ஆதிசேஷன், வில் அம்புகளுடன் லக்ஷமணனன் ஆகியோருடன் வித்தியாசமான கோலத்தில் எப்படி பக்த ராம்தாஸுக்கு காடசியளித்தாரோ அதே கோலத்தில் நமக்கும் காட்சியளிக்கிறார்.
சுவையான கதை உண்டு.
ராமர், சீதை, லக்ஷ்மணன் மூவரும் 14 வருஷமாக பல இடங்களில் இருந்து விட்டு பஞ்சவடி அருகே உள்ள கோதாவரி கரைக்கு வந்து,ஒரு குன்றின் மீது இளைப்பாருகிறாரகள். அடுத்த ஜன்மத்தில் தன் பக்தனாகப் பிறந்து விஷ்ணுபக்திக்கு எடுத்துகாட்டாக விளங்குவான் என்று ஆசீரவாதித்தாராம்.
அடுத்த ஜன்தமத்தில் பத்ர மகரிஷியாகப் பிறந்து, பகவானை நோக்கி தவம் செய்தாராம். பக்தியை மெச்சி பகவானும் பிராட்டி, கருடன்,ஆதிசேஷன், விஷ்வக்கஷேணர் சகிதம் காடசியளித்தாராம். அனுமனும் இங்கே வர, இடது தொடை மீது வீற்றிருந்த பிராட்டியுடன், லக்ஷ்மணன் கூடசேவை சாதித்த ராமனின் திருவடியை தன் தலைமேல் தாங்கவேணும் என்று வேண்ட ,அவ்வாறே எல்லா பக்தர்களுக்கும் காட்சி அளிக்க வேணும் என்றும் வேண்டினாராம். இப்படியாக பத்ரன் பத்ராசலமாக உருவெடுத்தார்.
காலப்போக்கில் இந்த திருக்கோயில் மறைந்தது. 17ம் நூற்றாண்டில் தம்மக்க என்ற மலைஜாதிப் பெண்ணின் கனவில் பத்ராசலராமன் சேவை சாதித்து தான் புற்றுக்குள் இருக்கும் இடத்தை காண்பித்து, அவரை வெளியே எடுத்து தன்னால் முடிந்த கைங்கர்யங்களை செய்து வந்தாளாம்.
அந்த இடத்தை ஆண்டு வந்த “தானிஷா” என்ற மன்னனிடம் வேலை பாரத்துவந்த கோபண்ணா என்ற மந்திரிக்கு வேண்டியவர், இவர் மலைமேல் வீற்றிருக்கும் ராமரை தரிசித்து, அவருக்கு கோயில் கட்டவிழைந்தார். கோயில் கட்டுவதற்கு தாம் வசூலித்து வந்த வரிப்பணத்தை பயன்படுத்தினாராம். ராம்பிரானுக்கு ஆபரணங்கள் போன்றவைகள் வசூலித்த வரிப்பணத்தில் இருந்து செய்தாராம். இதனைக் கேள்விப்பட்ட அரசன் அவரை சிறைப்பிடித்தான். உண்மையை ஒப்புக்கொண்ட கோபண்ணாவை 12 ஆண்டுகள் சிறையில் அடைந்தான் அரசன். சிறையில் இருந்தபடியே , தற்போது ராமதாஸர் என்று அழைக்கப்பட்ட கோபண்ணா, நித்திய  உறசவங்களை நடத்தினாறாம்.
கோயில் கொண்டிருந்த ராமனும் லக்ஷ்மணனும் காவலர்கள் வடிவு எடுத்துக்கொண்டு அரசனின் கனவில் வந்து, ராமதாசர் செலவழித்த 12 லகஷ்ம் தங்க காசுகளை திருப்பிக்கொடுத்தாரகள், மேலும் ராமதாஸரை விடுவிக்கவேண்டும் என்றனர். உண்மையை உணர்ந்த அரசன், ராமதாஸரை விடுவித்து, அவரிடம் மன்னிப்பு கேட்டு, அந்த இடங்களை ராமதாஸருக்கே கொடுத்தானாம்.
ராமதாஸர் 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தை 24 எழுத்துக்கள் கொண்ட ஸ்லோகங்களால் பாடியிருக்கிறார். தன் இறுதி காலம் வரை ராமனுக்கு தொண்டுபுரிந்தாராம்.
இன்றும் கூட ராமதாஸர் பயன்படுத்திய பொருட்கள் கோயிலில் காடசிப்பொருட்களாக மியுசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மாற்றிக்கொள்ளக் உடைகளை மட்டும், எப்போதும் போல, எடுத்துக்கொண்டு, குளியல் அறைகளைத் தேடி, ஓடினோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக