வெள்ளி, ஜனவரி 26

இராமானுஜா அனு யாத்திரை: பூரி ஜகன்னாதர். முதல் பகுதி


இராமானுஜா அனு யாத்திரை: பூரி ஜகன்னாதர்.
ஶ்ரீகூர்மத்தில் இருந்து கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பூரி ஷேத்ரம். இரவு பூரா பயணம் செய்து விடியற்காலை பூரி வந்து சேர்ந்தோம். விடிந்தபிறகு ஊருக்குள் பஸ்களை விடமாட்டாரகள் என்பதால், விடிவதற்கு  முன்னாலேயே வந்துவிட்டோம். வரும் வழியெல்லாம் நல்லமழை.
அதோடேயே சாமான்களை இறக்கி எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைகளை அடைந்து சிரம பரிகாரம் செய்து கொண்டோம். மூன்று பேருக்கு ஒருஅறை ஒதுக்கியிருந்தார்கள். எனது நீண்டநாட்கள் கனவு பூரி ஜகன்னாதரை தரிசிக்க வேண்டும் என்பது. அது நிறைவேற வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது என்பதை நினைக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
மழை விட்டவுடன் ஸ்வாமிகள் சொல்லியிருந்த சக்கர தீர்த்தத்தில் நீராடலாம் என்று தயாராக இருந்தோம். சக்கர தீர்த்தம் என்பது கடற்கரை தான். ஆனால், மழை நிற்பதாகத் தெரியவில்லை. இது சரிப்பட்டுவராது என்று தீர்மானம் செய்தோம். சரி அவரவர் அறையிலேயே நீராடி, காலை ஆகாரம் ஏற்பாடு செய்திருந்த இடத்தை நோக்கி ஆட்டோவை நகர்த்தினோம். சரியான மழை, விடுவதாகத் தெரியவில்லை. பக்கத்திலேயே உள்ள ஹோட்டலில் காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு பூரி ஜகன்னாதரை தரிசிக்க ஆவலாகச் சென்றோம்.
கூட்டம் என்றால் அவ்வளவு கூட்டம்!!
ஒவ்வொருவராக வரிசையில் ஆமை வேகத்தில் நகரந்தோம்.
பெருமாளை அருகில் பார்க்க வரும்போது திரையிட்டுவிட்டாரகள், பெருமாளுக்கு அமுது படைக்க!
காத்திருப்போம் அரைமணி நேரம்.
கண்ணனின் லீலைகளைப் சித்திரமா விதானத்தில் வரைந்து இருந்தார்கள். பார்க்க அருமையாக இருந்தது. ஒடிஷாவைச் சேர்ந்த பல இடங்களில் இருந்து வந்திருந்த யாத்திரிகர்கள் அவர்கள் பாஷையில் பெருமானை பஜனை செய்துகொண்டு அந்த இடத்தை கலகலப்பாக்கிக்கொண்டு இருந்தார்கள். அரைமணி, போனதே தெரியவில்லை.
திரையை விலக்கினார்கள்.
சுபத்ரா, கிருஷ்ணர், பலராமர் ஆகிய மூவரின் மரத்தால் ஆன விக்கிரஹங்கள் ஹாரத்திக்கு இடையே ஜொலித்தன.
என்ன, மரத்தால் ஆன விக்கிரஹங்கள் என்று சொல்லுகிறீர்களே!!
நிஜமாகவா!!
ஆம், மரத்தால் ஆன விக்கிரஹங்கள் தான்!!
இந்த ஷேத்ரம் புனிதமானது. திருமாலின் சங்க வடிவத்தில் இருக்கும் இந்த ஷேத்ரம், சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகச் சொல்கிறார்கள். ஶ்ரீமன் நாராயணன் விடியற்காலையில் பதரியில் நீராடி, த்வாரகாவில் வஸ்தரம் தரித்து, பூரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறாராம்.
சிறந்த விஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்னன் என்ற அவந்தி நகர் அரசன், நாரதர் சொன்னதைக் கேட்டு, நீலமலையில் மண்ணால் மூடப்பட்டு இருக்கும் நீல மாதவனை கனவில் கண்டார். நாரதர் சொல்லியபடி, கிழக்கு கடலில் ஒரு *தாரு* என்ற மர்ம மிதந்து வருவதைக் கண்டார். அதனை ஒரு வஸ்திரத்தில் சுற்றி வைத்தார். அசரீரி சொல்லியபடி, ஒரு தச்சன் லந்து, செதுக்கும் ஒலி வெளியே கேட்காமல் வாத்தியங்கள் ஒலிக்க, செதுக்கத் துவங்குகிறான்.பதினைந்து நாட்கள் ஆனதும் ஒலி நின்றுவிடுகிறது. மன்னன் எவ்வளவு தடுத்தும் கேட்காதத ராணி, விக்கிரஹங்கள் பாதி முடிந்த நிலையில், அசிரீரி அப்படியே தரிசனம் கொடுப்பார் என்றதால்,அன்று முதல் ஜகன்னாதப்பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார்.

கண்ணனின்அஷ்ட மகிஷிகளுக்கு, கோகுலத்தில் நடந்த ரச லீலைகளை ரோகிணி தேவி, காவலுக்கு ஸுபத்ராவை நிறுத்திவிட்டு, விளக்கிக் கொண்டு இருக்கும் போது, கண்ணன், பலராமன் வந்து நின்றதைகவனிக்கவில்லை. இயல்பு நிலையை அடைந்த பார்த்த போது, நாரதர் அங்கு வந்து, ஸுபத்ரா, பலராமன், கிருஷ்ணன் மூவரும் இருந்த திருக்கோலத்த பார்த்த நாரதர், பக்தர்களுக்கு காட்சி அளிக்க வேண்ட, அவ்வாறே இன்றும் காட்சியளிக்கின்றனர்.
சுபத்ரா, கிருஷ்ணன், பலராமர் ஜகன்னாதர், ஆகியோரது திருமேனி மாற்றம்.
எந்த ஆண்டில், ஆனி மாதத்தில், இரண்டு பெளர்ணமிகள் வருகிறதோ, அந்த ஆண்டு, இவர்கள் திருமேனிகள், இதற்கென நியமனம் பெற்று இருக்கும் பூசாரிகள், சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் ப்ராசி நதிக்கரையில் காகாத்புர் காடுகளில் தகுந்த வேப்பமரங்களைத் தேடி, சில விஷேஷ அடையாளங்கள் கொண்டவைகளை எடுத்து வந்து கோயலா வைகுந்தத்தில்
அதற்கென அமைந்த தச்சர்கள், பகவான் திருவுருவங்களைச் ணெதுக்குகிறார்கள். அமாவாசை அன்று, இரவு கரப்பகிரஹத்தில் பழைய திருமேனிக்கு அருகில் கொண்டுவந்து வைப்பார்கள்.அன்று இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மூத்த பூசாரி கண்களை மூடிக்கொண்டு, கைகளில் துணியைச் சுற்றிக்கொண்டு, பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரம்மபதாரத்தத்தை புது திருமேனியில் பொருத்துவாரகள். பின் பழைய திருமேனியை வைகுந்தத்தில் பூமிக்கு கீழே எழுந்தருளப்பண்ணுவாரகள். இந்த சடங்குகள் சுமார் நான்கு மாதங்களுக்கு நடைபெறுமாம். முழுவதும் ரகசியமாக நடத்தப்படும். பழைய திருமேனிக்காக தாயாதிகள் என்ற வரக்கத்தினர் 13நாட்கள் துக்கம் அனுஷிப்பார்களாம். இந்த உற்சவம் நடந்த முந்தைய வருஷம் 1996 ஆம் ஆண்டாம்.
வேறு என்ன சார் பூரில விஷேஷம்?
பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக