இராமானுஜ அனு யாத்திரை பத்ராசலம் பகுதி
3
நதிக்கரை பார்க்கவே ரம்மியமாக
இருந்தது.
சூரியன் அப்போது தான் ஸ்நானம் பண்ண வந்து உள்ளான். அகலமான நதி. படகு
சவாரி இருந்தது.

நிறையபேர் இக்கரையில் இருந்து அக்கரை
நோக்கி பயணப்பட்டார்கள்.


முன்னே சொன்ன மாதிரி கோயில் ஒரு குன்றின் மீது
அமைந்துள்ளது. நிறைய படிக்கட்டுக்கள் இல்லை. முதலிலேயே ராமர் பாதம்
தரிசித்துக்கொண்டோம். மூலவர் ராமர் சன்னிதி, முன்னாலேயே சொன்னமாதிரி, ராமர், சீதை,
ஆஞ்சநேயர் ஆகியோருடன் ஆசீர்வதிக்கிறார்.
விசாலமான கூடத்தில் சீதா
கல்யாணத்துக்கு ஸ்வாமிஜி ஏற்பாடு செய்து இருந்தபடியால், நாங்கள் எல்லோரும் அங்கேயே
அமர்ந்து பங்கெடுத்துக்கொண்டோம்.
மதியம் அருகில் உள்ள கல்யாணமண்டபத்தில் கல்யாண
சாப்பாடு முடித்துக்கொண்டு அறைக்கு வந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டோம். மாலையில்
ஸ்வாமிஜி உபந்யாசம் முடிந்து ஆகாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் பயணம்,
சிம்மாசலம் நோக்கி.
சிம்மாசலம்!!!!!!
முக்கியமான ஷேத்ரம், எப்படி என்கிறீர்களா?
பார்ப்போம் சிம்மாசலத்தில் அடுத்த
பகுதியில்!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக