இராமானுஜ அனு யாத்திரை சிம்மாசலம்.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள
திவ்யதேசங்களில் இதுவும் முக்கியமானதாகும்.
இங்கு ஶ்ரீமன் நாராயணன் வராக
நரசிம்மராக அவதரித்தார்.
ஷேத்திர விஷேஷம்.

பின்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற
சக்கரவர்த்தி இந்த இடத்தை கடந்து செல்லும் போது, அவரது விமானம் தடைபடுகிறது. என்ன
காரணம் என்று திகைக்கிறார். கனவில் வந்து, “நான் இங்குள்ள காங்கதாரா என்ற தீரத்தத்தின்
அருகில் உள்ள புற்றில்” இருப்பதாகச் சொல்ல, அவரை எழுந்தருளப்பண்ணி, காங்கதாரா தீர்த்தத்தில்
திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்கிறான். அந்த நாள் அக்ஷ்யதிருதியை எனப்படும்
நாள். அந்த நாள் மட்டும் பெருமான் நிஜரூப தரிசனத்தில் காட்சியளிக்கிறார்.
மற்ற நாட்களில் சந்தனகாப்பு தரிசனம்
தான்.
சந்தனகாப்பு என்றால் எவ்வளவு தெரியுமா?
வைகாச சுக்ல த்ருதீயை, வைகாச பவுர்ணமி,
ஜ்யேஷ்ட பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி என்று வருஷத்தின் நான்கு தடவைகள், சுமார் 500
கிலோ சந்தனம் சாத்துகிறாரகள். எல்லா நாட்களும் சந்தனகாப்புடன் காட்சியளிக்கிறார்
என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
வேளுக்குடி ஸ்ஸவாமிகளின் இராமானுஜ அனு
யாத்திரை இரண்டாம் பகுதியில், அகோபிலம், பத்ராசலம் ஆகியவற்றைப் தரிசித்துவிட்டு,
பத்ராசலத்தில இருந்து இரவு
புறப்பட்டோம் என்று முந்தைய பகுதியில் முடித்து இருந்தேன். கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தொலைவு உள்ளது பத்ராசலத்தில் இருந்து. காலை7
மணிவாக்கில் வந்து சேர்ந்தோம். சுற்றி மலையாக உள்ளது ஊர். எங்களுக்கு ஒரு ஹால்
மற்றும் சிறிய அறை கொடுத்தார்கள். எல்லோரும் காலைக்கடனகளை முடித்துக்கொண்டு உடனே
கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியதால், எல்லோரும் குளிப்பதற்கு அலைந்தோம்.
எங்களுக்கு முன்னர் வந்து குளித்து தயாராக இருந்தவர்களிடம் குளியல் அறையை
பயன்படுத்த அனுமதிக்க கேட்டோம். என்னவோ அறை தங்களது போன்று சிலர் பயன்படுத்த
யோசித்தனர்
எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள்,
இவர்கள் எல்லாம் நாலு பேரோடு செல்ல தகுதியற்றவர்கள்.
ஸ்வாமிகள் அடிக்கடி சொல்வார்,
“கூடியிருந்து குளிரவேண்டும” என்று. அதனை புரிந்துகொள்ளாதவரகள். இவர்களை
என்னவென்று சொல்வது?
எப்படியோ, அடித்துபிடித்து,
குளித்துவிட்டு எங்கள் பஸ்ஸிலியே ஏறி சிம்மாசலம நோக்கி பயணமானோம். சிறிய மலையின்
மீது கோயில் உள்ளது. எக்காலத்திலும் பக்தர்களின் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது
போல.

தங்குவதற்கு தேவஸ்தானம் நிறைய அறைகள் கட்டி உள்ளார்கள். பெருமானை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அருகிலேயே சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். வெளியே வந்து காங்கதாரா அருவி, எங்கிருந்து வருதுன்னு தெரியல, ஐந்து இடங்களில் சிறிய முகத்துவாரம் வழியாக வருவதை தலையில் புரோஷித்துக்கொண்டோம்.
![]() |
சிம்மாசலம் பெருமாள் |
மறுநாள் ஶ்ரீகூர்மம். முக்கியமான
ஸ்தலம்.
எப்படின்னு கேட்கிறீரகளா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக