வாரணா மற்றும் அசி என்ற இரண்டு நதிகள் சங்கமிப்பதால் இந்த இடத்துக்கு வாரணாசி என்று பெயர் பெற்றது.
முக்தி தரும் ஷேத்ரங்கள் இந்தியாவில் ஏழாம். அதில் வாரணாசியும் ஒன்று.
சரீரத்தை இந்த ஊரில் நீக்க நேரநதால் நிச்சயம் முக்தி தானாம். காசி, காசி என்று நினைத்தாலே முக்தி கிடைக்குமாம். பனாரஸ் என்றும் இது அழைக்கப்படுகிறது.
நிறைய பேர் இராமேஸ்வரம் கடலில் குளித்துவிட்டு அங்கிருந்த மண்ணை எடுத்து வந்த கங்கையில் கரைக்கவேண்டும் என்று பயணிக்கிறாறகள்.
புராணம் என்ன சொல்லுகிறது?
சிவபெருமான் தனது தந்தையின் ஐந்து சிரஸ்களில் ஒன்றை கிள்ளிவிடுகிறார். அதனால ப்ரமஹத்தி சாபம் பெற்று, கையில் கபாலம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. அதனை எப்படி நீக்குவது என்று தெரியாமல் 12 ஆண்டுகள் பத்ரி, குருஷேத்திரம் என்று பல இடங்களில் அலைகிறார். கடைசியாக பாகீரதி என்கிற இந்த வாரணாசி ஷேத்ரத்தை அடைய, கபாலம் உடைந்து ப்ரமஹத்தி தோஷம் நீங்குகிறது. இவ்விடம் “கபால மோக்ஷ தீர்த்தம்” எனப் பெயர்பெறுகிறது. சிவபெருமான் ஸீமஹாவிஷ்ணுவிடம் தனக்கு நித்ய வாஸஸ்த்தலமாக இந்த இடம் இருக்க அனுமதி பெற்று காசி விஸ்வநாதராக இங்கேயே வாசம் செய்கீறார். அந்த சமயத்தில் விஷ்ணு கண்ணில் இருந்து ஆனந்தக்கண்ணீர் ஏற்பட்டு, ஒருதுளி கீழே விழுந்தது. அந்த இடம் பிந்து ஸரஸ் என்று பிந்து மாதவன் என்று அழைக்கப் படுகிறார்.
இந்த ஊரில் மரணம் அடைந்தவர்களை தகனம் செய்வது விஷேஷம். இறந்த உடல் மீது நாம் பட்டுவிட்டால் தீட்டு கிடையாது என்பார்கள்.
கங்கை : கங்கையில் ஒரு போட்டில் ஏறிக்கொண்டு பயணம் செய்வது சுகமான அனுபவம்.
கங்கை படித்துறைகள் |
இதில் முக்கியமானது, பஞ்ச கங்கா காட், மணிகர்ணிகா காட், தஸ் அஸ்வமேதா காட், வருணாஸங்கம் காட் போன்றவைகள்.
வருணா நதி கங்கையுடன் கலக்கும் வருணா சங்கமம் காட்டின் படித்துறையில் ஆதிகேசவன் கோயில் உள்ளது.
யமுனா,ஸரஸ்வதி, கிரணா, மற்றும் தூதபாபா நதிகள் கங்கையோடு கலக்கும் படித்துறையின் மேல் பிந்து மாதவன் சன்னிதி உள்ளது.
மணிகர்ணிகா காட்டின் மேல் மணிகர்ணிகா குண்டம் உள்ளது. இந்த குண்டத்திண் தண்ணீர் எட்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியேறுகிறது.அங்குள்ள ஒரு துவாரத்தின் வழியா நீர் வந்து நிரம்புகிறது.
ப்ரம்மா பத்து அஸ்வமேதயாகம் செய்த இடம் தஸ் அஸ்வமேத காட்.
அஸி நதி கங்கையோடு கலக்கும் இடம் அஸி ஸங்கம் காட்.
அடுத்த தடவை காசி க்கு வரும் போது கங்கையில் பயணம் செய்ய மறந்து விடாதீர்கள்.
காசி விஸ்வநாதர் ஆலயம்.
நிறைய ஆலயங்கள் உள்ள காசியில், முக்கியமானது காசி விஸ்வநாதர் ஆலயம். சந்து, சந்து, அவ்வளவு சந்துக்குள் அமைந்துள்ளது இந்த ஆலயம்.
அது மட்டுமா, அவ்வளவு போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் உள்ளே அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. நாங்க கோண்டுபோன, அதாங்க எங்க கவசகுண்டலம், சாப்பிடும் தட்டு இருந்த பைய கூட உள்ளே கொண்டு போக விடாம, நாங்க தவித்த கதை தனிக்கதை. பின்னால என்னாச்சு நீங்க கேட்பது காதில் விழறது, பதில் அப்புறம்!!!
என்னமோ பெரிய பீடத்தில் காசி விஸ்வநாதர் இருப்பார்ன்னு பாரத்துண்டு போகாதீங்க!! கீழேயே தான் இருப்பார். பார்க்க மறந்துவிடாதீரகள்.
எந்த கேட் வழியா உள்ளே நுழையறோம் அப்படிங்கிறதப் பொறுத்து, நாம நடக்கற தூரம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.
எத்தனை கடைகள!!
சுற்றி மசூதி. அதற்குள்ள யாரும் நுழைய முடியாத மாதிரி பலத்த கம்பிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அங்கங்க இருக்கும் பாதுகாப்பு வளையத்தைக் தாண்டினால் குறுகிய வாசல் வழியா காசி விஸ்வநாதர் சன்னிதி. அவரவர்கள் கொண்டுவரும் பால அவர்களே அபிஷேகம் செய்து கொள்ளலாம். தரையிலேயே காசி விஸ்வநாதர். எங்கேயாவது பார்த்துக்கொண்டு வந்தால் விஸ்வநாதரை பார்க்க நேரம் கிடைக்காது. அதனால நமது மனம், அவரையே சிந்தித்துக்கொண்டு இருக்கவேண்டும்.
பக்தர்களின் பால் மற்றும் நீர் ஆகியவற்றை அபிஷேகம் ஏற்றுக்கொண்டு காட்சியளிக்கிறார்.
கூட்டம் அலைமோதுகிறது. உள்ளே உள்ள சன்னிதிகளை தரிசித்துக்கொண்டு மற்றொரு வாசல் வழியே வெளியே வந்தால் சிறிது தொலைவில் அன்னபூர்ணா கையில் கரண்டியுடன் உலகுக்கு அன்னம் இடும் கோலத்தில் அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். அவரையும் தரிசித்துக்கொண்டோம்.
அந்த சந்தின் வழியாக சிறிது தொலைவில் நகரத்தார் கட்டியுள்ள காசி விசாலாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. அதையும் தரிசனம் செய்தோம்.
முன்னறே சொன்னேனே எங்க கவசகுண்டலம எல்லாம், அதாங்க சாப்பிடும் தட்டு அடங்கிய பையை செக்யூரிடி எடுத்து வைத்துக்கொண்டுவிட்டாரகள் என்று, அதனை திரும்பப் பெற, மீண்டும் கேட்டுக்கு வந்து எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் பேசி உள்ளே சென்றோம்.
இதற்கு நடுவில எங்களோடு வந்தவர்களை, ஸ்வாமிகள் உபன்யாசம் செய்யக்கூடிய பிந்துமாதவன் சன்னதிக்கு செல்லும்படி பணித்தோம். அவர்களுக்கு வழிய காணபித்துவிட்டு, நானும் என் மனைவியும் மட்டும் தட்டு அடங்கிய பையை பெற்றுக்கொண்டு மீண்டும் கங்கைக்கரைக்கு வந்தோம். கங்கைக் கரையில் இருந்து பிந்தமாதவன் சன்னதிக்கு படகில் செல்ல விசாரித்தோம். நாங்க இரண்டு பேர் என்பதால் அதிகமான தொகையை (எங்களுக்கு அதிகமா தோன்றியது) படகு ஓட்டுனர் கேட்டார். அப்பத்தான் பர்ஸ பார்த்தேன். அவ்வளவு தொகை இல்லை. விஷயத்தை எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் பொளந்து தள்ளினோம்.
புரிந்துகொண்டு சிரித்தார். சின்ன பையன் தான். பிரகாஷ் என்று பெயராம், பின்னால போட்டில் போகும் போது தெரிந்து கொண்டேன், “ஏறுங்கள்” என்று கையால் சைகை செய்தார்.
அவருக்கு தகப்பனார் கிடையாது, தாயார் மட்டும் தான். அவருக்கு நான்கு தங்கைகள். படிப்பு அதிகம் இல்லை. இவர் சம்பாதித்துத் தான் வாழ்க்கை நடக்கிறது. வரும் வருமானத்தில் ஒரு பகுதியை தாயாரிடம் கொடுத்து விடுவாராம். அதை வைத்து தான் குடும்பத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இதெல்லாம் பிரகாஷ் சொல்ல கேட்டுக்கொண்டேன். இது மட்டுமா?
வாழ்க்கை என்ன சார், இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால்!!
எத்தனை பணம் இருந்தாலும் போகும் போது எடுத்துண்டு போக முடியுமா? ஆறடி நிலம் தானே சொந்தம். அப்படியெல்லாம் தத்துவம் பேசிக்கொண்டே படகை ஓட்ட ஆரம்பித்தார் பிரகாஷ்.
அசந்துவிட்டோம்!!!
இப்படியெல்லாம் கூட ஒரு சாதாரணன் பேச முடியுமா என்று, பிரமித்துக்கொண்டு இருக்கும் போது, “வந்துவிட்டது சார் உங்கள் பிந்துமாதவன சன்னிதி” என்றார்.
கரையில் இருந்து சுமாராக 50 படிகள் உயரத்தில் இருந்தது பிந்து மாதவன் சன்னிதி, யாராவது நமக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடம் பணம் வாங்கி நண்பர் பிரகாஷுக்கு கொடுக்கலாம் என்று பார்த்தேன்.
ஹூஹூம், ஒருத்தரையும் காணவில்லை.
“என்ன சார் பார்க்கிறீர்கள்” பிரகாஷ்.
“யாராவது தெரிந்தவர்கள் இருந்தால், அவர்களிடம் பணம் வாங்கி நீங்கள் கேட்ட பணத்தை கொடுக்கலாம் என்று பார்த்தேன்” என்றேன் பிரகாஷிடம்.
“யார் சார் உங்களிடம் பணம் கேட்டது, இருக்கின்ற பணத்தை கொடுங்கள், அது போதும்” என்றான்.
எங்ஙளவு பெருந்தன்மை!!!
கங்கையின் ஓட்டத்துக்கு எதிராக படகினை வலித்து ஓட்டுவது எவ்வளவு சிரமம். இருந்தும் கூட, இருக்கும் பணத்தை கொடுங்கள் என்று சொல்வது என்னே பெருந்தனமை!!!
பிரகாஷை வாழத்திவிட்டு, 50 படிகளில் ஏறி, பிந்துமாதவன் சன்னதியை நோக்கி சென்றோம்.
அங்கு ஸ்வாமிகள் உபனயாசம் செய்து கொண்டு இருந்தார்.
பிறகு?
பார்ப்போம் அடுத்த பக்தியில்!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக