சனி, பிப்ரவரி 3

இராமானுஜா அனு யாத்திரை:ஐந்தாம் பகுதி சூரிய கோயில்.

சூரிய கோயில், அதாங்க கொனாரக், மிகவும் பிரபலமான கோயில், அத நோக்கி எங்க வாகனம் பறந்து கொண்டிருந்தது. பூரி ஜகன்னாதரை தரிசித்து விட்டு, ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டோம். இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொனாரக். ஒடிசாவின் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமான இடம்.
போகும் வழியில் கடற்கரை உள்ளது. சந்திரபாகா கடற்கரை என்று அதனைச் சொல்வார்கள். அதனை வரும்போது பார்த்துக்கொள்ள தீர்மானித்து நேராக கொனாரக் நோக்கி பயணமானோம்.
தூரத்தில் இருந்தே பார்க்கும் போது அதன் பிரம்மாண்டம் தெரிகிறது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. guide ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டோம்.
முன் பக்கத்தில் இருபக்கமும் இரண்டு சிங்கங்கள், ஒவ்வொன்றும். ஒரு யானையைக் கொல்வது போலவும், அதற்கு கீழே மனிதன் இருப்பது போலவும் படைக்கப்பட்டுள்ளது.
இது மனிதனை, அவனின்  அகந்தை, மற்றும் செல்வம் அவனை அழித்துவிடும் என்பதை குறிப்பதாக அந்த கைடு சொன்னார்.
எத்தனை உண்மை!!!






















24 சக்கரம் கொண்ட ஒரு சூரியனின் தேரை 7 குதிரைகள் இழுத்து செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பல முஸ்லிம் மன்னர்களால் சின்னாப்பின்னமாக்கப்பட்டு தற்போதய நிலையில் உள்ளது. நரசிம்மதேவா I மன்னரால் 1200 கலைஞர்கள் உதவியுடன் 12 ஆண்டுகள் கால அவகாசத்தில் கட்டப்பட்டதாம். ஒவ்வொரு சக்கரமும் 10 அடி விட்டம் கொண்டதாம்.ஒவ்வொரு இன்ச் கல்லும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களா இருக்கும் இந்த அமைப்பு, கீழ் தளத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைக் கவரும் வகையிலும், நடுவரிசை ஆண் பெண் ஆகியோர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும், மேல தளம் வயதானவரகளுக்கும் என பிரிக்கப்பட்டு உள்ளது.
கட்டடம் கட்ட எப்படி பொருட்கள் எடுத்து செல்கிறார்கள்
குழந்தை எப்படி பிறக்கிறது என்பதை விளக்கும் சிற்பம், வேட்டையாடும் சிற்பம்,
வேட்டையாடும் சிற்பம்
எப்படி கட்டிடம் கட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டன என்பதை விளக்கும் சிற்பம், இப்படி பல சிற்பங்கள் இருப்பதை கைடு விளக்கும் போது ஆச்சர்யம் ஆனோம்.
இது மட்டுமா?
அந்த காலத்திலேயே நேரத்தை காட்ட கருவிகளை அமைத்திருந்தாரகளாம்.
ஏற்கனவே நான் சொன்னேனே, அந்த 24 சக்கரம், அது தான் நேரத்தை காட்டக்கூடியதாக அமைத்து இருந்தார்கள்.
24 சக்கரத்தில் எஞ்சியது ஒன்று தான். அதை நம்ம கைடு எப்படி நேரத்தை காண பயன்படுத்தினார்கள் என்பதை பிரமாதமா விளக்கினார்.
 சக்கரம் காட்டியிருக்கேன்.


சக்கரத்தில் மொத்தம் 8 குறுக்கே போகும்  தண்டுகள் மையத்திலிருந்து செல்கின்றன இல்லையா, அவை ஒவ்வொன்றும் மூன்று மணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு நாளின் 24 மணிக்கு இணைக்கப்படும். சூரியனின் ஒளி மையத்தில் உள்ள அச்சில் விழுந்து, அதன்  நிழல் எங்கு விழுகிறது எனபதைப் பொறுத்து நேரத்தை சொல்கிறார். இது மட்டுமா, நிமிஷத்தை சொல்ல, சக்கரத்தின் சுற்றாக புள்ளி மாதிரி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். 60 புள்ளிகளை வைத்து, நிழல் எப்படி விழுகிறது எனபதைப்பொறுத்து மணி என்ன என்பதைத் துல்லியமாக நம்ம கைடு சொன்னவுடன் ஆச்சரயத்தின் எல்லைக்கே நாங்க போயிட்டோம்ன்னா பாருங்க!!!!!
ஏன் ஐயா 7 குதிரைகள் உள்ளன? 24 சக்கரங்கள் ஏன்? இவைகள் வாரத்தின் ஏழு நாட்களுக்கும், ஒரு நாளின் 24 மணிக்கும் என்பதற்காக  தான் அவைகள் வைக்கப்பட்டுள்ளன என்றாறே?
இருக்கும் மேலே என்ன வேண்டும் சூரிய கோயிலை விளக்க!!!!!
சக்கரத்தை பற்றிய தனியாரின் விடியோ  நன்றியுடன் பகிரப்படுகிறது
பிரமிப்பில் இருந்து மீண்டோம். நேரம் போனதே தெரியவில்லை.
கைடுக்கு விடை கொடுத்து விட்டு பூரியை நோக்கிக் கிளம்பினோம்.
வரும் வழியில் சந்திரபாஹா பீச் உள்ளது. பிரமாதமா உள்ளது. மாற்றுத்துணி கொண்டு போய் இருந்தால் குளித்து இருக்கலாம். இங்கு தான், ஒடிஷாவின் பிரசித்தி பெற்ற மணல் சிற்பங்கள் உருவாக்குகிறாரகளாம். நமக்கு கொடுத்து வைக்கவில்லை அவைகளைப் பார்க்க!!!
மணி 5ஐ நகர்ந்து விட்டது.
அப்புறம் என்ன செய்தீர்கள்?
நேராக கோயிலை நோக்க வண்டியை செலுத்தச் சொன்னோம் டிரைவரிடம்.
மீண்டும் கோயிலில் என்ன?
பொறுத்தார பூமியாள்வார் இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக