வெள்ளி, டிசம்பர் 8

“தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே “ அகோபிலம் பகுதி 10

பகுதி 10. ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி
சென்ற பகுதியில் ஃபேன் கீழ் உள்ள இடத்தை நோக்கி  ஓடினோம்  என்று முடித்து இருந்தேன் அல்லவா,  எப்படி கிடைக்கும், அதுதான் நமக்கு முன்னாலேயே நாலைந்து பஸ் பயணிகள்  துண்டு விரித்துவிட்டார்களே!
சரி கிடைத்த இடத்தில் இன்று இரவைப் போக்குவோம் எனத் தீர்மானித்து படுக்கையை விரித்தோம்.
சரியாகக் கூட தூங்கியிருக்க மாட்டோம், திடீரென கசமுசா என சத்தம். பார்த்தால் அநேகம் பேர் பாத்ரூம், குளியல் அறை என மாத்தி மாத்தி  போய்க்கொண்டிருந்தார்கள்
மணி என்னவாக இருக்கும்?  மணி மூன்று தான் ஆகியிருந்தது. என்னடா அதுக்குள்ளேயே குளித்துவிட்டார்களா?
இல்லையா பின்ன,ஓவ்வொருவராக இருக்கும் பாத்ரூமில் குளித்து வர நேரமாகாதா?  டூர் போவதே பொழுதுபோக்கு  போல் இவர்களுக்கு.  எப்போது எழுந்தால் சரியாக இருக்கும் எனத் தெரிந்து வைத்துள்ளார்கள் பாருங்கள்!!
NOTE THIS POINT MR, THOSE WHO ARE GOING ON TOUR.
நமது கோஷ்டியும் சுதாகரித்து, பேஸ்ட் பிரஷ், துண்டு சகிதம் எந்த பாத்ரூம் காலியாகும் என தேட ஆரம்பித்த்து.
ஓரு வழியா எல்லாற்றையும் முடித்துக் கொண்டு. பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.  அகோபிலத்தில் போய் நின்றவுடன், ஸ்வாமீகள்
“இன்றைக்கு பிரோகிராம் இதுதான். நேற்றைய தினம் ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி சேவிக்காதவர்கன்  இன்றைக்கு அதனை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு மற்ற சன்னிதிளை பார்க்கவேண்டும். எந்த க்ருப்பும் பாவனா சன்னிதிக்கு செல்ல வேண்டாம். காரணம் நேற்றையதினம் பலத்த மழை பெய்ததால் அங்கு டிராக்டர் ,ஜீப் போள்றவைகள்  போகாது. நேற்றைய தினம் போனவர்களின் டிராக்டர் சகதியில் மாட்டிக்கொண்டு இங்கிருந்து மற்றொரு டிராக்டர்  அனுப்பி  அந்த டிராக்டர் மக்களை  TOE பண்ணி இழுத்துக்கொண்டு வரவேண்டியதாயிற்று. இரவு 12 மணிக்குத்தான் அவர்கள் வந்து சேர்ந்தனர்.  போகவேண்டிய எல்லா சன்னிதிகளையும் மதிய ஆகாரத்துடன் முடித்துக் கொண்டு மாலை 4 மணிக்கு இங்கிருந்து பத்ராசலத்துக்கு புறப்பட வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.
ஆம், முதல்  இரவு முழுவதும் அகோபிலத்தில் மழை பெய்து நாற அடித்ததை நான் சொல்ல மறந்துட்டேன்.
ஸ்வாமிகள் சொல்லியபடி எங்கள் பஸ்ஸில் ஏறி மேல் அகோபிலம் நோக்கி பயணமானோம். முதல் நாள் போலவே அவரவர்களுக்குத் தேவையான கம்புகளை பெற்றுக்கொண்டு  இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே
ஜ்வாலா  
ஜ்வாலா நரசிம்மர்
நரசிம்மர் சன்னிதியை நோக்கி பணத்தை துவக்கினோம்.
திருமங்கையாழ்வார் முதல் பாசுரத்தில் பாடியபடி
அங்கண் ஞாலமஞ்ச அங்கோர் ஆளரியாய்* அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால்* அடிக்கீழ்
செங்கணால் இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே*
என்று ஜ்வாலா நரசிம்மரைத் தான் பாடியிருப்பார் போலும்.
பூமியில் உள்ள அனைவரும் நடுங்கும் படி ந்ருசிம்மப் பெருமானாய்த் தோன்றி இரணியனின் உடம்பை கூர்மையான நகங்களைக் கொண்டு இரு பிளவாகப் பிளந்த புனிதன் எழுந்தருளி இருக்கும் இடம்,
ஜ்வாலா நரசிம்மர்  சன்னிதி
 எல்லோராலும் போகமுடியாதாம். ஆழ்வார் நாலாவது பாசுரத்தில்
“தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே “
தேவதைகள் தவிர மற்ற யாராலும் அணுகு முடியாத இடமான சிங்கவேள்குன்றமாகும். அப்படிப்பட்ட ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி  அடைந்தீர்களா?
எனக் கேட்கத்தோன்றுகிறதா?

பார்ப்போம் அடுத்த பகுதியில்.

ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே”, அகோபிலம் பகுதி 9

அகோபிலம் பகுதி 9
சென்ற பகுதியில் பஸ் ஏறி அறையை நோக்கிச் சென்றீரகளே , என்னவாயிற்று என் று கேட்கத் தோன்றுகிறதா?
 என்னவாச்சு  இத்தனை  நேரமா ஆகும்  அறைக்குச் செல்ல?
ஆம்,  கிட்டத்ததட்ட அரைமணிநேரம் ஆயிருக்கும்,  வாலண்டியர்  எல்லோரது தாக்கத்தையும் கலைத்து, “எழுந்திருங்கள் நமது தங்குமிடம் வந்துவிட்டது, காலை ஆறு மணிக்கெல்லாம் டிபனை முடித்துக்கொண்டு பஸ்ஸுக்கு வந்துவிடுங்கள்.  நாளைக்கு மீதி உள்ள இடங்களை தரிசித்து விடுவோம்” என்று சொல்லிவிட்டு இறங்கினார்.
நமக்கு எந்த அறை கொடுப்பார்கள், என்று எங்களுக்குள்ளேயே   பஸ்ஸை வீட்டு இறங்கிப் பார்த்தால் ஒரே ஷாக். என்ன தெரியுமா? காலை காலைக்கடன்களை முடித்துவிட்டு கிளம்பினோமே அதே கல்யாண மண்டபம் தான்!!!!
இது தான் இத்தனை பேருடன் வரும் போது  உண்டாகும் சிரமம். தனித்தனி ரூம்கள் இந்த மாதிரி சிறிய ஊர்களில் கிடைப்பது சிரமம்  வேறு வழியில்லை  எப்படி கல்யாணம் ஆனபிறகு ஒருவரு க்கொருவர்  அட்ஜட் செய்து கொள்கிறோமோ, அதுமாதிரி, ஒருவழியா மண்டபத்தின் உள்ளே சென்று எங்கு ஃபேன் இருக்கோ அதன் அடியில் படுக்கை விரிப்பை  விரிக்கலாம் என்று தேடினோம்.
பராசக்தி  திரைப்படத்தில் சிவாஜி பேசுவாறே , “ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே”, என்று, அது மாதிரி, ஃபேன் அடியை நோக்கி.

கிடைத்ததா? பார்ப்போம் அடுத்த பகுதியில்.

வியாழன், டிசம்பர் 7

அகோபிலம் ப்ரஹலாத வரதர். பகுதி 8





பகுதி 8  அகோபிலம் ப்ரஹலாத வரதர்.
கீழ் அகோபிலத்தில் ப்ர ஹ்லாத வரதர் ஸன்னிதி உள்ளது  என முன் பகுதியில் சொல்லியிருந்தேன்.

ப்ரஹலாத வரதர் சன்னிதி அகோபிலம் ஷேத்ரத்தில்  ப்ராதனமாக உள்ள சன்னிதி யாகும். ஸீலக்ஷ்ம் நரசிம்மர் கிழக்கு நோக்கி உள்ளார். உற்சவர் உபயநாச்சீயாரகளுடன் கூடிய ப்ரஹலாதவரதர் உள்ளார்.அவர்களுக்கு முன்னால் புறப்பாடு கண்டருளும் மூர்த்தியாக பத்து கைகளுடன் ஸீதேவி பூதேவீ ஸமேதராக ஜ்வாலா நரசிம்மன் காட்சியளிக்கிறார். ஸீஅகோபில மடத்தின் ஸ்தாபகரான ஸீஆதிவண்சடகோபஜீயர் ஸ்வாமிகள் பெருமாளை சேவிக்கும் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அர்ச்சா திருமேனியாக காட்சியளிக்கிறார்.

 விஜயநகரப் பேரரரசர்கள் இந்தக் கோயிலுக்கு அதிக தொண்டு ஆற்றியிருக்கிறார்கள்.முன்மண்டபம் மற்றும் தூண்கள் சிற்ப வேலைப்பாடு காண்பவரைக் கொள்ளை கொள்ளத் தோன்றும். இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும்.
அவைகளின் ஒருசிலவற்றை மட்டும் இங்கே கொடுத்துள்ளேன். அடுத்த முறை நீங்கள் செல்லும்போது பாரக்கத் தவறாதீர்கள்.
சென்ற பகுதியில் ப்ரஹலாத வரதரை பார்த்தோம் என்று சொல்லி இருந்தேன். அதன் பிறகு முன் போலவே ஆகாரத்தை வரிசையில் நின்று பெற்றுக்கொண்டோம். முன் பக்கத்தில் உள்ள நாலுகால் மண்டபத்தில் பிரவசனம் நடந்து கொண்டிருந்தது, அதனை ரசித்தோம், பின்னர் ஸ்வாமிகளின் உரையைக் கேட்டு ரசித்து விட்டு, எங்கள் வாலண்டியர் ஆணையிட்டபடி அவர் அவர் பஸ்களில் ஏறி அமர்ந்தோம், கடைசியாக இன்றைக்காவது எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறைகளை அடைவோம் என்ற நம்பிக்கையில்!!!!!!
ஒதுக்கப்பட்ட அறைகளை அடைந்தீர்களா?
கேடகத் தோன்றுகிறதா?

பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!!!!!

செவ்வாய், டிசம்பர் 5

அகோபிலம் பகுதி 7

பிரஹலாத ஸன்னிதிக்கு அருகாமையில் கூடாரத்திற்குள் பெரிய பெரிய பாத்திரங்களுக்கு நடுவில் கேஸ் அடுப்பு தீஜ்வாலையுடன் எரிந்து கொண்டிருந்தது. அங்கே சென்று விஜாரித்ததில், “பக்கத்து கட்டிடத்தில் ஆகாரம் விநியோகம் செய்கிறார்கள், அங்கே செல்லுங்கள்”, என்றார்கள்.
பக்கத்தில் ‘பஞ்சாயத்து கட்டிடம்’ என நானைக்கிறேன், சுமார் 5அல்லது 6 ஆறு இடங்களில், தலா இரண்டு பேர் வீதம், இரண்டு பெரிய பாத்திரங்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்து கொண்டு இருந்தார்கள்.
 1400 பேர சாப்பிட கூட்டம் இருக்குமே,
ஹூஹூம்,
அப்படியெல்லாம் இல்லை, ஆறு அல்லது ஏழு பேர்கள் தான் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
எப்படி இது சாத்தியம்?
அதுதான், வேளுக்குடி ஸ்வாமிகளின் ஆளுமை!!!!
இதற்கு முன்னால நானும் என் மனைவியும் மதுராவிற்கு ஏழு நாட்கள் பாகவத ஸப்தாகத்திற்கு சென்ற போதே வியந்திருக்கிறேன்.
மதுராவில் எல்ல்றோருக்கும் ஒரே நேரத்தில்
உணவு பரிமாற்வசதியாக அமர்வு
எப்படித்தெரியமா?
ஒவ்வொரு நாளும் 7500 பேர் மாலை நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து அவருடைய உபன்யாசத்தை கேட்டுக்கொண்டு இருப்போம். இரண்டு மணித்துளிகள் போனதே தெரியாது. ஒவ்வொரு நாளும் இத்தனை பேரையும் ஏழாகப்பிரித்து, முதல் நாள், முதல் குழு முதல் இடத்திலும், இரண்டாம் நாள், முதல் குழு பின்னால் கடைசி இடத்திற்கு நகர, இரண்டாம் குழு முதல் இடத்திற்கு இடம் பெயரவேண்டும். இப்படி எல்லோருக்கும் அருகில் இருந்து உபனயாசம் கேட்கமுடியும். அதோடு கூட, உபனயாசம் முடிந்தவுடன் அவர்கள் எல்லோரையும் சாப்பிடும் தட்டோடு (போட்டோவில பார்த்து இருப்பீர்கள், 
எல்லோருடைய தோளகளிலும் ஒரு ஜோலனா பை தொங்குவது அதில் தான, எங்களுக்குத் தேவையான மருந்துகள், அவசரத்துக்கு சாப்பிட பிஸ்கட், மற்றும் முக்கியமான தட்டு, டமளர் ஆகியவை) இருந்த இடத்திலேயே வரிசையாக அமரச்செய்து, நிறைய வாலண்டியர்கள் உதவியுடன், பதினைந்தே நிமிஷத்தில், மறுபடியும் சொல்கிறேன், பதினைந்தே நிமிஷத்தில் 7500 பேருக்கும் ஆகாரத்தை பகிரந்ததைச் சொல்லாமல் இருக்கமுடியாது.
அதுபோல இப்பவும் வரிசையில் நின்று, ஆகாரத்தை வாங்கிக்கொண்டு வந்தோம்.
பின்னர் வெளியே வந்து, பார்க்கவ நரசிம்மர் ஸன்னிதிக்கு போகலாம் என்று ஆட்டோவை விஜாரித்தோம். முந்தைய தினம் இரவு பலத்த மழை பெயதிருந்தமையால், போகும் வழியெங்கும் சேறும் சகதியுமாக இருக்கும் என்பதால் ஆட்டோககாரர் வர மறுத்துவிட்டார். சரி, பிரஹலாத வரத நரசிம்மர் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தோம். வரும் வழியில் ஶ்ரீவேளுக்குடி ஸ்வாமிகள் அமர்ந்து எல்லோரையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம். மாலை 7 மணிவாக்கில் பிரஹலாத வரத ஸ்வாமி கோயிலுக்குப் போகும் வழியில் நாலு கால் மண்டபத்தில் ஸ்வாமிகளின் உபனயாசத்தை கேட்க அன்பர்கள் கூடியிருந்தனர். நாங்களும் அமர்ந்து உபனயாசத்தை ரசித்தோம்.

கேட்க கேட்க மதுரமாக இருந்தது.
பிரஹலாத வரதரின் ஸன்னிதியப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.