![]() |
அயோத்யா.
முக்தி தரும் ஏழு ஷேதர்ஙகளில் முதன்மையானது அயோத்யா.
ஸரயு நதிக்கரையில் அமைக்கப்பட்ட நகரம். அயோத்யா என்றால் தகரக்கவோ, எதிர்க்கவோ முடியாத நகரம் என்று அரத்தமாம்.
ஸூரிய வம்சமான இக்ஷ்வாகு வம்சத்தவர்களின் பரம்பரை ஆண்ட நகரம்.
ராமனின் பிறந்த ஊர்.

ராம் ஜெனம்பூமி என்று இந்துக்களால் பூஜிக்கப்படும் இந்த நகரம் பலவிதங்களில் புகழ் பெற்றது. ராமன் 11000 ஆண்டுகள் இந்நாட்டை ஆண்டு ஶ்ரீவைகுண்டத்துக்கு தன்னுடன் புல், எறும்பு ஆகியவற்றுடன் கூட்டிக்கொண்டு சென்ற ராம் காட் என்ற சரயு நதிக்கரை இங்கு அருகில் உள்ளது. ராமன் 14 ஆண்டு காலம் வனவாசம் இருந்து பின் திரும்பி வரும்போது, பரதனை, அவன் பாதுகைகளை வைத்து அரசாண்ட நந்தி கிராமம் அருகில் தான் உள்ளது.
இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்.
ராம் ஜென்மம் பூமி. த்ரேதா யுகத்தில் ராமன் அவதரித்ததாக சொல்லப்படும் இடம் ராம் ஜென்மம் பூமி. அங்கு முஸ்லிம் படையெடுப்பின் போது அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டு, பின்னர் அது இந்துக்களால் இடிக்கப்பட்டு, ராமரின் விக்கிரஹங்கள் வைக்கப்பட்டன.
பலத்த பாதுகாப்பு கொண்ட இந்த இடம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

தசரதன், கௌசல்யா ஆகியோருடைய அரண்மனைகள், கைகேயி கோபம் கொண்டு கிடந்த கோப பவனம்,
இதைத்தவிர அயோத்திக்கு 25 கி.மீ. தொலைவில் அலகாபாத் மாரக்கத்தில் அமைந்துள்ள முக்கியமான இடம் நந்தி கிராமம் என்ற அழகிய கிராமம்.
என்ன முக்கியம் இந்த இடத்தில?
ராமன், ஸீதை, லக்ஷ்மணன் ஆகியோர் அயோத்தியில் இருந்து 14 வருஷம் காட்டுக்கு கிளம்பி குகன் உதவியால் கங்கையைக் கடந்து சிருங்கிபேரபுரம் என்ற இடத்தில இருக்கிறார்கள். தன் மாமா வீட்டில் இருக்கும் பரதனுக்கு இந்த விஷயம் தெரிகிறது. கோபம் கொண்ட பரதன் தன் தாயிடம் கோபமாக பேசிவிட்டு காட்டுக்குச் சென்ற ராமனிடம் மீண்டும் ராஜ்ஜியம் ஏற்றுக்கொள்ள மன்றடுகிறான். எவ்வளவு சொல்லியும் ராமன் கேடகாத்தால், கடைசியில் “உன்னுடைய பாதுகைகளையாவது கொடு அவற்றை வைத்து ராஜ்ய பரிபாலனம் செய்கிறேன், தவறாமல் 14 ஆண்டுகள் முடிந்தவுடன் ராஜ்யத்தை பெற்றுக்கொள்ள வந்துவிடவேண்டும், இல்லையேல், அடுத்த நிமிஷமே தீ மூட்டி அதில் ஆதம தியாகம் செய்து கொண்டுவிடுவேன்” என்று ராமனிடம் பரதன் கூறி ராமனின் பாதுகைகளை எடுத்துச் சென்று அயோத்தி செல்லாமல் முன்னதாகவே உள்ள நந்திகிராமத்தில் பாதுகைகளை வைத்து ராஜ்ய பரிபாலனம் செய்கிறான் சரியா 14 ஆண்டுகள் ஆனதுடன் ராமன் வராததால் நந்தி கிராமத்தில் ஆத்ம தியாகம் செய்ய தீ மூட்டுகிறான் பரதன்.
பரதன் இந்த மாதிரி ஏதாவது செய்வான் என்று முன்கூட்டியே அறிந்த ராமன், 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்த ராமன, நடுவில் பரத்வாஜ் ஆஸ்ரமத்தில் காலதாமதம் ஆனதால் அனுமனை முன்னதாக அனுப்புகிறான்.
அனுமனும் வேகமாக கிளம்பி நந்தி கிராமத்துக்கு வந்து பரதனை சந்தித்து ஆரத்தழுவி விஷயத்தைக் கூறி ஆத்ம தியாகத்தை தடுத்து நிறுத்துகிறார்.
இன்னமும் நந்தி கிராமத்தில் இவர்கள் இருவரும் ஆரத்தழுவிக் கொள்ளும் காட்சி சிலை வடிவில் உள்ளது. அது மட்டுமல்ல, ராமனின் பாதுகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அயோத்திக்கு செல்லும் போது நந்தி கிராமத்தை பாரக்கத் தவராதீர்கள்.
அது மாதிரி இன்னொரு இடம்!!!
பார்ப்போம் அடுத்த பகுதியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக