சனி, மார்ச் 10

ராமானுஜா அனு யாத்திரை :நைமிசாரண்யம்.


நைமிசாரண்யம்.

 பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள்?  ,
விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் என்பது அர்ச்சை நிலை,
திருபாற்கடல் ஒரு நிலை, மண்மீது உழல்வாய் என்று அவதாரங்கள் நிலை, 
இவற்றுள் எங்கும் மறைந்து உழல்வாய் என்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளில்  எளிமையான் நிலை அர்ச்சாவதாரம் என்ற அர்ச்சை நிலை. 
என்னன்னு கேட்கிறிங்களா?
பாருங்க, வைகுந்த பெருமானைப் போய் உடனே பார்த்துவிட்டு வரமுடியுமா?
யாரை வேணா கேளுங்க,108 திவ்ய தேசத்தை பார்த்தாச்சா, அப்படின்னு?
வைகுந்தம், திருபாற்கடல் இவற்றைப் பார்த்தாச்சா?-ன்னு கேளுங்க. என்ன பதில் வரும்?
வராது!!!
வைகுந்தம் போய் விட்டு வந்து
   "நாம் வைகுந்தம் போய்விட்டு வைத்தேன், நீங்க பார்த்தாச்சா?" 
என்று சொல்ல முயுமா? அதுசரி, திருபாற்கடலைப் போய், பெருமாளைப் பார்த்துவிட்டு  பாற்கடலில் நீந்திவிட்டு வந்தேன்னு சொன்னா யார் நம்புவாங்க.
அந்த இரு நிலைகளும் இந்த உடலோடு போய் பார்க்க முடியாதுன்னு 
எல்லாருக்கும் தெரியும். அதுசரிய்யா ராமன், கண்ணன், போன்ற அவதாரங்களை பார்த்தேன்னு சொன்ன, நாம என்ன கேட்போம், "என்ன சினிமா பார்த்தியா?" 
அப்படின்னு தானே கேட்கத் தோன்றும். இல்லையா பின்னே? அவதாரங்கள் எல்லாம்  நம்ம காலத்திலேயா நடந்தது? காலத்தால் போகமுடியாத நிலைகள் அவை  என்ன அவதாரங்கள் நடந்த இடமான அயோத்தி, மதுரா, துவாரகா போன்ற  இடங்களைப் போய் பார்த்து அனுபவித்து விட்டு வந்து மகிழலாம்.
"நான் பெருமானை நேத்தி ஏன் கனவுல வந்தார்" என்றும், நமக்குள்ளே 
உள்ளார் என்று சொல்லமுடியுமா? ஆழ்வார்கள் எல்லாம் தான் ஏன் மனதுக்குள் பெருமான்  வந்தார் என்று சொல்ல முடியுமே தவிர, நம்மைப் போல் உள்ளவர்கள், ஏழைகள் 
 "இன்னிக்கு என்ன சமையல் பண்ணே? என்ன நகை வாங்கினே?" என்று சொல்ல  முடியுமே தவிர பெருமாள் நமக்குள்ளே உள்ளார் என்று சொன்னால் யாரும் நம்பாட்டார்கள்.
இப்படி பெருமானின் ஐந்து நிலைகளில், நான்கு நிலைகள் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைகள்.
அப்ப ஜந்தாவதான நிலை அர்ச்சாவதார நிலை தான் நமக்கு ஏத்த நிலை.
திருமங்கைஆழ்வார் சொல்றாராம், ஜீவன் இந்த உடலோட வைகுந்தத்துக்கு  போகமுடியாதாம், அது இந்த நாட்டிலேயே இல்லை, போனா திரும்பி வரமுடியாதாம், 
இப்படி இருக்கும் போது தரையில் கிடக்கும் முயல் மாமிசத்தை விட்டு, ஆகாயத்திலே  போற காக்கை மாமிசத்துக்க்கு ஆசைப் படுவது போல இருக்குன்னு சொல்றார். முயல் மாமிசம் என்பது அர்ச்சையாம், காக்கை மாமிசம் என்பது வைகுந்த்தமாம்.
அப்படி பெருமை கொண்டது அர்ச்சாவதாரம் என்கிற விக்கிரஹ ருபத்தில் நிலை.
ஆம்,
அரச்சாவதாரம் என்ற நிலையில் எல்லா திவ்ய தேசங்களிலும் ஆழ்வார்களால் பாடப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் வரை அரச்சை ரூபத்தில் கூட காணமுடியாது. இந்த ஊரையே ஆழ்வார் பாடியுள்ளார் என்றால் பாரத்துக்கொள்ளுங்கள்.
ஆம், திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்த திவ்ய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார். 

இப்ப நாம் அதிகமா கேட்பது, “பூவி அதிகமா சூடாகிக்கொண்டே வருது” “ஓசோனில் ஓட்டை விழுந்து விட்டது.”
அதனால என்ன ஆகும?
கண்ட நேரத்துல மழை பெய்யும், வட துருவ, தென் துருவ பனி உருகி பூமியின் சில பகுதிகள் முழுகிவிடும், கடல் பொங்கி சுனாமி வந்து நிறைய பேர் இறந்துவிடுவார்கள், இப்படி பயமுறுத்தும் விஷயமாக நிறைய கேட்கிறோம் இல்லையா?
உலகத் தலைவர்கள் ஒன்று கூடி இத தடுக்க என்ன பணறதுன்னு மூளைய கசக்கறாங்க!!! முக்கியமா காடுகள அதிகமா அழித்துட்டோம், அதனால காடுகள வளர்க்க வேண்டும் அப்படின்னு தீர்மானம் போடறாங்க.
இத நமக்கு உணர்த்துவதற்கு என, பெருமான் காடு ரூபத்திலேயே இருக்கற திவ்ய தேசந்தான் நைமிசாரண்யம்.
  ஊனிடைச் சுவர்வைத்துஎன்புதூண்நாட்டி
      உரோமம் வேயந்துஒன்பது வாசல் 
  தானுடைக் குரம்பைபிரியும் போது
      உன்தன் சரணமேசரணமென்றிருந்தேன் 
  தேனுடைக் கமலத் திருவினுக்கரசே
      திசைகொள்மாநெடுங்கடல்கிடந்தாய்
  நானுடைத் தவத்தால்திருவடியடைந்தேன்
      நைமிசாரணியத்துள் எந்தாய்!!!
உன்னைப்பற்றி எல்லாம் சிந்திக்காமல் வாழ்க்கையை எப்படியெல்லாம் அனுபவித்து விட்டேன், என்று 10பாசுரங்களால் பாடி, நைமிசாரண்யத்துக்கு வந்து உன் திருவடி அடைய வேண்டும் என்று பிராரத்திக்கிறார்.
மனிதப் பிறவியில் ஒருதடவையாவது நைமிசாரண்யத்துக்கு வந்து அவன் சரணம் அடையவேண்டுமாம்.
அது மட்டுமா,
நைமிசாரண்யம் காட்டில் ரிஷிகளுக்கு தொல்லை கொடுத்த அசுரர்களை ஒரு நிமிஷத்தில் திருமால் அழித்தார், அதனால் இந்த இடம் நைமிசாரண்யம் எனப்பெயர் பெற்றது.
நிமிஷம் என்ற ஒரு வகையான புல் எனப்படும் தர்பை இங்கு அதிகமாக வளர்வதால் நைமிசாரண்யம் என்றும் பெயர் பெற்று இருக்கலாம்.
தவம் செய்ய சிறந்த இடம் எது என்று நான்முகனிடம் முனீவர்கள் கேட்க, அவர் ஒரு சக்ரத்தை கொடுத்து அதன் வெளிப்பகுதியான நேமி எந்த இடத்தில் தட்டி நிற்கிறதோ அந்த இடம் தவம் செய்ய சிறந்த இடம் என்று சொல்ல,அது இந்த காட்டில் நிற்க, அதனால் நைமிசாரண்யம் என்று பெயற் பெற்றது.

 ரோமஹர்ஷணர் இங்கு அமர்ந்து கொண்டு புராணம் சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் இங்கு வந்த பலராமரை கவனிக்கவில்லை. கோபம் கொண்ட பலராமர், தன் கலப்பையால் அவரைத்தட்ட அவர் இறந்து விடுகிறார். பக்தர்கள் வருத்தப்பட பலராமரும் ரோமஹர்ஷணரின் புதல்வர் ஸுதருக்கு புராணகதைகளை இனிமையாக சொல்லிக்கொடுக்கும் கலையை அவருக்கு அருளினார்.அதற்குப் பிறகு ஸுதர் இங்கு அமர்ந்து கொண்டு 18 புராணங்களையும் சௌனகர் போன்ற ரிஷிகளுக்கு அருளினார் என்கிறார்கள்.
இங்குள்ள கோமதி நதிக்கரையில் 88000 ரிஷிகள் ஜ்ஞானஸத்ரம் புரிந்தாரகளாம். ராமன் இங்கு தான் அஸ்வமேத யாகம் செய்தாராம்.
இங்குள்ள சக்கர தீர்த்தத்தின் மையப்பகுதியில் ஊற்றுப்போல நீர் வழிந்துகொண்டேயிருக்கும். இதன் வெளிப்பகுதியில் தான் நாம் நீராடவேண்டும்.
இன்னும் அதிக பெருமைகள் வாய்ந்த நைமிசாரண்யம் நாங்க வேளுக்குடி ஸ்வாமிகளின் யாத்திரையின் கடைசி திவ்ய தேசம்.
சின்ன ஊர் தான், ஆனால் அதிக பெருமை கொண்ட ஊர்.
விடியற்காலையில் வந்து சேர்ந்தோம். எங்கள் தங்குமிடத்தில் சாமானகளைப் போட்டுவிட்டு, கோமதி ந்திக்கரைக்கு ஸ்நானம் செய்யக் கிளம்பினோம். இருட்டாக இருந்ததால் ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டோம். ஆனால் கொஞ்சம் பொறுமை காத்தால், எல்லா இடங்களுக்கும் நடந்தே போயிடலாம்.
அருகிலேயே இருந்தது கோமதி  நதி. .ஸ்நானத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தோம்.
ஸ்வாமிகள் ஷேத்ரத்தைப் பற்றி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். முடிவில் அங்கேயே எல்லோருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. அவர்கள் சௌகரியப்படி 
நான் முன்னர் சொல்லியிருந்த இடங்கனை பார்த்துவிட்டு காட்டின் நடுலே ஏற்பாடு செய்திருந்த இடத்தில் நடைபெறும் ருக்மிணி கல்யாணத்துக்கு வந்துவிடச் 
சொன்னார்.
மொத்தமாக எல்லா இடங்களையும் பார்க்க. ஆட்டோவை ஏற்பாடு செய்து கொண்டு  நதிக்கரையின் அருகிலேயே உள்ள பாகவதம் புராணம் சொன்னதாக சொல்லப்பட்ட இடத்தை அடைந்து, அங்குள்ள ஆலமரம், ஸுதர் ஆலயம், ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டு, சக்கர தீர்த்தத்தில் நீரை எடுத்து ப்ரோக்ஷணம் செய்து கொண்டோம்.
ராம ராவண யுத்தத்தின் போது ராவணன் பாதாள உலகின் அசுரர்கள் அஹி மஹி இருவரைக்கொண்டு ராம லக்ஷ்மணர் இருவரையும் பாதாள உலகத்தில் கொண்டு போய்  வைத்து விடுகிறார்கள். அகத்தியருக்கு விஷயம் தெரிய, அனுமன் உதவியுடன் அஹி மஹி அசுரர்களைக் கொன்று, ராம லக்ஷ்மணன் இருவரையும் தன் தோள்களில் வைத்துக்கொண்டு திரும்புகிறார். இதனை இங்கு தரிசிக்கலாம்.
இவ்வளவு தான் இங்கு  பார்க்க வேண்டியவை.
அதற்குப் பிறகு காட்டின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த ருக்மிணி கல்யாணம் நடைபெறும் இடத்துக்குச் சென்றோம்.
மிகச் சிறந்த முறையில் ருக்மிணி கல்யாணம்  நடத்தப்பட்டு, மதிய சாப்பாடு அங்கேயே அருகில் உள்ள ரங்கநாதர் கோயிலில் முடித்துக்கொண்டு தங்கும் அறைகளுக்குத் திரும்பினோம்.
நாங்கள் அவரவர் ஊர்களுக்கு திரும்ப, அடுத்தநாள் காலை ஆக்ராவில் இருந்து கிளம்ப ரயிலில் செல்ல டிக்கெட் வாங்கி இருந்ததால்,  நிறையப்பேர் என்று பின்னால் தெரிந்து கொண்டோம்,  இரவு ஆகாரதுக்குப் பிறகு பஸ் ரெடியாக இருந்ததால், ஆக்ராவை நோக்கிப் பயணமானோம்.

15 நாட்கள்  போனதே தெரியவில்லை. எத்தனை ஆறுகளில் நீராடீனோம், எத்தனை  கோயில்களை தரிசித்தோம், எத்தனை பேருடன் பழகியிருப்போம். இவையெல்லாம் எப்போ கிடைக்கும்?
மீண்டும் இந்த மாதிரி ஒரு தரிசனம் நம்மால் போகமுடியுமா? அதற்குள் நாம் வயதாகி, வியாதிகள் ஏதும் நம்மை அணுகாமல், ஸ்வாமிகளூடன் அவர்களின் உபன்யாசத்தை  ரசித்துக்கொண்டு செல்ல அந்த அரங்கன் தான் அருள் புரிய வேண்டும்.
பிராத்திப்போம் அவனை!!!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக