"என்ன இவ்வளவு காலதாமதமா வரீங்க",
இன்னம்பூர் தம்பி, இன்னிக்கு மாசி சிரவண பறப்பாட்டுக்கு லேட்டா
வந்த மண்டையுடஞ்ச அய்யர் வீட்டு பேரன்ன்னு ஊரில கூப்பிட்டுக் கொண்டிருக்கும், ஶ்ரீரங்கத்தில் இருந்து ஶ்ரீரங்கம்
ஶ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாம பாராயண சபா அங்கத்தினர்கள் இருபது பேருடன் வந்திருக்கும்
கிருஷணமூரத்தியைப் பாரத்து கேட்டான்.
"கும்பகோணம் ஶ்ரீ ஸாரங்கபாணி ஸ்வாமியை சேவிக்கலாம்னு போனோம், அவர் எங்களுக்கு தரிசனம் கொடுக்க கொஞ்ச நாழி ஆயிடுத்து, அதான் லேட் தம்பி ,மன்னிச்சுக்கோ",
சினிமாவுல சொல்லுவாங்களே, உன் கைய காலா நினைச்சு கேட்கிறேன்னு, அதுமாதிரி, கிருஷ்ணமூரத்தி, தம்பிய பாத்து கெஞ்சிண்டு இருக்கான்.
"அதெல்லாம் சரி, பெருமாள ஏளப்பண்ண, அதான் வீதியுலா பண்ண, உங்க நண்பர்கள் ஒத்தாச பண்ணுவாங்கன்னு சொன்னயே, ஏற்பனவே நேரம் அதிகமா ஆயிடுச்சு, வாங்க ரெடியாகலாம்" தம்பி சொலறான் "
“ஓ, எல்லாரும் ரெடிதான்”
கிருஷ்ணமூர்த்தி கண்ணால பக்கத்திலெ இருக்கிற நண்பர்களை பாக்கிறான். அவர்கள் அப்படி யாருப்பா நானும் பார்க்கிறேன்.
பாத்தவுடன் எனக்கு ஷாக்கா ஆயிடுச்சு.
பின்ன நானும் 4 ம்ணியில் இருந்து பட்டாச்சாரியார் சூப்பரா அலங்க்காரம் பண்ணி வீதியுலாவுக்கு ஒவ்வொரு சிரவணத்துக்கும் ஏளப்பண்ணுவதற்க்கு என்று வரும் மாண்வர்கள், இன்னைக்கு வரல, இன்னைக்கு இவங்க தான்னு சொல்றதக் கேட்ட்தும் எனக்கு திக்ன்னு ஆயிடுச்சு. வயத்துல புளிய கரைச்சமாதிரி இருந்துச்சு. (ஏற்கனவெ பிரசாத்த்துக்குன்னு புளி கரைச்சு சூப்ப்ர் புளியொதரை பண்ணி வச்சு இருக்கா. ஒரு பிடி பிடிக்க போறேன்னு சொல்றது தனிக் கதை.)
இவர்கள் தான் இன்னைக்கு என்னை வீதியுலாவுக்கு ஏளப்பண்ண போறாங்களா?
ஏன்னு பாக்கிறீங்களா? கிருஷ்ணமூர்த்தின்னு சொல்றவர் போன வருஷம் வண்டியில போறபோது அடிபட்டு இப்பத்தான் தேறி வந்துள்ளார். இன்னொருத்தர் நாலு மாசம் முன்னால இடுப்பு வலின்னு டிராக்கிங்கெல்லாம் போட்டுண்டு வந்தவர். மூணாவது நபர் எப்பவும் உடம்பு சரியில்லைன்னு சொல்றவர்.. நாலாவது நபர் நடக்கும் போது கொஞ்சம் கஷ்டப்படுவார். இப்படி வந்திருக்கிறவங்களை
வச்சுண்டு நான் வீதியுலா!!!!!ன்ன பண்னறது? இன்னிக்கு இவங்க்கிட்ட மாட்டியாச்சு,
நாமளா பாத்து
எதாவது செய்ய வேண்டியது தான்.
என்ன் ஒரு பக்கம்
சாயற மாதிரி இருக்கு,
ஓ, ஏளப்பண்ணிட்டாங்களா/
ஏம்ப்பா, ஸீரங்கத்திலெ சொல்ற மாத்ரி
“எச்சரிகை” ந்னு முன்னால சொல்லக் கூடாது?
கொஞ்சம் சுதாகரிச்சுண்டு இருப்பேன் இல்லையா/
அது சரி, முன்னெபின்னே இவங்க ஏளப்பன்னி
இருந்தாங்கன்னா தெரியும், இவங்க்கிட்ட அதெலாம்
எதிர்பாக்க கூடாது.
நாம தான் சரி
பண்ணிக்கிடனும்.
அய்ய்ய்யோ, என்னப்பா இப்ப அந்தப் பக்கம்
சாய்க்கிறீங்க. வாசல் வற வரைக்கும் கையால் ஏளப்பண்ண்ணும் எப்படித்
தெரியும். குடையை கொஞ்ச்ம் தூக்கிப் பிடிங்கப்பா, நான் எல்லாரையும் பாக்கணும் ஆசீர்வாதம் பண்ண்ணும் இல்லையா?
இவங்க கிட்ட
நான் வந்து மாட்டிக்கிட்டேங்கறதை நினைச்சு கிருஷ்ணமூர்த்தி மனைவியைப் பாரு, உள்ளூற சிரிக்கிறா!!!! இருக்கட்டும், நான் இன்னக்கு அவளுக்கு விளையாட்டு பொம்மை மாதிரி, என்ன
இருந்தாலும் அவ இந்த ஊர் பொண்ணு இல்லையா, மன்னிச்சுடுவோம்.
பரவாயில்லை, சரி பண்ணிட்டாங்களே!!!!
என்ன இப்ப ஆடாம, அசையாம போறோம்,
ஓ, கத்துகிட்டாங்களா., நாம என்னமோ
நினைச்சோம், இவங்க என்ன இன்னைக்கு ஒருவழி பண்ண போறாங்கன்னு பரவாயில்லை,
இதுக்கெல்லம் காரணம், சூப்பரா ஸ்டெப் போடறாறே அவங்க
தலைவர் ரகுனாதன் தான் காரணமா இருக்கும்.
என்ன, ஆயக்கோல் எல்லாம் போட்டு பர்ஃபெக்ட்டா
நிறுத்தறாங்க, இனிமே எனக்கு கவலை இல்லை, இவங்க வீதியுலா முடிச்சுடுவாங்க!!!!!!
எல்லா வளமும்
பெற்று, இதே மாதிரி,
ஒற்றுமையா, நன்னா இருக்கட்டும் இந்த கோஷ்டி,
அடிக்கடி வாங்கப்பா,
அதுக்கும் நாம
தான் அருள் செய்யணுமாம், கேட்கிறார் பாருங்க, கிருஷ்ணமூர்த்தி
பண்ணிட்டாப்
போச்சு, நாம் பண்ணாம
யார் பண்ண்ப்போறா?
என்ன அதுக்குள்ள
கூப்பிடுறாங்க, பிர்சாதம் அம்சைப் பண்ணப்போறாங்களா! இதோ வந்துட்டேன்,
இன்னம்பூர் புளியோதரை, சக்கரைப் பொங்கல்,
சுண்டல் சாப்பிடக் கசக்குமா!!!!
சரி நான் சாப்பிட்டு
விட்டேன், நீங்க போய்
பிரசாத்த்தை சாப்பிட்டு விட்டு எப்போதும் போல பேக் பண்ற வழியை பாருங்க!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக