what is your name?
what is your name of the school?
"என்ன சார் எங்களுக்கு ஆங்கில ப் பாடம் நடத்திகிறீர்களா?
"அப்படின்னு கேட் பது காதுல விழுது.
அப்படி இல்லைங்க, நான் நேத்திக்கு ஒரு வகுப் புக்கு என் பேத்தியுடன் சென்று இருந்தேன். அங்க தான் இந்த மாதிரி சின்ன கேள்விகளை கேட்டு மாணவர்களை அதனை தமிழாக்கம் செய்யச் சொல்லி தமிழ் வகு ப் புகளை , மாணவர்கள் விரும் பும் படி கற்றுக்கொடுக்கிறார்கள்.
இதுல என்ன விஷேஷம்ன்னா, பெரியவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியை கவனிக்கிறார்கள்.
நமது ஊரில் தமிழில் பேசுவதே கேவலம் என்று நினைச்சு, தங்கள் குழந்தைகளை கான்வெண்ட், ஆங்கில ப் பள்ளி என்று சேர்க்கும் நிலையில், இதைப் பார்த்தவுடன், மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.
இதற்காக அந்த ஊரில் உள்ள எல்லா தமிழ் மக்களும் சேர்ந்து குழு அமைத்து தங்களுக்குள் நன்றாகத் தமிழ் தெரிந்தவர்களை ஆசிரியர்களாக நியமித்து, பொதுவான பாடதிட்டம் வகுத்துக் கொண்டு, தங்கள் குழந்தைகலின் தமிழ் வளர்ச்சியில் நல்ல ஈடு பாடு கொண்டுள்ளார்கள்.
வாரத்தின் ஒருநாள், அதாவது வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணிநேரம் தமிழ் வகு ப் புகள் நடத்துகிறார்கள்.
4 வயது குழந்தைகள் முதல் பள்ளிக்கூடம் படிக்கும் குழந்தைகள் வரை வயதுக்கு ஏற்ப வகுப் புகள், ஆசிரியர் மாணவர்களுக்கு இடையே பரிமாற்றம் போன்றவைகள் மூலம் படிப்பு சொல்லிக்கொடுத்தல் போன்றவை இதன் சிறப் புகள் என்றுசொல்லலாம்.
அதெல்லாம் சரிங்க, எங்கே இப்படிநடக்குதுன்னு கேட்கிறீர்களா?
அமெரிக்கா, மெரிலேண்ட் எலிகாட் சிடியில் தாங்க இந்த வகுப்புக்குப் போனேன்.
இவ்ர்கள் அமெரிக்க தமிழ் வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து இத்தனை சிற ப் பாக நடத்துகிறார்கள்.
இதுல இன்னொரு முக்கியமான விஷயம், எப்படா வெள்ளிக்கிழமை வரும்ன்னு குழந்தைகளும் ஆர்வத்துடன் வரதுதாங்க.
வருஷத்து ஒரு நாள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் சுற்றுலா செல்கிறார்கள்.
ஆண்டு விழா நடத்தி குழந்தைகளின் பாட்டு, நடனம், நாடகம் போன்ற திறமைகளையும் வெளிக்கொணர்கிறார்கள் என்றால், இவர்களை ப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை
. "தமிழ் இனி மெல்ல சாகும்" என்ற கூற்றை பொய்யாக்கும் இவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
வாழ்க இவர்களின் தமிழ்த் தொண்டு.
http://tamiltalent.org/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக