திருவள்ளூர்!!!!! ஏன் அந்தப் பெயர்?
ஒரு விட்டுக்கு விருந்தாளி வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்?
என்ன செய்யவேண்டும்?
முதலில் கதவின் வெளியில் ஒரு பூட்டைத் தொங்கவிடச்
செய்ய வேண்டும், அப்படிங்கற!! அப்பத்தான் விட்டுலே ஆள் இல்லைன்னு நினைத்து வரவங்க உடனே திரும்பிப் போவாங்க!
பீன்ஸ் என்ன விலை தெரியுமா?
கிலோ 85 ரூபாய்ங்க.
10 ரூபாய்,15 ரூபாய் வித்த காய்கறி எல்லாம் இப்ப நூறு
ரூபாய் விக்குதுங்க! ஆமாய்யா காய்கனி விக்கற விலையிலே நமக்கே
ஆகாரம் கிடைக்குமான்னு தெரியலே, இதுலே வரவங்களே என்ன செய்ய வேண்டும்
அப்படிங்கிறிங்க!!
அப்படிச் சொல்லாதிங்க" இது நான்.
"விதுரர் மகாபாரதத்தில் திருதிராஷ்டிரனுக்கு உபதேசம் செய்யறார், பல நீதிகளை உபதேசம் செய்யறார். அவன் தன் பிள்ளைகள் தான் உசந்தவங்க,
தன் தம்பி பசங்களுக்கு எதுவும் போய் சேரக் கூடாது என்பதில் கறாராக இருக்கிறார்,
அதனாலே தூக்கம் வராமல் கஷ்ட படும்போது விதுரரைக் கூப்பிட்டு,
"விதுரா, ராத்திரியில் தூக்கம் வரவில்லை,என்ன செய்யலாம்?"
விதுரருக்குத் தெரியும், இவருக்கு ஏன் தூக்கம் வரலைன்னு, இருந்தாலும் தனக்கு தெரிந்த நீதியை திருதிராஷ்டிரனுக்கு உபதேசம் செய்கிறான்.
"திருதிராஷ்டிரா,வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி உபசரிக்கனும்ன்னு சொல்றேன் கேளு"
என்று சொல்கிறார் விதுரர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்று திருவள்ளூர். இது தொண்டை நாட்டு திவ்ய ஸ்தலங்களில் முக்கியமானது ஆகும். இந்த ஸ்தலம் அகோபில மடத்தின் நிர்வாகத்தின் கீழே வருகிறது.
அதன் பழமையான பெயர் "திரு எவ்வுள் ஊர்" என்பது தான் ஆகும்.
"எவ்வுள்" என்றால் "எந்த அறை?" என்று அர்த்தம் ஆகும்.
பகவான் ஒரு ரிஷியைப் பார்த்து கேட்டதால் அதற்கு
அந்த பெயர் ஏற்பட்டது. நாளடைவில் மருவி "திருவள்ளூர்" என்று மாறி விட்டது.
திருத்தாவநாசினிதிருக்குளம்திருத்தாவநாசினி என்ற பெயரில் புஷ்கரணிஉள்ளது. இதில் அமாவாசை தோறும வெல்லம் கரைப்பார்களாம். நோய்வாய் பட்டவர்களின் நோய் தீர்ந்து விடுமாம்.
இந்த பெருமாளின் மற்றொரு பெயர் வைத்திய வீரராகவன் ஆகும்.
ஆம், எல்லா நோய்களையும் நீக்கும் பெருமாள் இவர். ஆம், உலகம் என்ற
சம்சார நோயையும் நீக்குவார்
தீக்ஷாரண்யம் என்பது பழைய பெயர்.
மூலமூர்த்தி புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மேல் எழுந்தருளி உள்ளார். உற்சவமூர்த்தி வீரராகவப் பெருமாள் என்று பெயர். வேதாந்த தேசிகர் இந்த திவ்ய தேசத்தைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார்.
விருந்தாளி வரும் போது என்ன செய்ய வேண்டும்?
வருபவரை நாம் எழுந்து வரவேற்கவேண்டும், தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டும், குடிக்க, தாகத்து நீர் கொடுக்க வேண்டும் என்பன முக்கியமானது ஆகும்.
சாலி ஹோத்ர மகரிஷி ரொம்ப நாளாக "சாலி" என்ற நெல் மணிகளைக் கொண்டு பிள்ளை பேறு வேண்டி பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார்.
பெருமானும் அவர் முன்னால் வந்து
,"உமக்கு என்ன வேண்டும்"
என்று கேட்டார்.
மகிரிஷியும் விஷயத்தைக் கூற, பெருமானும்,
"திருத்தவநாசினி கையில் இருந்து கொண்டு என்னை வணங்கி வாரும்"
என்று சொல்லி விட்டு மறைந்து விடுகிறார்.
நீண்ட நாட்கள் ஆன பிறகு, பெருமான்,ஒரு வயோதிக உருவத்தை எடுத்துக் கொண்டு, ரிஷியின் முன்னே தோன்றினான்.
களைத்துப் போய் இருந்த பெருமானைப் பார்த்து மகரிஷி, அவர் திருவடிகளை அலம்பி,
"என்ன சாப்பிடுகிறீர்?",என்று கேட்டார்.
உடன் பெருமான், "என்ன கொடுத்தாலும் தேவலை"
ரிஷியும், தன்னிடம் உள்ள மாவு பக்ஷணத்தை பாதி ஆக்கி, மறுபாதியை பெருமானிடம் கொடுத்தார். பெருமானும் வாங்கி சாப்பிட்டு விட்டு, "இன்னும் பசியாரவில்லை, இன்னும் வேண்டும்" என்றார்.
ரிஷியும் தன்னிடம் இருந்த பாதியில், அதனைப் பாதியாக்கி ,பெருமானிடம் கொடுத்தார். அதையும் பெற்றுக் கொண்டு சாப்பிட்டுவிட்டு, "களைப்பாக உள்ளது, நான் படுக்க வேண்டும்'
என்னால் எங்கும் நடக்க முடியாது, நான் ஓய்வடுக்க "எவ்வுள்?""
திருஎவ்வுள்?
"இதோ இந்த இடத்திலேயே படுக்கலாமே?"
உடனேயே சடக்கென ரிஷியின் தொடையையே தலையனையாகக் கொண்டு
படுத்துக் கொண்டார்.
அப்பத்தான் ரிஷிக்கு, வந்திருப்பது பகவான் என்று தெரிந்து கொண்டார். உடனே பகவானிடம்
"இங்கேயே தங்கி எல்லாருக்கும் அனுக்கிரகம் செய்ய வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.
அன்று முதல் அங்கேயே இருந்து காட்சி அளிக்கிறார்.
வைத்யவீரராகவன்
ஆக பெருமானே கூட ஒருநாள் விருந்தாளியாக வரலாம். அதனால் வருகின்ற விருந்தாளியை முக மலர்ச்சியுடன் வரவேற்க வேண்டும், ஆசனம் கொடுக்க வேண்டும், ஆகாரத்தைக் கொடுக்க வேண்டும்
அதனால் தானோ என்னவோ கிராமங்களில் எல்லாம் வாசலில் ஒரு திண்ணை வைத்துக் கட்டி இருப்பார்கள். இரவில் வருகின்ற வழிப் போக்கன் தங்கி படுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.
" இப்ப புரிஞ்சதுங்க, என்ன கஷ்டம் வந்தாலும் வரும் விருந்தாளிகளை உபசரிக்கிறேங்க?"
விஜய் தொலைக்காட்சியில் .உ..வே .ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப் பட்டது

வணக்கம்
பதிலளிநீக்குதிரு எவ்வுள்ளில் உள்ள தீர்த்தம் திருத்தாவநாசினி இல்லை, ஆனால் ஹ்ருத் தாப நாசினி பொருள் இதயத்தில் உள்ள தாபத்தை நீக்குவது என்பதாம். வெல்லத்தை ஏன் கரைக்கிறோம் என்றால் சீக்கிரம் கரைவது என்கிறார்கள், உப்புக்கூட சீக்கிரம் கரையுமே என்றால் பதில் இல்லை..
காணும் உலகு மூவகைத்து, ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்று, அந்தணர்கள் செய்யும் திதியில் முன்னோர்கள் மூவருக்கும் (வசு ருத்ர ஆதித்யர்கள்)சொல்லும் மந்திரங்களில் ஆதித்யரான கொள்ளுப் பாட்டனுக்கு மது என்று ஆரம்பிக்கும் மூன்று மந்திரங்களைக் கூறுகிறார்கள், மது என்பது சாராயம் அல்ல, ப்ரதி பிம்ப முறையில் தூம(புகை) என்றாவதனால் அதற்கு எதிரான ஒளி என்றே பொருள் கொள்ள வேண்டும். தந்தையிடமிருந்து உடலையும் பாட்டனிடமிருந்து உணர்வையும் கொள்ளுப் பாட்டனிடமிருந்து சித்தத்தையும் பெறுகிறோம்,
சிருஷ்டிக்குக் காரணம் கரிம அமிலங்கள். காரணமே ஸூக்ஷ்மத்திற்கும் ஸ்தூலத்திற்கும் அடி மூலமாகும்.அதன் அடிப்படை கரி வெல்லம் முதலிய எல்லா இனிப்புக்களுக்குமே கரி தான் அடிப்படை. சித்தத்தின் படியே நாம் பிறப்பெடுப்பதனால் வெல்லத்தைக் கரைத்தால் ஹிருதயத்தில் உள்ள தாபங்கள் நீங்கும் என்பதே கருத்து,
mdsbgs@yahoo.com