செவ்வாய், பிப்ரவரி 7

நாமக்கல் வெண்ணெய் காப்பு உற்சவம்!!!

நாமக்கல் ஆஞ்சநேயர்



வெண்ணைக் காப்பில் ஆஞ்சநேயர்

சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யும் அன்பர்கள்


சந்நிதியில் சஹஸ்ரநாமம்
நாமக்கல் வெண்ணெய் காப்பு உற்சவம்!!!
நாமக்கல், பெயர் சொன்னால் போதும், என்ன ஆஞ்சநேயரைப் பத்தி எழுதப்போறையா என்று   உங்களுக்கு சந்தேகம் வரும். அவர் மட்டுமா அங்கே இருக்கார், இல்லே, அவுருக்கு எதிர்த்தாப்லே   லக்ஷ்மி நரசிம்ஹன் மற்றும் நாமகிரித் தாயாரும் உள்ளார்கள். அவர்களைப் பத்தியும் பார்ப்போம்.
நாமக்கல் ஊருக்கே பல சிறப்புகள் உண்டு,
லாரிகள் நிறையத் தயாரிக்கும் இடம்,
முட்டைகள் உற்பத்திக்கு முதலிடம்,
கோட்டை ரங்கநாதர் சந்நிதி இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இதவிட முதல்ல இருக்கிறது லக்ஷ்மி நரசிம்ஹன் சந்நிதி மற்றும்
ஆஞ்சநேயர் சந்நிதி தான் நகரின் மையமாக இருக்கும் கோயில் லக்ஷ்மி நரசிம்ஹர் சந்நிதி.
மொட்டை கோபுரத்துடன் காட்சி அளிக்கும் இந்த கோயிலின் உள்ளே சென்றால்  இடது  பக்கம் உள்ள சந்நிதி நாமகிரித் தாயார் சந்நிதி. இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்
அவ்வளவு அழகான, அமைதியான, தன்னை நாடி வருபவர்களுக்கு அவ்வளவு செல்வத்தையும் அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறாள்.
மேலே சென்றால் குடவரை கோயிலாக உள்ள மூலவர் லக்ஷ்மி நரசிம்ஹர் சந்நிதி. ஆஜானுபாகுவான நிலையில் காட்சி அளிக்கிறார்.
அருகிலேயே பிரம்மா, சிவன் ஆகியோரும்காட்சி அளிக்கின்றனர். அவரின் வலது பக்கத்தில் ஹிரன்யகசிபுவை வதம் செய்யும் காட்சி தத்ருபமாய் உள்ளது. கை நகங்களால் கீறும் காட்சி  சிலிர்க்கவைக்கிறது. மூலவரின் இடது பக்கம் பூமியை உத்தாரணம் செய்யும் வராகப் பெருமான் லட்சுமியுடன் காட்சி அளிக்கிறார். அவருக்கு அருகிலேயே உலகளந்த பெருமாள் மகாபலியுடன்
காட்சி அளிக்கிறார்.

மகாவிஷ்ணுவும் மற்றொரு பக்கத்தில் காட்சி அளிக்கிறார். சந்நிதியை விட்டு அகலமுடியாமல், அர்ச்சகர் சொல்கிறாரே  என்று வெளிவரும்னு, அப்படி உள்ளது சந்நிதி.

நாமக்கல் ஆஞ்சநேயர் எட்டு அடி உயரம் உள்ளவர். அவர் இருக்கிறது திகம்பர கோயில்ன்னு  பேராம். அப்படின்னா மேற்கூறை இல்லாத கோயில்னு அர்த்தம். அவர் தன்னிடத்தில் இருந்து  எதிராக உள்ள லக்ஷ்மி நரசீம்ம பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அவருடைய கண்ணும்  நரசிம்ஹரின் பாதமும் ஒரே நேர்கோட்டில் உள்ளதாம்.
ஆஞ்சநேயர் தூது செல்வதில் கெட்டிக்காரர். அவருக்கு தூதுவராக இருப்பதற்கு எல்லா  குணங்களும் உள்ளதாம். தூதுவன் எப்படி இருக்கவேண்டுமாம், பொறுமை நிறைய வேண்டுமாம், வீரனாக இருக்கவேண்டுமாம். தான் யாருக்கு தூது செல்கிறோம் என்பதை நன்கு உணர்ந்து  செயல்படவேண்டுமாம், அவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் எதிரியிடம் தைரியத்துடன் சொல்லும் பக்குவம்  இருக்கவேண்டுமாம்.
இப்படித்தான் ஆஞ்சநேயர் இலங்கைக்குச்  தூதுவனாக செல்கிறார். சென்ற இடத்தில,
சீதாதேவியை பார்த்து, ராமனைப் பற்றி எல்லா விவரங்களையும் பெரியாழ்வார், சொல்கிறார் பரசுராமன் தவ வலிமையைச் சிதைத்தது, சீதை மல்லிகை மாலையால் ராமனைக் கட்டியது, இலக்குவனோடு காடு சென்றது, குகனோடு தோழமை கொண்டது என்று இப்படியாக ஒன்றோன்றாகச்
அடையாளம் சொல்லி மோதிரத்தை அடையாளமாக காட்டுவதை
           நெரிந்தகருங் குழல் மடவாய்
              நின்னடியேன் விண்ணப்பம்,
           செறிந்த மணி முடிச்சனகன்
              சிலையறுத்து நினைக்கொணர்ந்த
           தறிந்து, அரசு களைகட்ட
               அருந்துவத்தோ நிடைவிலங்க
           செரிந்தசிலை கொடுதவத்தைச்
               சிதைத்ததுமோ ரடையாளம்
என்று பாசுரங்களால் ஆஞ்சநேயரைப் பற்றிப் புகழ்கிறார், பாருங்கள்.


அப்படிப்பட்ட ஆஞ்சநேயரூக்கு பக்தர்கள் பலவிதமான அலங்காரங்கள் செய்து பார்ப்பதில் விருப்பம்  இருக்கும். ஒருத்தர் வெத்திலை மாலை போடனும்ன்னு ஆசைப்படுவார், வேறொருவர் வடைமாலை சாத்தனும்ன்னு விரும்புவார், இன்னொருத்தர்  வெண்ணை சாத்தணும்   என்று நினைப்பார்கள். யார் என்ன கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வான் எங்க ஆஞ்சநேயர். அப்படித்தான் அன்னைக்கு 2.2.2012 அன்று, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தனும்னு  ஒரு பக்தர் வேண்டிக்கொண்டதை பார்க்கும் அனுபவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சபா நண்பர்கள்,  60-க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு, கிடைத்தது.
ஒரு லட்டு சாப்பிடறவன் கிட்டே இன்னொரு லட்டு கொடுத்தா எப்படி இருக்கும், அதுபோல  சபா நண்பர்களை சந்தியிலே சஹஸ்ரநாமம் சொல்லுங்க என்று சொன்னார்கள். எங்களுக்கு  ரெண்டு லட்டு சாப்பிட்டது போலத்தான், நாங்களும் ஆறு தடவைக்கு மேல் பாராயணம்  செய்தோம்.
பாக்கியம் செய்து இருந்தால்தான் கிடைக்கும்.
அதிலிருந்து சில காட்சிகள் போட்டோக்களில் உள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக