பிருந்தாவனம்
நெருஞ்சி முள் காடாக இருந்த இந்த இடத்தை மாடு கன்றுகள் மேய்க்கும் மேய்ச்சல்
நிலமாக மாற்றியது கண்ணன் என்கிறார்கள். அதனால் "பிருந்தாவனம்",என்று பெயர்
"நெருஞ்சி முள்காடு" என்று பெயர் பெற்றது. இதன்படி கண்ணனால் உருவாக்காப்பட்டது,
பிருந்தாவனம் ஆகும்.
பிருந்தாவனம் மதுராவுக்கு அருகாமையில் உள்ளது. நாச்சியார் திருமொழி 14வது பதிகம்
முழுமையும் பிருந்தாவனத்தைப் பற்றியே, கண்ணனைத் தேடியும், கண்டும் அனுபவித்துப்
பாடியிருக்கிறாள், கோதை நாச்சியார் .
பட்டி மேய்ந்தோர் காரேறு
பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே?
இட்டமான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே. (14-1)
பிருந்தாவனத்தில் பனிரெண்டு காடுகள் உள்ளன அவை.1 மகாவனம்.
2.காம்யவனம்.3.மதுவனம். 4.தாளவனம். 5.குமுத வனம் 6.பாண்டிரவனம்.7.பிருந்தாவனம்.8கதிரவனம்.9.லோஹவனம் 10.பத்ரவனம்.11.பஹுளாவனம். 12.பில்வவனம், ஆகியவையாகும். இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன. பிருந்தாவனத்தில் மட்டுமே ஏழுநாட்கள் தங்கி பரிக்ரமா செய்து எல்லா இடங்களையும் சேவிக்கலாம். பிருந்தாவனத்தில் எல்லா இடங்களும் பார்க்க வேண்டிய இடங்கள தான். இங்கு சில முக்கியமான இடங்களை அதன் மகத்துவத்துடன் பார்க்கலாம்.
1.கேசிகாட்:
கம்சன் தன்னுடைய அசுரனான (கண்ணனைக் கொல்வதற்கு எல்லா வழிகளையும் முடித்த பின்), கேசியைக் கூப்பிட்டு "போய்,கண்ணனை கொன்று விட்டு வா" என்று ஆணையிடுகிறான்.வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல குதிரை வடிவில் வருகிறான்.வருகின்ற வேகத்தை நாரதர் "ஜகத்தே அஸ்தமித்து விட்டது" என்று கூறுவதாக ஸ்வாமிகள் கூறுகிறார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் கேசி வதத்தை "துறந்கம்வாய் கீண்டுகந்தானது தொன்மையூர் அரங்கமே" என்று அருளினார்.
2.நிதுவனம்:
கண்ணன் அந்தி சாய்ந்தபின் கோபிகைகளோடு விளையாடிய பல தோட்டங்களுள் இது முக்கியமானது ஆகும்.மிக அதிகமான சின்ன சின்ன மரங்களை அதிகமாகக் கொண்ட இடம் ஆகும்.
3.இம்லி தலா:
இங்குள்ள புளிய மரம் கண்ணன் காலத்தில் இருந்துஉள்ளது.இம்மரத்தின் அடியில் கண்ணன் அடிக்கடி வந்து கோபியருடன் அமருவான்.சில சமயம் கோபிகைகளைப் பிரிந்த விரஹ தாபத்தால் கருத்த கண்ணனின் திருமேனி வெளுத்துவிடும்.அப்போது இந்த மரத்தின் அடியில் அமர்ந்தவுடன் பழைய நினைவு வந்து கருமை நிறம் வந்து விடுமாம்.
4.புராணா காளிய காட்:
"காளிங்கன்" என்னும் கொடிய விஷமுடைய பாம்பு ஒரு மடுவில் இருந்து கொண்டு தன்
விஷ மூச்சால் அருகில் உள்ள செடி கொடி மற்றும் பிராணிகளை அழித்து வந்தது.கண்ணன்
இப்பாம்பை அடக்கி, கடலுக்குள் விரட்டியடிக்க எண்ணி அருகில் உள்ள கடம்ப மரத்தின் மீது
ஏறி காளியன் தலையில் குதித்தான்.கண்ணனைத் தாங்கமாட்டாத காளிங்கன் அவனிடம்
சரணடைந்து வேண்ட, கண்ணனும் அவனை மன்னித்து ஒட்டிவிட்டான்.
அந்த இடம்தான் புராணா காளியகாட் என்று அழைக்கப் படுகிறது.
5.சேவா குஞ்ச்:
கண்ணன் மாலைப்பொழுதில் கோபியர்களோடு ஆடிப்பாடி விளையாடிய இடம்.இன்றும் இரவில் இந்தத் தோட்டத்தில் வாத்தியம் மற்றும் பாட்டொலி கேட்கிறது என்று சொல்கிறார்கள்.மாலை 5.30க்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை.கூட்டம் கூட்டமாக இங்கு இருக்கும் குரங்குகள் கூட மாகி இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்று விடுகின்றனவாம்.
6.ஸ்ரீரங்கஜி மந்திர்:
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ.உ.வே.கோவர்த்தனம் ரங்காச்சார்ய ஸ்வாமி என்பவர் 1845ல்
தொடங்கி 1851ல் கட்டி முடித்த கோயில் இது.தென்னிந்திய பாணியில் சோழர்கள் சிற்ப
கட்டிடக் கலை பாணியில் அமைந்துள்ள புராதனமான கோயில். பிரதான மூர்த்தி கண்ணன்
புல்லாங்குழல் சகிதமாக சேவை சாதிக்கிறான்.ஆண்டாளும் சேவை சாதிக்கிறார்கள்.
மேலும் ஸ்ரீ ரங்கநாதனுக்கும் ஆழ்வார், ஆசார்யர்களுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.
பிருந்தாவனமே முழுதும் கோயில்கள் தான். எதை விடுவது எதைச் சேர்ப்பது என்பது மிகக்
கடினமான ஒன்று. இருந்தாலும் முக்கியமான சில கோயில்கள்------கோவிந்தாஜி மந்திர்,க்ருஷ்ண
பலராம் மந்திர்,
க்ருஷ்ண பாராம் மந்திர்
ஷாஜி மந்திர்
மது வனம்
பாங்கே பிஹாரி (கூட்டம் சொல்லி மாளாது) மந்திர், ராதாவல்லபஜி மந்திர், காஞ்ச (கண்ணாடி) மந்திர் (முழுவதும் கண்ணாடியால் பதிக்கப்பட்ட, மற்றும் இயக்கம் கொண்ட கண்ணனின் திருவிளையாடல் காட்சிகள்---பார்க்க வேண்டிய முக்கியமான இடம்),ஷாஜி மந்திர்
2.காம்யவனம்.3.மதுவனம். 4.தாளவனம். 5.குமுத வனம் 6.பாண்டிரவனம்.7.பிருந்தாவனம்.8கதிரவனம்.9.லோஹவனம் 10.பத்ரவனம்.11.பஹுளாவனம். 12.பில்வவனம், ஆகியவையாகும். இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன. பிருந்தாவனத்தில் மட்டுமே ஏழுநாட்கள் தங்கி பரிக்ரமா செய்து எல்லா இடங்களையும் சேவிக்கலாம். பிருந்தாவனத்தில் எல்லா இடங்களும் பார்க்க வேண்டிய இடங்கள தான். இங்கு சில முக்கியமான இடங்களை அதன் மகத்துவத்துடன் பார்க்கலாம்.
1.கேசிகாட்:
கம்சன் தன்னுடைய அசுரனான (கண்ணனைக் கொல்வதற்கு எல்லா வழிகளையும் முடித்த பின்), கேசியைக் கூப்பிட்டு "போய்,கண்ணனை கொன்று விட்டு வா" என்று ஆணையிடுகிறான்.வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல குதிரை வடிவில் வருகிறான்.வருகின்ற வேகத்தை நாரதர் "ஜகத்தே அஸ்தமித்து விட்டது" என்று கூறுவதாக ஸ்வாமிகள் கூறுகிறார். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் கேசி வதத்தை "துறந்கம்வாய் கீண்டுகந்தானது தொன்மையூர் அரங்கமே" என்று அருளினார்.
2.நிதுவனம்:
கண்ணன் அந்தி சாய்ந்தபின் கோபிகைகளோடு விளையாடிய பல தோட்டங்களுள் இது முக்கியமானது ஆகும்.மிக அதிகமான சின்ன சின்ன மரங்களை அதிகமாகக் கொண்ட இடம் ஆகும்.
3.இம்லி தலா:
இங்குள்ள புளிய மரம் கண்ணன் காலத்தில் இருந்துஉள்ளது.இம்மரத்தின் அடியில் கண்ணன் அடிக்கடி வந்து கோபியருடன் அமருவான்.சில சமயம் கோபிகைகளைப் பிரிந்த விரஹ தாபத்தால் கருத்த கண்ணனின் திருமேனி வெளுத்துவிடும்.அப்போது இந்த மரத்தின் அடியில் அமர்ந்தவுடன் பழைய நினைவு வந்து கருமை நிறம் வந்து விடுமாம்.
4.புராணா காளிய காட்:
5.சேவா குஞ்ச்:
கண்ணன் மாலைப்பொழுதில் கோபியர்களோடு ஆடிப்பாடி விளையாடிய இடம்.இன்றும் இரவில் இந்தத் தோட்டத்தில் வாத்தியம் மற்றும் பாட்டொலி கேட்கிறது என்று சொல்கிறார்கள்.மாலை 5.30க்கு மேல் யாரையும் அனுமதிப்பதில்லை.கூட்டம் கூட்டமாக இங்கு இருக்கும் குரங்குகள் கூட மாகி இங்கிருந்து இடம் பெயர்ந்து சென்று விடுகின்றனவாம்.
6.ஸ்ரீரங்கஜி மந்திர்:
க்ருஷ்ண பாராம் மந்திர்
ஷாஜி மந்திர்
மது வனம்
பாங்கே பிஹாரி (கூட்டம் சொல்லி மாளாது) மந்திர், ராதாவல்லபஜி மந்திர், காஞ்ச (கண்ணாடி) மந்திர் (முழுவதும் கண்ணாடியால் பதிக்கப்பட்ட, மற்றும் இயக்கம் கொண்ட கண்ணனின் திருவிளையாடல் காட்சிகள்---பார்க்க வேண்டிய முக்கியமான இடம்),ஷாஜி மந்திர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக