தனியன்
நீளா துங்கஸ்தநகிரிதடீ ஸூப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்தமத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய:
அன்னவயற்புதுவவையாண்டாளரங்கற்குப்
பண்ணு திருப்பாவைப் பல்பதியம்--- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு.
சூடிக்கொடுத்த சுடர்கொடியே! தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்-----நாடிநீ
வேங்கடவற்கென்னை விதிஎன்றவிம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.
முதல் பாசுரம்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்குமாய்ப்பாடிச் செல்வச்சிறுமீர்காள்!
கூர்வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்
ஏரார்ந்த கண்ணியசோதையிளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரேம்பாவாய்
Excellent.
பதிலளிநீக்குN.Srinivasan
Annam Avenue