ஞாயிறு, ஜூலை 28

தர்ப்பணம் செய்யணுமா?

”வாப்பா, கோபாலா.எங்கே இவ்வளவு தூரம்?”
”ராமசாமி, சும்மா பார்த்துட்டு போகாலாம்ன்னு வந்தேன், ஆமா,
என்னப்பா பண்ணிக்கொண்டு இருக்கே?”
“இன்னிக்கு அமாவாசை, அதனால் த்ர்ப்பணம் பண்ணிண்டுருக்கேன்”.
“எதுக்கு த்ர்ப்பணம் பண்ணனும்?’
‘இது என்னப்பா கேள்வி? நம்ம தகப்பனார், தாயார், முன்னோர் ஆகியோருக்கு  அமாவாசை, கிரஹணம், அவர்கள் இறந்த திதி ஆகிய நாட்களில் தர்ப்பணம் பண்ணா போற வழிக்கு புண்ணீயம்ன்னு பெரியவர்கள் சொல்லி இருக்க்றது உனக்குத் தெரியாதா? இதென்ன புதுசா கேட்கிறே?”
”யார் போற வழிக்கு?”
“இதென்ன கேள்வி? அவர்களுக்குத் தான்.”
”அதில்லைப்பா, அவர்கள் தான் போய் சேர்ந்துட்டாங்களே, அப்பறம் அவர்களுக்கு எங்கே புண்ணியம் போய் சேரப் போறது?”
“இதென்ன விதண்டாவாதம் பேசறே?”.
"நான் சொல்லல்லை இதெ.”
“பின்ன யார் சொன்னாங்க?”.
“சென்ற ஞாயிறு அன்று திருவங்கத்தில் உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகளின் உபன்யாசம் ‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’ என்ற தலைப்பில் பேசினார். அப்ப எதுக்குத் தர்ப்பணம், திதி இதெல்லாம் செயறது என்பதைப் பற்றியும், பாபம், புண்ணீயம் என்பதைப்
பற்றியும் பேசினார். அப்பத்தான் பாபத்தையும், புண்ணியத்தையும் தொலத்தாத்தான் வைகுந்தம் போகமுடியும். நாம் பண்ணற தர்ப்பணம், முன்னோருக்கு கொடுக்கிற திதி இவையெல்லாம் அவர்களுக்கு போய் சேராது. நம்ம கர்மத்தை தொலைத்தால் தான் நாம் வைகுந்தம் போக முடியுமாம். நம்ம முன்னோர்கள் அவர்கள் கர்மத்தை  லைத்திருந்தார்கள்
என்றால் அவர்கள் வைகுந்தம் போய் இருப்பார்களாம். நாம எள்ளும் தண்ணியும் இறைத்தால் நமக்குத்தான் புண்ணியம். அவர்களுக்கு அப்படியே போய்ச் சேராதாம்.
”பின்ன எப்படிப் போய் சேருமாம்”.
”அப்பறம் ஒரு உதாரணம் கொடுத்தார் பாரு, சூப்பர்.”
“என்ன?”
“இப்ப நம்ம செல்லுங்கற கைபேசியிலே பேசத்தானே செய்யறோம், மற்ற பக்கத்திலெ இருக்கிறவங்களுக்கு அப்படியே போய்ச் சேருதா?”
“அதெப்படி போய்ச் சேரும்?’. 
”அப்ப என்ன நடக்குது அங்க?”
“ஒலியை மின் அலைகளா மாற்றி அதன் அதிர்வெண்ணையும் அதிகரித்து, வேறொரு அதிர்வெண்ணோடு கலந்து ஏரியல் மூலமா அனுப்புறாங்க. மற்ற பக்கத்திலே இதெ தலைகீழா மாற்றி மீண்டும் ஒலி அலைகளா மாற்றின பிறகு நம் காதிலெ விழுது இல்லையா? (இதுக்குப் பேரு ஆங்கிலத்தில் modulation and demodulation என்று சொல்வார்கள்). அதுபோலத்தான் நாம எள்ளு தண்ணி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் செய்த கர்மவினைப்படி இப்ப அவர்கள் என்ன பிறவி எடுத்து இருக்காங்களோ அதற்கு ஏற்றாற்போல், உதாரணத்துக்கு, அதாவது மாடு ஜன்மம் எனில் புல்லாக, போய் சேருமாம்.”
“பிரமாதமா இருக்கே, ஏன் விதண்டாவாதம் பண்ணறவங்களுக்கு கூட இது சரியாப் படுமே, இல்ல!
“அதோட விடல ஸ்வாமிகள், அந்த மாதிரி இறந்தவங்களுக்கு காரியம் ஸ்ரிங்கத்தில் பண்ணா விஷேஷம், அதுக்காக திருமங்கை ஆழ்வார், பெருமாளிடம் வேண்டி ஒரு படித்துறை கட்டி இருக்கான்னு சொல்லி
அதுக்கான் கதையையும் சொன்னார். 

(அந்தக் கதை ஊர் கூடி தேர் இழுப்போம் அன்ற தலைப்பில் முன்னர் எழுதி உள்ளோம்).”
”அதோடு இல்லாமல் அந்த காரியங்கள் செய்ய தன்னார்வ தொண்டு அமைப்பையும் நிறுவி கட்டடங்கள் கட்டிக் கொண்டு இருக்கா, அதுக்கு எல்லாரும் நிதி உதவி செய்யாணுன்னு வேண்டி கேட்டார்கள். நம்முடைய பொண்ணு பையன் வெளினாட்டுலே இருந்தா அவர்களிடம் இருந்தும் நிதி கேட்டு கொடுங்கன்னு வேண்டி கேட்டார்கள்”
“செய்ய வேண்டியது தான் அப்பா. அந்த விலாசம் சொல்லு, உடனே ஒரு தொகையை கொடுத்து போற காலத்துக்கு புண்ணியத்தைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்வோம்”. 

இது தான் அந்த அட்ரஸ்:
               "ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் ட்ரஸ்ட்"
 2008 ஆண்டு பதிவு செய்யப்பட்டு  முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. கொள்ளிடக்கரையில் 11000 சதுர அடி, 
ஒரு தர்ம சிந்தனை  கொண்ட குடும்பம் மூலமாக தானமாக பெறப்பட்டு, ட்ரஸ்ட் பெயரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்ய விதிகளுக்கு அறைகள், கிணறு, கரைப்பதற்கு குளம், தீட்டு இல்லாமல் காரியங்கள்  நடத்த தனியான இடம், 
கழிவறைகள், தடையில்லாத மின்சாரம் போன்றவைகளுக்கு  நன்கொடைகள் எதிர்பார்க்கிறார்கள்.
ராமனுக்கு அணில் செய்தது போல், ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். இதில் அளிக்கப்படும் நன்கொடைகள் 
80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டாம்.
மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
                 ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் டிரஸ்ட்
                 23, ராஜாஜி தெரு, ரெங்கநகர், ஸ்ரீரங்கம்,திருச்சி-620006
                 போன்:0431-2433078,
                E-Mail:stmmtrust@yahoo.com




செவ்வாய், ஜூலை 23

எப்படி இருக்க வேண்டும் உறவுகள்?





ஒரு தகப்பனார் தன்னுடைய வயதான காலத்தில் தன் சொத்துக்களை
தன் இரு பையன்களுக்கும் சமமாக எழுதி வைத்து விட்டு இறந்து 
போனார். ஒருவனுக்குக் கலாயாணமாகி குழந்தைகள் உள்ளனர்.
மற்றவன் பிரம்மச்சாரி.
கல்யாணமான பையன் தன் மனைவியிடம்,
“கமலா,என் தம்பி ராகவன் கலயாணமாகவில்லை. அவனுக்கு என்று
வாரிசுகளும் இல்லை. வியாதி என்று கடைசி காலத்தில் வந்தால் 
அவன் கஷ்டப் படுவான், நமக்கோ குழந்தைகள் உள்ளனர்.
கடைசி காலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் காப்பாற்றும். எனவே
அப்பா நமக்கு என்று கொடுத்த சொத்தை ராகவனுக்குக் கொடுக்கலாம்
என்று நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறாய்?”
”இதில் என்ன அப்பா சந்தேகம்.  இவ்வளவு நாட்கள் சொத்தை வைத்துக்
கொண்டிருந்த்தே தப்பு உடனே சித்தப்பாவுக்கு மாற்றி எழுதி விடுங்கள்”
அம்மா பதில் சொல்ல வருவதற்குள் குழந்தைகள் இருவரும் கோரசாக
அப்பாவுக்கு பதில் சொன்னார்கள்.
“அமாங்க, குழந்தைகள் சொல்வது தான் கரக்ட், போஙக உடனே மச்சினரிடம் கொண்டு போய் கொடுங்க”, மனைவி கமலா தன் கணவரிடம் சொன்னாள்.
”இதோ தம்பியை பார்க்கக் கிளம்பறேன்”.
”என்னங்க, வாசலில் யார் வந்திகிருக்கா பாருங்க?”, சட்டையை போட்டுக்கொண்டு கிளம்ப இருந்த கணவனை பார்த்து மனைவி சொன்னாள்.
“வாங்க சித்தப்பா, உங்களைப் பத்தித்தான் இப்ப பேசிகிட்டு இருந்தோம்,
நீங்களே வந்துட்டிங்க”, குழந்தைகள் வாசலில் சித்தப்பாவை பார்த்து
சந்தோஷத்தில் வரவேற்றனர்.
“என்ன அண்ணா, மன்னி, பசங்களா எல்லோரும் நலம் தானே”, ராகவன்
எல்லோரையும் குசலம் விஜாரித்தான்.
“நலம்தான் ராகவா, நீ எப்படி இருக்காய்? கமலா, தம்பிக்கு சாப்பிட சூடா
ஏதாவது கொண்டா. உன்னைப் பார்க்கத்தான் நானே கிளம்பிக்கொண்டு 
இருந்தேன். அதென்ன கையில் என்ன பை?”
“நலம்தான் அண்ணா, ஒண்ணும் இல்ல, குழந்தைகள், மன்னி, மற்றும்
உன்னைப் பாக்கணும் போல இருந்தது, அதான் கிளம்பி வந்துட்டேன்”
“காபியை சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க, தம்பி”, மச்சினரிடம் காபியை
கொடுத்துக் கொண்டே கமலா கூறினாள்.
”காபி நன்னாக இருக்கு மன்னி”.
“அது சரி என்ன விஷயம், உடம்பு ஏதும் சரியில்லையா ராகவா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு
அதெ உடனே செயல்படுத்துடலாம்ன்னு தான் வந்தேன். நீங்க தப்பா
நினைக்க கூடாது”.
“அப்படி என்னடா தலை போற விஷயம், உடனே சொல்லாட்டா என்ன,
போன்ல சொல்லி இருக்கலாமே?”
“அதானே தம்பி, மெதுவா சொல்லிருக்கலாமே”.
“இல்ல மன்னி, அண்ணா. நல்ல காரியங்களை தள்ளிப் போடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. அப்படித் தள்ளிப் போட்டா சமயங்களில் மனசு மாறி செய்யாம போயிடலாம். அதான் உடனே கிளம்பி வந்துட்டேன் அண்ணா”.
“என்ன சித்தப்பா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”
”அப்படி இல்ல குழந்தைகளா, இப்ப எனக்கு யார் இருக்கா உஙகளை விட்டா? கடைசி காலத்திலே உங்க காலடியிலே வந்து விழுந்திட மாட்டேனா? நீங்க, அண்ணி, அண்ணா எல்லாரும் என்ன கரை சேர்த்துட மாட்டீங்களா?”
ஷாக்காகி, “திடீரென்னு அதுக்கு என்ன வந்ததுங்க?” மன்னி.
“அப்படி இல்லை மன்னி, நெருப்புன்னா வாய் வெந்துடுமா, எதுக்கும்
முன்னெச்சரிக்கையாக இருக்கணும் இல்லையா? அதோட அண்ணாவுக்கும் பெரிய குடும்பம், ரெண்டு குழந்தைகள், இவர்களுக்கு கல்யாணம் பண்ண வேண்டும், அதுக்கெல்லாம் செலவு அதிகமாகும்”.
“அதனால,”
“அதனால யோசிச்சேன், நானோ சம்பாதிக்கிறேன் அது எனக்குப் 
போறும். அப்பா கொடுத்த சொத்த வச்சுண்டு நான் என்ன
பண்ணப்போறேன், அத ரெண்டு கொழந்தைகள் பேருலெ மாத்தி
எடுத்துண்டு வந்திருக்கேன், மறுப்பு சொல்லாம வாங்கிக்கணும்”.
இப்படி சொல்லிக் கொண்டே பையைத் திறந்து டாகுமெண்டுகளை
குழந்தைகளை கூப்பிட்டு கொடுத்தான் ராகவன்.
குழந்தைகள்,அண்ணா, மன்னி, தம்பியை நினத்து வாயடைத்து நின்றார்கள்.
உறவுகள் இப்படி அல்லவா இருக்கவேண்டும்!!!!!!
எங்கேயோ கேட்டது தான்!!!!!

ஞாயிறு, மே 5

கதை சொல்லும் பாசுரங்கள்!!!!!!!!! முதல் பகுதி.



மதுரா



கதை சொல்லும் பாசுரங்கள்!!!!!!!!!
முதல் பகுதி.
”ஏண்டா கண்ணன், என்னடா பண்ணிண்டு இருக்கே?
”, எம் பேரனைப்  பார்த்துக் கேட்டேன்.
“இதோ வரேன் தாத்தா”.
“இல்லைடா, நீ என்னமோ செய்து கொண்டிருக்கியே, அதத் தான்
என்ன பண்ணீண்டு இருக்கேன்னு கேட்டேன்”.
என் பேரன் வயது நான்கு. இன்னும் பள்ளிக்கூடத்தில் சேர்க்கவில்லை. எல்லா வீட்டிலேயும் உள்ளது போல் என் பெண் வீட்டீலேயும், குழந்தைகளுக்கு என்னன்ன விளயாட்டுப் பொருட்கள் வேண்டுமோ அத்தனையும் பேரனுக்கு வாங்கி வைத்துளளார்கள். அதை வைத்துக் கொண்டு அவன் விளையாடுவான் என்று பார்த்தால், அவனோ கையில் ஐபோனை வைத்துக் கொண்டு அதில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். அவ்னின் கவனத்தை விலக்கும் பொருட்டுத் தான் அவனைக் கூப்பிட்டேன்.
தாத்தா பார்த்துவிட்டார் என்று தெரிந்து கொண்டு தான் அவனும் மேலே
சொன்ன பதிலைக் கொடுத்தான்.
நான் விடுவேனா?
“இங்கே வாடா, உனக்கு ஒரு கதை சொல்கிறேன், அப்புறம் ஐபோனில்
படம் பார்க்கலாம்”.
“என்ன கதை சொல்லப் போறே தாத்தா. எனக்கு கதைன்னா ரொம்ப
இஷ்டம்.”
“அப்படியா, இதுக்கு முன்னால எங்கேடா கதை கேட்டு இருக்கே?”
“ஆமாம் தாத்தா, எங்க ஸ்கூல்ல மிஸ் நிறைய கதை சொல்வாங்க தாத்தா”.
 ”என்னன்ன கதையெல்லாம் மிஸ் சொல்லி இருக்காங்க, எனக்கு ஒரு கதையைச் சொல்லுடா”.
“போ தாத்தா, நீ சொல்றேன்னு சொல்லிட்டு என்ன சொல்லச் சொல்றே”.
என்னை மடக்கி விட்டது போல் ஒரு பார்வை பார்த்தான்.
சொல்றது சரிதானே, நான் கதை சொல்றேன்னு சொல்லிட்டு, அவ்னைக்
கேட்டால்!
‘சாரிடா, நானே கதை சொல்றேன், அதுக்குப் பிறகு இந்த ஐபோனை வைத்துக் கொண்டு படம் பார்க்ககூடாது, என்ன நான் சொல்றது சரியா?”
“சரி தாத்தா, இனிமே இதை வச்சுண்டு படம் பாக்கமாட்டேன்”,ன்னு சொல்லி ஐபோனை மேஜையில் கொண்டு வச்சான்.
’என்ன கதையை ஆரம்பிப்போமா?”.
”இது ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்த கதை. இத அவதாரம்ன்னு
கூடச் சொல்லுவாங்க”.
“அவதாரம்ன்னா என்ன தத்தா?”
”எப்பல்லாம் நாம இருக்கிற உலகத்திலெ மக்களைக் கஷ்டப்படுத்துற அசுரர்கள் வராங்களோ, அவங்களை கொல்லறுதுக்காக கடவுள் அவ்தாரம் எடுப்பாராம்.”
“எடுத்து என்ன பண்ணூவார் தாத்தா?”
“அவதாரம் எடுத்து அசுரர்களைக் கொன்னு மக்களைக் காப்பாத்துவார்”.
“ஆமாண்டா, அது மாதிரி இந்த அவதாரம் கிருஷ்ணாவதாராம்ன்னு பேரு”
“இவர் என்ன பண்ணார் தாத்தா, யாரைக் கொல்ல இவர் பிறந்தார் தாத்தா?”
”ஆமாம், இவர் ஒருத்தரைக் கொல்லத்தான் பிறந்தார், அந்தக் கதையைத் தான் உனக்குச் சொல்லப் போறேன்”.
"இந்தியாவின் வடக்குப் பகுதியில், மதுராங்கற ஊர்ல உக்கிரசேனன்னு ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு கம்சன்ன்னு ஒரு பையன். தேவகின்னு ஒரு பொண்ணு. உக்கிரசேன ராஜா தன் பொண் தேவகிக்கு பக்கத்து ஊர்ல உள்ள வசுதேவன் அப்படிங்கிறவருக்கு கலயாணம் பண்ணி வைக்கிறான். மாப்பிள்ளையையும் பொண்ணையும் சாரட் வண்டிலெ ஏத்தி அவங்க ஊருக்குக் கொண்டு போய் உட்டுட்டு வாங்கறான் ராஜா.
கம்சன் கோபக்காரன். எல்லாரையும் கஷ்டப்படுத்துறவன். அவன் அப்பா சொன்னாக்கூட கேட்கமாட்டான்னா பாத்துக்கோ.”
“ஏன் தாத்தா, அப்பா சொன்னா கேட்கமாட்டேங்கறான். தப்புத் தானே?”
“அதனாலே தான் அவ்னை நாம அசுரன்னு சொல்றொம்.”
“நீ அப்பா, அம்மா சொன்னா கேட்பியா?”
“ஆமாம் தாத்தா, நான் அப்பா, அம்மா சொன்னா கேட்பேன்”.
“கதையைச் சொல்லு தாத்தா”.
”சாரட்டுலே போய்ண்டு இருக்கும் பொது வானத்திலேர்ந்து ஒரு குரல்,
’கம்சா, இவங்களுக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும்”
அப்ப்டின்னு சொல்லுது.  இதைக் கேட்ட கம்சனுக்கு கோபம் அதிகமாகி,
தேவகியை கொன்னு போட்டுடலாம்ன்னு வரான். அப்ப
வசுதேவர் ”இவஙளுக்குப் பிறக்கப் போற குழந்தை தானே உன்னக் கொல்லப் போறது, அதனாலெ எப்பல்லாம் குழந்தை பொறக்கறதோ அப்பல்லாம் குழந்தையைக் உன்னிடம் கொண்டு வந்து கொடுக்கிறேன், அதனாலே தேவகியை  ஒண்ணும் செய்யாதே”, அப்படின்னு கெஞசறான்.
பாத்தான் கஞசன், “வசுதேவன் சொல்றதும் சரி”தான்னு நினைச்சு
அவங்க ரெண்டு பேரையும் யார் சொன்னாலும் கேட்காம, அப்பாவையும் ஜெயில்ல அடைச்சுறான்.
“அப்பறம் என்னாறது தாத்தா?”
“ஒவ்வொரு குழந்தையா பொறக்கறது.வசுதேவர் கம்சனிடம் கொழந்தையைக் கொடுத்தவுடன் கொன்னுடறான்.இது மாதிரி ஆறு குழந்தையைக் கொன்னுடறான். தேவகி ஏழாவது குழந்தை உருவாகும் போது பகவான் விஷ்ணு அந்தக் குழந்தையை வசுதேவரின் இரண்டாவது மனைவிக்கு மாற்றிவிடுகிறார். அவ்ருக்குப் பிறக்கும் குழந்தை தான் பலராமர். கம்சனிடம் ஏழாவது குழந்தை குறைப்பிரவசமாக முடிந்துவிட்டது என்று சொல்லிவிடுகிறார்கள்.
எட்டாவது குழந்தை தான் கிருஷ்ணர்.
கிருஷ்ணர் பிறக்கும் போது அடாது மழை. ஜெயிலுக்குப் பக்கத்தில் உள்ள
யமுனை ஆற்றில் வெள்ளம்.”
”குழந்தை பிறந்தவுடன் அப்பா, அம்மாவிடம் பேசினார்ன்னா பாரு”
”என்ன தாத்தா சொல்றே, குழந்தை பிறந்தவுடன் பேசுமா?”
“அவர் கடவுள் அவதாரம் இல்லையா, அதனால் பேசினார்”
“என்ன பேசினார் தாத்தா?”
”என்னைக் கொண்டு போய் யசோதாவின் அருகில் விட்டுவிடுங்கள். அங்கிருக்கும் பெண் குழந்தையை இங்கு கொண்டு வாருங்கள்”, அப்ப்படின்னு கிருஷ்ணன் வசுதேவரிடம் சொன்னார்.

”அதே பொலவே வசுதேவரும் குழந்தையை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு  யமுனையை கடந்து சென்றார். அஞ்சு தலை பாம்பு ஆதிசேஷன் குடையா பிடிச்சுக்கிறார். யமுனை அவருக்கும் குழந்தைக்கும் வழி விடுகிறது. பின்னர் யசோதையின் பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து தேவகி அருகில்
விட்டு விடுகிறார்.”

”அப்புறம் என்ன ஆகிறது தாத்தா?”
”கம்சன் வந்து அந்தப் பெண் குழந்தையை கொல்லத் தயாராகிறான். அந்தச் சமயம் அவன் கையில் இருந்து விலகி, “உன்னை கொல்ல வந்த குழந்தை நான் அல்ல, அவன் வேறே எடத்துலே இருக்கான்னு”, சொல்லிட்டு மறைந்து விடுகிறது.”
”அப்புறம் என்ன நடக்குது தாத்தா?”
”அதுக்கப்பறம் நிறைய இருக்கு, அதெ இன்னொரு நாள் சொல்றேன். ஆனா அதுக்கு முன்னாலெ இந்தக் கதையை, ஒரு பாசுரமாக, ஆண்டாள் என்கிற பெண் குழந்தை தன் ’திருப்பாவை’ங்கிற முப்பது பாசுரங்களில் ஒரு பாசுரத்தில் எழுதி இருக்கிறார்.
“என்னது, பாட்டு எழுதி இருக்காங்களா தாத்தா? அது என்னது படிங்க தத்தா.”
அந்தப் பாசுரம் இது தான்.

   ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
                                             ஒருத்தி மகனா யொளித்து வளர
                                                          தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைத்த,
                                              கருத்தைப் பிழைப்பித்துக் கஞசன் வயிற்றில்,
                                                         நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை
                                              அருந்தித்து வந்தோம் பரைதருதி யாகில்,
                                                        திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,

                                              வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

”வயதான பிறகு இதுக்கு அர்த்தம் தெரிஞ்சுப்ப, என்ன நான் சொலறது
புரியுதா?’
”அப்புறம் என்ன ஆச்சு தாத்தா கிருஷ்ணனுக்கு?”
“நீ இனிமே ஐபோனை வச்சு விளையாடாம இருக்கியா சொல்லு”.
“மாட்டேன் தாத்தா, இது மாதிரி கதை சொன்னா ஐபோனை எடுக்க மாட்டேன் தாத்தா”.
“வெரி குட், கிருஷ்ண்னின் கதையை அப்புறம் சொல்றேன்”
இந்தக் கதையை வீடியோ வடிவில் கீழே கொடுத்துள்ள லின்கை கிளிக்
செய்வதன் மூலம் கிருஷ்ணன் பிறப்பை பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=FhRPrbr6Y9M#!

வெள்ளி, ஏப்ரல் 19

ஆய கலைகள் அறுபத்து ஐந்து?

ஆய கலைகள் அறுபத்து ஐந்து?
இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து?
அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்?
அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா?
அப்படின்னு கேட்கிறீர்களா?
அதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான கலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம் சொல்லுகிறது.
கலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்!!!
இத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.
தன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள் எடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பழமொழி உண்டு "களவும் கற்று மற" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க வேணுமாம்..
இதுலே ஒண்ணு பார்த்திங்களா? பட்டியலை இன்னொருதடவை படிங்க!!
உலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க? அத அறுபத்து அஞ்சாவது கலையா சேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்!!!!
அது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க!
வாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,
"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா?" 'அதாண்டா எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது எது?"
ஒரு பையன் சொல்றான், "ஆகாயம் சார்".
இன்னொருத்தன் சொல்றான், "கடவுள் சார்". மற்றவன் "தண்ணிர்". அப்படிங்கறான். மற்றவன் "காற்று"
இப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.
"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது எது தெரியுமா?"
"எது சார்"
"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்." அப்படின்னாரே பாக்கணும்.
பசங்கள்ளாம் ஆடிப் போயிட்டாங்க!
என்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக்கக்கூடாது, உலக
நடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.
பாருங்க, எங்க இல்ல லஞ்சம்?
ஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.
மின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால் தான் உங்க வீட்டுலே மின்சாரத்தை "வரபோது" கண்ணுலே காண்பிப்பாங்க!!
இப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்
நம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும் அப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.
என்ன காரியம் ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப் பொறுத்து  லஞ்சம் மதிப்பு மாறும். இது  மட்டுமா
அது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது?  அவரே நேரே வாங்குவாரா?
வேறே யாருக்கிட்டேயும் கொடுக்கணுமா?
சரியான கேள்வி கேட்டிங்க?
இது  தெரியாமத்தான் நான் முழிச்சேன்!!!
என்னது?
லஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா?
ஆமாங்க!! வெளிலே சொன்னா வெட்கம்!
இப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு பேசிகிட்டாங்க பாருங்க.
இதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு  பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்
நீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது. 
அந்தக் கதையே முதல்ல கேளுங்க 
எங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா உங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ?
எங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல்  காலத்தை ஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச் சொல்லணும்!!
நாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,
வாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்
தொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.
சரி, வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.
முறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு பிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.
இங்க ஆரம்பிச்சது சனி!!!
"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன்? என்ன சார் விஷயம்?" ஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான் அந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார்.
யாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் குமைந்து கொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.
"அதை ஏன் கேட்கிறீங்க? இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு  பண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம்  சொல்லி, "ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்",
அப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..அதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட  புலம்பினேங்க, தப்பா நினைக்காதிங்க."
"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இருக்குங்க, விஷயம் தெரியாம இருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு  செலவு பண்ணி இருக்கவேண்டாமே?", நாயர்.
"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்?" 
இதுதான் முக்கியமான இடம்!!  
முன்னால சொன்னேனே, "டீக்கடை நாயர்" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான் இங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம் கைமாற பல வழிகள்!!!
"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்," ன்னு  சொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே திரும்பி வந்து
"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்" என்றாரே பாக்கணும்.ஆய கலைகள் அறுபத்து ஐந்து?
இதென்ன ஆயகலைகள் அறுபத்து ஐந்து?
அறுபத்து நான்கு தானே கேள்விபட்டுருக்கோம்?
அதென்ன அறுபத்து ஐந்தாவது கலைன்னு சந்தேகம் வருதா?
அப்படின்னு கேட்கிறீர்களா?
அதாங்க, நடனம்ஆடுவது, பாட்டுப் பாடுவது, ஓவியம வரைவது இப்படி 64 விதமான
கலைகள் ஒருவனுக்குத் தெரிந்து இருந்தால் அவன் மிகப் பெரிய அறிவாளியாம். இந்துமதம்
சொல்லுகிறது. கலைகள் பட்டியலைப் பாருங்கள். வாவ்!!!
இத்தனையும் ஒருவன் தெரிந்து கொள்ள எவ்வளவு நாட்கள் ஆகும் பாருங்கள்.
தன் வாழ்நாளைப் பூரா இதுக்கே செலவழிக்க வேணும், இல்லையில்லை பல ஜென்மங்கள்
எடுத்து இதையே வேலையாகக் கொண்டிருந்தால் தான் இத்தனையும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு பழமொழி உண்டு "களவும் கற்று மற" அதாவது திருடக் கூடத் தெரிந்து இருக்க
வேணுமாம்..
இதுலே ஒண்ணு பார்த்திங்களா? பட்டியலை இன்னொருதடவை படிங்க!!
உலகத்துல முக்கியமான ஒண்ண விட்டுடாங்க? அத அறுபத்து அஞ்சாவது கலையா
சேர்த்து இருக்கணும், இல்லையில்லை, அதை முதல் கலையா வச்சு இருக்கணும்!!!!
அது தெரியலைன்னா வேறு எது தெரிஞ்சும் உபயோகம் இல்லைங்க!
வாத்தியார் பையனைப் பார்த்து கேட்கிறார்,
"உலகத்திலே நீக்கமற நிறைஞ்சு இருக்கறது எதுடா?" 'அதாண்டா எல்லா இடங்களிலும்
பரவி இருக்கிறது எது?"
ஒரு பையன் சொல்றான், "ஆகாயம் சார்".
இன்னொருத்தன் சொல்றான், "கடவுள் சார்". மற்றவன் "தண்ணிர்". அப்படிங்கறான். மற்றவன் "காற்று"
இப்படி ஆளாளுக்கு அவங்களுக்குத் தெரிந்ததைக் சொன்னாங்க.
"முட்டாப் பசங்களா, இதெல்லாம் அந்தக்காலத்துக்குப் பொருந்தும், எப்பவும் பொருந்தறுது
எது தெரியுமா?"
"எது சார்"
"உலகத்துல நீக்கமற நிறைஞ்சு இருக்கறது லஞ்சம்." அப்படின்னாரே பாக்கணும்.
பசங்கள்ளாம் ஆடிப் போயிட்டாங்க!
என்ன வாத்தியார், இப்படி சொல்லித் தராறேன்னு பாக்கக்கூடாது, உலக
நடைமுறையை சரியா கண்டுபிடித்து விட்டார், வாத்தியார்.
பாருங்க, எங்க இல்ல லஞ்சம்?
ஆசுபத்திரிக்குப் போங்க, பியுனுக்கு ஏதாவது வெட்டினாத்தான் டாக்டரைப் பார்க்க சீட்டு கொடுப்பான்.
மின்சார ஆபீசுக்குப் போங்க, கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கொடுத்தால்
தான் உங்க வீட்டுலே மின்சாரத்தை "வரபோது" கண்ணுலே காண்பிப்பாங்க!!
இப்படி எங்க போனாலும் அவங்களுக்கு சேரவேண்டியது சரியாப் போனால் தான்
நம்ம காரியம் கை கூடும். லஞ்சம் எவ்வளவு கொடுக்கணும், எப்படிக் கொடுக்கணும்
அப்படிங்கறது எல்லாம் ஒரு கலை.
என்ன காரியம் ஆகணும், அதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அப்படிங்கறதைப்
பொறுத்து  லஞ்சம் மதிப்பு மாறும். இது  மட்டுமா
அது சரி, எப்படி இவர் வாங்குவாங்கன்னு தெரிஞ்சுக்கறது?  அவரே நேரே வாங்குவாரா?
வேறே யாருக்கிட்டேயும் கொடுக்கணுமா?
சரியான கேள்வி கேட்டிங்க?
இது  தெரியாமத்தான் நான் முழிச்சேன்!!!
என்னது?
லஞ்சம் கொடுக்கக் கூட தெரியாதா?
ஆமாங்க!! வெளிலே சொன்னா வெட்கம்!
இப்பக் கூட இத்தாலி நாட்டுலே வாங்கின ஹெலிகாப்டருக்கு யாரோ லஞ்சம் வாங்கிட்டாங்கன்னு
பேசிகிட்டாங்க பாருங்க.
இதுக்குன்னு பல ஆட்கள் இருப்பாங்கன்னு  பின்னால தான் தெரிஞ்சுகிட்டேன்
நீ கொடுத்த அனுபவம் இருக்கான்னு கேட்கிறது காதுல விழறது. 
அந்தக் கதையே முதல்ல கேளுங்க 
எங்கப் பெரிய குடும்பத்திலே (எனக்கு நாலு தம்பிகள், நாலு தங்கைகள்). எப்படி அய்யா
உங்க அப்பா ஜீவனம் பண்ணார்ன்னு கேட்கத் தோணுதோ?
எங்கும் கடன் வாங்காமல், தேவைக்கு அதிகமா எதையும் வாங்காமல்  காலத்தை
ஒட்டி எல்லோரையும், படிக்க வைத்த, எங்க அப்பாவுக்கு நாங்க நன்றியைச்
சொல்லணும்!!
நாங்கல்லாம் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருந்த காலம். எங்க அப்பா,
வாங்க வேணாம் சொல்லியும் கேட்காமல், அரசாங்கம் கடன் தரான்னு, நண்பர்கள்
தொந்தரவு பொறுக்காம அரசு கூட்டுறவு சங்கத்தில் (housing board)ஒரு இடத்தை வாங்கி போட்டேன்.
சரி வீட்டைக் கட்டலாம்ன்னு அரசிடம் கடனுக்கு விண்ணப்பித்தேன்.
முறையா முனிசிபாலிட்டி மற்றும் ஹவுசிங் போர்ட், ரெண்டு இடத்திலிருந்தும் வீட்டு
பிளான் அப்ருவ் வாங்க விண்ணப்பித்தேன்.
இங்க ஆரம்பிச்சது சனி!!!
"என்னங்க, உங்களை அடிக்கடி நம்ம டீக்கடையில் பாக்கிறேன்? என்ன சார் விஷயம்?"
ஹவுசிங் போர்ட் ஆபிஸின் அருகாமையில் உள்ள டீக்கடை முதலாளி தான், நான்
அந்தக் கையில் அடிகடி டீ சாப்பிட வருவதைப் பார்த்து, மேலே சொன்ன கேள்வியை
என்னைப் பார்த்துக் கேட்டார்.
யாரிடமாவது என் பிரச்சனையை சொல்ல மாட்டோமா என உள்ளுக்குள் குமைந்து
கொண்டு இருக்கும் போது ஆபத்பாந்தவராக டீக்கடை நாயர் எனக்குத் தெரிந்தார்.
"அதை ஏன் கேட்கிறீங்க? இதுவரை பலதடவை எங்க ஊர்லேந்து பஸ் சார்ஜ் செலவு
பண்ணி வந்துட்டேன், ஒவ்வோரு தடவையும் அந்த குமாஸ்தா ஏதாவது காரணம்
சொல்லி, "ரெண்டு நாள் கழித்து வாங்க, பாப்போம்",
அப்படின்னு சொல்லி என்னை அலக்கழிக்கிறார். என்ன பண்ணறதுன்னு தெரியலே..
அதான் டீ சாப்பிட்டு கிளம்பலாம்ன்னு இருக்கேன். நீங்க கேட்டதால உங்க கிட்ட
புலம்பினேங்க, தப்பா நினைக்காதிங்க."
"அட நீங்க வேறே, உங்களைப் பாத்தா பரிதாமா இருக்குங்க, விஷயம் தெரியாம
இருக்கீங்களே, முன்னாலேயே சொல்லி இருந்திங்கன்னா பஸ்சுக்கு இவ்வளவு  செலவு
பண்ணி இருக்கவேண்டாமே?", நாயர்.
"என்ன சொல்றிங்க, நீங்க என்ன செய்ய முடியும்?" 
இதுதான் முக்கியமான இடம்!!  
முன்னால சொன்னேனே, "டீக்கடை நாயர்" தான் நமக்கு முக்கியமானவர். அவர் தான்
இங்க தரகரா வேலை செய்கிறார்ன்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியாது. இப்படி லஞ்சப்பணம்
கைமாற பல வழிகள்!!!
"கொடுங்க 50 ரூபாயை, கொஞ்ச நேரம் இருங்க, கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள்," ன்னு
சொல்லிட்டு என்னிடம் விவரங்களை வாங்கிக் கொண்டு ஆபீசுக்குள் போனார். போன வேகத்திலேயே
திரும்பி வந்து
"இந்தாங்க, நீங்க கேட்ட வீடு கட்டுவதற்கான ஒப்புதல் கடிதம்" என்றாரே பாக்கணும்.
"எப்படிங்க இதெல்லாம்?"
"அதெல்லாம் எதுக்குங்க, ஊருக்குக் கிளம்புங்க,அடுத்த கட்ட வேலையைப் பாருங்க"
என்று சொல்லிவிட்டு அடுத்தவருக்கு டீ போடப் போய்விட்டார்.
இது தான் என் முதல் லஞ்சம் கொடுத்த அனுபவம்,
அது அப்படின்னா, முனுசிபாலிட்டி அனுபவம் வேறே மாதிரி!! 
"இத பாருங்க சார், ஒரு பிளாட்டுக்கு 330ன்னு நிர்ணயம் செய்து இருக்கோம், இது எனக்கு
மட்டும் இல்ல, இங்க வேலை செய்யற எல்லாருக்கும் பங்கு உண்டு, நீங்க தனித்தனியா
ஒவ்வொருத்தருக்கும் கொடுக்க வேணாம், கொடுத்திங்கன்னா இன்னைக்கு சாயங்காலம்
ஒப்புதல் கடிதத்தை வாங்கின்டு போகலாம், இல்லன்னா நான் ஒருவாரம் லீவு, முனிசிபல்
சேர்மன் அடுத்த வாரம் லீவு, எப்ப உங்களுக்கு கடிதம் கிடைக்குமுன்னு சொல்லமுடியாது,
பாத்துக்குங்க!"
நேரடியா விஷயத்துக்கு விட்டார் .டவுன் ப்ளானிங் ஆபிசர்.
யோசனை செய்தேன், லேட்டாகும் ஒவ்வொரு நாளும் கம்பி, சிமெண்ட், மணல், கொத்தனார்
சம்பளம் இவையெல்லாம் விலை ஏறிக் கொண்டே இருப்பதைப் பார்த்தால் இவர் ஒண்ணும்
அதிகமா கேக்கலைன்னு தோணித்து.
"சரி சார், சாயங்காலம் வந்து வாங்கிக்றேன்" ன்னு சொல்லிட்டு வெற்றி வீரானாக நடையைக்
கட்டினேன். 
இப்படி வாங்கற விதம் பல விதங்கள். ஒரு இடத்தில மேஜை டிராயரை திறந்து வைத்து
இருப்பார்கள்.
அந்த அனுபவம்தான் எனக்கு பின்னால பல விதங்களில் உதவியது. என் காரியங்களை
நடத்திக் கொள்ள லஞ்சம் வாங்குறவங்க. யாரவது இருக்காங்களான்னு தான் பாப்பேன்.
"யாருக்காவது ஏதாவது கொடுக்கணும்ன்னா சொல்லுங்க", அப்படின்னு அவருக்கிட்டேயே பிட்டை
போட்டு ஆரம்பித்து விடுவது தான் என் டெக்னிக்.
நீங்களும் அதையே பாருங்க, பிழைச்சுபீங்க
     

)


.

அறுபத்து நான்கு கலைகள்

1. இசைக்கலை ( இசைக் கருவிகள் மீட்டுதல் )
2. நடனக் கலை ( ஆடற்கலையில  தேர்ச்சி பெற்று நடனமாடுதல் )
3. ஒவியக்கலை ( தூரிகையால் வண்ணங்களைப  பயன்படுத்த சித்திரங்கள் வரைதல் )
4.அலங்காரக் கலை ( நெற்றியில் அழகழகான திலகங்களை வைத்து அலங்காரம்
செய்து கொள்ளுதல் )
5.தரை அலங்காரக் கலை ( நானாவித் கோலப் பொடிகளாலும  மலர்களாலும 
தரையை அலங்காரம் செய்தல் )
6.அறைகளை அலங்கரிக்கு கலை ( வண்ணங்கள், பூக்களால் அறைகளையும்
சுவர்களையும் அலங்காரம் செய்தல் )
7.ஒப்பனைக் கலை ( உடல், உதடுகள், பற்கள், நகங்கள், உடைகள் போன்றவற்றை
அழகு மிகச் செய்தல் )
8.வண்ணக் கற்கள் கலை ( வண்ணக் கற்கள், நவரத்தினங்கள் போன்றவற்றை
 வைத்து அலங்காரம் செய்தல் )
9.படுக்கை அலங்காரம் கலை ( அவசியம், காலம், காரணத்திற் கேற்ற வகையில்
படுக்கைகளை அலங்காரம் செய்தல் )
10.ஜலதரங்கக் கலை ( சிறு சிறு கிண்ணங்களில் நீர் நிரப்பி, குச்சிகளால 
அவற்றைத் தட்டி இசை எழுப்புதல் )
11.நீச்சற் கலை ( நீரில் மீன்போல் நீந்துவதுடன் மற்ற நீர் விளையாட்டு
களளையும் அறிந்து கொள்ளுதல் )
12.மந்திர, தந்திரக் கலை ( மந்திர, தந்திரங்கள ஒரளவு கற்றுத் தேவைப்படும
 போது அவற்றைப் பயன்படுத்துதல் )
13.மலர்க் கலை ( பலவகையான மலர்களைக் கொண்டு மலர் அலங்காரங்களைத்
தயாரித்தல் )
14.மலர் அலங்காரக் கலை ( பல வகையான மலர்களால் மலர்க்கிரீடம்,
மலர்ச்செண்டு போன்றவற்தை தயாரித்தல் )
15.உடை அலங்காரக் கலை ( உடை அலங்காரத்த அறிந்து தேவைப்படும
 வகையில் நேர்த்தியாக உடைகளை அணிந்து கொள்ளுதல் )
16.செவி அலங்காரக் கலை ( செவிகளை அலங்காரம் செய்யும் ஆபரணங்களை
உருவாக்குவதை அறிந்து வைத்திருத் தல் )
17.வாசனாதி திரவியக் கலை ( வாசனைப் பொருள்களை, வாசனாதி திரவியங்கள
  தயாரிக்கக் கற்றிருத்தல் )
18.ஆபரண அலங்காரக் கலை ( நகைகள், நவரத்தினங்கள், அலங்காரப் பொருள்களை
அழகாக அணிந்து கொள்ளுதல் )
19.மாயாஜாலக் கலை ( சில மாயாஜால வித்தைகளை கற்று வைத்திருத்தல் )
20.உணர்ச்சி தூண்டல் கலை ( உடலுறவிற்கான உணர்வைத் தூண்டக்கூடிய
  வழிகளைக் கற்றிருத்தல் )
21.கரக் கலை ( கைகள், கைவிரல்களால் பலவித நளிவு சுழிவுகளைசச் செய்து
உணர்வைத் தூண்டுதல் )
22.சமையற் கலை ( சமையற்கலையி நல்ல தேர்ச்சி பெற்று விளங்குதல் )
23.பானத் தயாரிப்புக் கலை ( பல வகையான பானங்கள், சோம பானம்
 போன்றவற்றைத் தயாரிக்கக் கற்றிருத்தல் )
24.தையற்கலை ( தையற்கலை, ஆடை பின்னுதல் போன்றவற்றில் தேர்ச்சி
 பெற்றிருத்தல் )
25.பூத் தையற்கலை ( நு}ல் இழைகளால் ஒலிகளை வாயினால் எழுப்பக்
கற்றிருத்தல் )
26.பாவனைக் கலை ( இசைக் கருவிகளின் ஒலிகளை வாயினால் எழுப்பக்
கற்றிருத்தல் )
27.புதிர்க் கலை ( புதிர்களை, வேடிக்கை கணக்குகள், வினோதப் பேச்சுகளை
 அறிந்து வைத்திருத் தல் )
28.கவிதைப் போட்டிக் கலை ( கவிதை மூலமாகப் கேட்கப்படும் கேள்விகளுக
 கவிதை மூலமாகப் பதில் சொல்லும் திறன் )
29.சொற் கலை ( பல்வேறு பொருள்களைக் கொண்ட சொற்களை அறிந்து
 வைத்திருத்தல் )
30.வாசிப்புக கலை ( இலக்கியம், இதிகாசம், பு[ராணங்களை இசை, பாவங்களுடன
  படிக்கக் கற்றிருத்தல் )
31.வரலாற்றுப பயிற்சிக் கலை ( சரித்திர, புராண, வரலாற்று நிகழ்ச்சிக ளை
அறிந்து வைத்திருத்தல் )
32.கவிதை படைக்கம் கலை ( இடையில் விடுபட்ட சொற்களை இணைத்துக்
கவிதையை முழுமையாக்கத் தெரிந்து வைத்திருத்தல் )
33.பிரம்புக் கலை ( பிரம்பு, சட்டம், மரம் போன்றவற்றால் பொருள்களைத
  தயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )
34.பாத்திர அலங்காரக் கலை ( தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உருவங்கள்,
மலர்க்களை வரையக் கற்றிருத்தல் )
35.தச்சுக் கலை (மரத்தினால சாமன்களைத் தயாரிக்கக் கற்று வைத்திருத்தல் )
36.களிமண் கலை ( களிமண், பஞ்சு போன்றவற்றால் உருவங்களை உருவாக்கக்
கற்றிருத்தல் )
37.போர்ப் பயிற்சிக் கலை ( ஆயுதங்களை பற்றியும் போர்த்திறன பற்றி தெரிந்து
 வைத்துகொள்ளுதல் )
38.புகழ்ச்சிக் கலை ( மற்றவர்களின் திறனுக்கேறப அவர்களைப் புகழ்வதற்கு
 தெரிந்து வைத்திருத்தல் )
39.குழந்தை விளையாட்டுக் கலை ( குழந்தைகளை மகிழ்விக்கவும் விளையாட்டு
களைப் பற்றி அறிந்து வைத்திருத்தல்; )
40.சதுரங்க விளையாட்டுக் கலை ( சதுரங்கம், தாயக்கட்டம் போன்றவற்றை
விளையாடுவதற்கு தெரிந்து வைத்துகொள்ளுதல் )
41.உடற்பயிற்சி கலை ( பல வகையான உடற்பயிற்சி செய்வதற்கு கற்று
 வைத்திருத்தல் )
42.சூதாட்டக் கலை ( பல வகையான சூதாட்டங்களை விளையாட கற்றுவைத்திருத்தல் )
43.தோற்ற மாற்றம் கலை ( மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத
 வகையில், உருவத்தை மாற்றி அமைத்துகொள்ளும் முறைகளை அறிந்து
வைத்திருத்தல் )
44.வீடு கட்டும் கலை ( சிறிய வீடுகள், பெரிய வீடுகள் போன்றவற்றைக் கட்டும்
முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
45.நாணயப் பரிசோதனைக் கலை ( தங்கம், வெள்ளி நாணயங்களையும்,
 நவரத்தின ஆபரணங்களையும் பரிசோதித்துப் பார்த்து அவற்றின் தரத்தை
மதிப்பிடும  முறை அறிந்திருத்தல் )
46.இரசாயணக் கலை ( இரசாயணப் பொருள் மற்றும் உலோகப் பொருள் தெரிந்து
 வைத்திருத்தல் )
47.பளிங்குக் கலை ( பளிங்கு போன்றவற்ற பொருள்களை உருவாக்கும்
 முறைகளைக் கற்று வைத்திருத்தல் )
48.தோட்டக் கலை ( தோட்டத்தில் பல வகையான் செடி, கொடிகளை வளர்க்கக்
கற்றிருத்தல் )
49.பிராணிச் சண்டைக் கலை ( ஆடு, சேவல் போன்றவற்றைச் சண்டையிடப் பயிற்சி
 கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
50.பறவைப் பயிற்சிக் கலை ( கிளிகள், மைனாக்களுக்குப் பேசக் கற்றுக்
கொடுக்கம் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
51.உடற் புத்துணர்வுக் கலை ( உடலைத் தேய்த்து அமுக்கி, பிடித்துப்
புத்துணர்ச்சி ஏற்படுத்தக் கற்று வைத்திருத்தல் )
52.மொழி பெயர்ப்புக் கலை ( வேற்று மொழிகளில் எழுதப்பட்டிருப்பவற்றை
 மொழி பெயர்க்க அறிந்து வைத்திருத்தல் )
53.குறியீட்ட  மொழிக் கலை ( குறிப்பேடு களிலுள்ள குறியீடுகளுக்கு
அர்த்தம் சொல்லத் தெரிந்து வைத்திருத்தல் )
54.புதுத்தோற்றம் ஏற்படுத்தும் கலை ( பருத்தித் துணியைப் பட்டு போல்
 தோற்றமளிக்கும் வகையிலும், தரம் குறைந்த பொருள்களை உயர்ரகப்
 பொருள்கள் போல் தோற்றமளிக்கும் வகையிலும் மாற்றுவதற்கு அறிந்து
 வைத்திருத்தல் )
55.குணாதிசயங்களை அறியும் கலை ( ஒருவரின் தோற்றத்தைக் கொண்டு
 அவருடைய குணாதிசயங்களை அறியத் தெரிந்து வைத்திருத்தல் )
56.அகராதிக் கலை ( அகராதிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருத்தல் )
57.பிற மொழிக் கவிதைப் பயிற்சிக் கலை ( பிற மொழிகளிலும் கவிதை புனைய
அறிந்து வைத்திருத்தல் )
58.மனப்பாடக் கலை ( கவிதைப், பாடல்கள், இதிகாசப் பாடல்கள், கிராமியப் பாடல்கள்
 போன்றவற்றின் முதல் அடியைக் கேட்டதுமே அப்பாடல் முழுவதையும்
ஒப்புவிக்கும் திறனைப் பெற்றிருத்தல் )
59.நினைவாற்றல் பயிற்சிக் கலை ( நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ளும்
 முறை )
60.உபகரணத் தயாரிப்புக் கலை ( இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை
இயக்கக் கூடிய உபகரண்களைத் தயாரிக்கும் முறைகளை அறிந்து வைத்திருத்தல் )
61.சகுனக் கலை ( வெளியே புறப்படும் போது தெரியும் சகுனங்களைப் பற்றியும்,
பழக்க வழக்கங்கள் , சடங்குகள் போன்றவற்றை ப் பற்றியும் அறிந்து வைத்திருத்தல் )
62.மலர் வண்டிக்கலை ( மலர்களாலேயே சக்கர வண்டிகள், இரதங்கள் போன்றவற்றை அழகாகத் தயாரிக்கும்
முறைகளை அறிந்து வைத்திருத் தல் )
63. கட்கத்தம்பம்
64.வேற்று மொழிக் கலை ( பல நாட்டு மொழிகளையும் பழக்க வழக்கங்களை
 யும் தெரிந்து வைத்திருத்தல் )

புதன், மார்ச் 27

நடையா இத்ய் நடையா1


அரஙகநாதர் கர்ப்பகிருஹத்தில் இருந்து வெளியே வரும்போது
நடப்பார் பாருங்கள் அது நடை!
சிம்ம கதி, கஜ கதின்னு பல வகையிலே அவர் நடப்பதை இன்னைக்குப் பூரா பூரா பார்த்துக் கொண்டே இருக்கலாம்!
அரசியல்வாதிகளைப் பாருங்க, ஏதாவது காரணத்துக் நடைப் பயணம் ன்னு கிளம்பிடுவாங்க!
ஃபேமஸ்ஸான்ன நடைன்னா, காந்தியடிகள் உப்பு சத்தியாகிரஹத்தின் போது நடந்த்தைச் சொல்லலாம்.
உலக அழகிகள் மேடையிலே நடப்பதை பூனை நடைன்னு(cat walk)ன்னு சொல்வாஙக இல்லையா?
சிவாஜி சார் ஒரு படத்திலெ, ”நடையா இது நடையா, ஒரு நாடக மன்றம் நடக்குது” ன்னு ஹீரோயினைப் பார்த்து பாடுவார் பாருங்கள். அந்தப் பாட்டு அந்தக் காலத்தில் ஃபேமஸ்.
ஒரு ஜோக் உண்டு, “டாக்டர் சார், நீங்க சொன்ன மாதிரி வீட்டிலிருந்து
10 மைல் நடந்து வந்துட்டேன் டாக்டர், இப்ப திரும்பிடலாமா”, அப்படின்னு ஒரு நாள் நடந்ததைப் பெருமையா பேசரவங்கள்ளாம் இங்க உண்டு.
”அப்படி என்ன சார் விசேஷம் நடையிலே”, அப்படின்னு நீங்க கேட்கிறது
காதுலே விழறது.
இல்லையா பின்ன, நடக்கிறதுலே அவ்வளவு இருக்குங்க!
மனிதாகள் நடக்கப் பிறந்தவங்க சார்.
30 நிமிஷம் நடங்க தினமும், சக்கரை வியாதி வரதை 50 மடங்கு குறைத்து
விடுமாம்!
60 வயதுக்கு மேல் உள்ளவங்களுக்குசக்கரை வியாதி வரதை 70% குறைத்து விடுமாம்.
100000 மைல் நீளமுள்ள ரத்த நாளங்கள், நடப்பதால் புத்துணர்வு பெறுதாம்.
பெண்கள் நடப்பதால் அவர்களுக்கு மார்பகப் ப்ற்று நோய் வருவதை 20%
சதவீதம்  குறைக்க முடியுமாம்.
அது மட்டுமா,ஏற்கனவே புற்று நோய் உள்ளவர்கள் நடப்பதால் அவர்களின் புற்று நோய் குறைவது மட்டுமல்லாமல் , அவ்ர்களின் வாழ்நாள் 50%


சதவீதம் கூடுதாங்க!
நடப்பது வியாதி வருவதைக் குறைக்கிறது, வியாதி இருந்தால் அதனை
மிக வேகமாக நீக்குகிறது. ரத்தவோட்டம் அதிகரிக்கிறது, heart attack
வருவதைக் தடுக்கிறது.
எலும்புகள் வளர்வதை அதிகரிக்கிறது.
அதுசரி, எத்தனை தூரம் நடப்பது?
ஒண்ணுமில்ல, தினமும் அரை மணி நேரம் நடங்க போறும்!
அப்புறம் பாருங்க உங்க உடம்பை, நாம் நாமான்னு சந்தேகப் படுவோம்!
“எஙக சார் ஆளக் கானோம், ஒ, நடக்கப் கிளம்பிட்டீங்களா?”
”வாழ்த்துக்கள்”, ‘அடுத்த தடவை வியாதி இல்லாத மனுஷனா உங்களைப்
பார்ப்போம்’.

ஞாயிறு, மார்ச் 10

இன்னம்பூர் நினைவுகள்

பச்சைப் பசேல் என்று, பச்சைக் கம்பளம் விரித்தாற்ப் போல்
எஙகு பார்த்தாலும் வயல் வெளிகள். கீச்கீச் என்று குருவிகள் தங்கள்
கூட்டிலிருந்து வெளியே வரும் குரலோசை.
சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்த சோலை. எப்போது இந்த ஊரைப்
பார்ப்போம் என்று இளஞ்சூரியன் தன் பொன்னிற கிரணங்களை இந்த
ஊரை நோக்கி பாய்ச்ச்த் தயாராக இருக்கிறான். அந்தப் பொன்னிற காலை வேளை. அக்கிரஹாரத்து இளஞ்சிட்டுக்கள் தங்கள் வீட்டு வாசலைத் தெளித்து மாக்கோலம் போட்டுக் கொண்டு இருக்கும் சம்யம்.
இந்த மாதிரி இந்தக் காலத்திலும் ஒரு ஊர் இருக்கா என்று கேட்காதீர்கள்,
சாதாரண ஊர் அல்ல அது, 

அறுபத்து நாயன்மார்களில் ஒருவரால் பாடல் பெற்ற ஸ்தலம். அதுமட்டுமா முகமதிய படையெடுப்பின் போது  அரங்கனே திருவரங்கத்தில் இருந்து பல இடங்களுக்கும் சென்று
திருமலையில் தஞ்சம் அடந்த நேரத்தில், அங்கிருந்து கொண்டு
கொண்டு வரப்பட்ட ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை வைத்து கோயில் எழுப்பபட்ட ஊர்தான் அது.
இன்னம்பூர் தான் அந்த ஊர். 



இன்னம்பூர் சிவாலய வரலாறு

சிவாலய குருக்கள்

எழுத்தரிநாதர்

அழுத்தரிநாதர் சன்னிதி

தூரத்தில் எழுத்தரிநாதர்



அம்ம்பிகை சுகந்த குந்தாளாம்பாள்

எழுத்தரிநாதர்





 இது எங்க ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குத் தனி பெருமை உண்டு. கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக் களம் எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள திருபுறம்பியம் ஆகும்.
துர்வாச முனிவர் சாபத்தால் காட்டு யானையாகி அல்லலுற்றது ஐராவதம். ஷண்பக வனம் ஆகிய இன்னம்பூரில் உள்ள தாந்தோன்றி ஈசனை வழிபட்டு சாபம் நீங்கி ஒரு குளத்தை வெட்டியது. அந்த ஐராவதக் குளம் இந்தக் கோயிலுக்கு முன்னால் இப்பவும் உள்ளது.
சூரியன் ஆற்றல் பெறவேண்டி இத்தலத்து ஈசனை வழிபட்டுபேறு
பெற்றான் என்றும் கூறுவர். அவனுக்கு “இனன்” என்றும் பெயர் உண்டு.
இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால், “இனன் நம்பு ஊர்” என்று
பெயர் ஏற்பட்டு “இன்னம்பூர்” என்று மாறிவிட்டது என்றும் சொல்வார்கள்.
அதற்குச் சான்றாக ஒவ்வொறு ஆண்டும் ஆவணி மாதம் 31ம் தேதியும்,
புரட்டாசி மாதம் 1,2 ஆகிய தேதிகளில் மற்றும் பங்குனி 13,14,15
ஆகிய தேதிகளில்சூரிய கிரணங்கள் இந்த பெருமானின் திருவடிகளில் படும்.
அதுமட்டுமா!!!!
அகத்திய முனிவர் இத்தலத்தை அடைந்த போது, இறைவன் அவருக்கு
தமிழிலக்கணம் உபதேசித்து அருளினார். அதலால் தான் இறைவனுக்கு
”எழுத்தறிநாதர்” என்ற பெயருடன் இத்தலத்தில் அருள் பாலிக்கிறார்.
ஒரு சமயம் சுதன்மன் என்ற அந்தணன் இப்பெருமானை பூசித்து,
நிர்வாகத்தையும் பார்த்து வந்தான்.அப்போது ஆண்டு வந்த மன்னன் தன்
நாட்டிலுள்ள கோயில்களின் வரவு செலவு கணக்குகளைக் கொண்டு வருமாறு எல்லா நிர்வாகிகளுக்கும் ஆணயிட்டான். சுதன்மனும் தன் பொறுப்பிலுள்ள இன்னம்பூர் திருகோயிலின் கணக்கினை மன்னன் முன் காட்டினான்.
மன்னனுக்கு சந்தேகம் வர மறுநாள் மீண்டும் வருமாறு பணீத்தான்.
நேர்மையும் சீலமும் உள்ள சுதன்மன் தான் தோன்றி ஈசனை போற்றிப்
பணிந்தான். இறைவனும் அன்பன் இடுக்கண் களைய தானே சுதன்மன்
வடிவிலே சென்று கணக்கினை வழுவின்றி எடுத்துரைத்தான்.மறுநாள் சுதன்மன் கனவில் தோன்றி நிகழ்ந்ததை எடுத்துரைத்தான். சுதன்மனும் இறைவன் திருவருளை வியந்து போற்றினார்.
அப்பர் பெருமானும் இதனை,
               “எழுதுங்கீழ்கணக்கு இன்னம்பர் ஈசனே”
என்று போற்றி பாடினார்.
   ”சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய்
        முடி பத்துடையான்றனைக் கனிய வூன்றிய காரணம்
     என்கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.”
-திருநாவுக்கரசர், தேவாரப்பதிகம்
    இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
         இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
    திருகோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
         தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள் தீருமன்றே!
    என்னிலாரும் எனக்கினி யாரில்லை
         என்னு லும்மினி யானொரு வன்னுளன்
    என்னு ளேஉயிர்ப் பாயொஉறம் போந்துபுக்
         கென்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே.
                                                                                        திருநாவுக்கரசர்
 ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு
நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் நாக்கில்
எழுதுகிறார்கள்.
இப்படி பெயர் பெற்ற ஊரில் இருந்து வந்தவன் நான் என்பதில் பெருமை
உண்டு.
அது மட்டுமா!!!!!
சிவன் கோயிலுக்கு மேற்கே சென்றால் வீரவல்லி வம்சத்தினர்
திருமலையில் இருந்து கொண்டு வந்த ஸ்ரீனிவாசன் விக்கிரஹத்தை
பிரதிஷ்டை செய்து ஒரு பெருமால் கோயில் கட்டி சமீபத்தில்
கும்பாபிஷேகம் விமரிசையாகச் செய்துள்ளார்கள்.
இந்த ஊரில் நானும் இருந்தேன், அதை இப்போது நினைத்தாலும் மனதில்
குதூகலம் வந்து விடும். எப்போது லீவு விடுவார்கள் என்று நாங்கள் காத்துக்கொண்டிருப்போம். நாங்கள் என்று சொன்னது, தம்பிகள், தங்கைகள், எங்கள் சித்தி மற்றும் எல்லோரும் தான்.
இன்னம்பூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு கிளம்பி விடுவோம்.
வீடுன்னா அது வீடய்யா? முன் பக்கத்திலிருந்து கொல்லைக்கட்டு வரை
ஒரு ஃப்ர்லாங்க் இருக்கும். வாசல் திண்ணை, ரேழி, கம்பிகள் கொண்ட
பெரிய முற்றம், சாமான் வைக்கும் அறை, சமையல் கட்டு, இரண்டாம் கட்டில் கிணறு, கிணற்றில் இருந்து சமைல்கட்டு தொட்டிக்கு நீர் செல்ல ஒரு அமைப்பு, பின்னால் நீண்ட தோட்டம், இப்படி இந்த வீட்டில் உள்ளவர்களைத் தேடவே பத்து நிமிஷம் ஆகும்ன்னா பாத்துக்குங்க, எவ்வளவு பெரிய வீடுன்னு?
வீட்டுலெ சமையல் பண்ணுவது ஒருவர் வேலை, பரிமாருவது மற்றோருவர், தரை துடைப்பது மற்றவர், இப்படி ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்பதில் எங்க பாட்டிக்கு நிகர் யாரும் கிடையாது!
பகல் பூரா விளையாட்டு, மாலையில் வீட்டிலேயே நாடகம் போன்று ஏதாவது செய்து பொழுதைப் போக்குவோம். இதுக்கு நடுவிலெ பாட்டியின் வயலுக்குச் சென்று, கரும்புச் சாறு பிழியும் இடத்துக்குச் சென்று சொம்பு நிறைய் இஞ்சி கலந்த சார்றை  போட்டிபோட்டுக்கொண்டு குடிப்பதில் இருக்கும் ஆனந்தம், எழுத்தால் சொல்ல முடியாது. மாலையில் சிவன் கோயிலுக்கு போகும் வழியில் கோணமதகுன்னு ஒண்ணு வரும், அந்த தண்ணிரில் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு குதிப்பதில் உள்ள ஆணந்தம் எத்தனை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது!

இன்னம்பூர் பெருமாள் கோயில் தல வரலாறு

மார்கழி மாதத்தில் பெருமாள் கோயிலில் காலையில் சுடச்சுட பொஙகல்
கொடுப்பார்கள். அப்பு மாமா என்று பெயர் கொண்டவர், எங்களுக்குச்
சொந்தம்தான், எல்லோரையும் ஒரு பாத்திரம் கொண்டு வருணும்ன்னு
கண்டிப்பாக சொல்லிவிடுவார்.  ஆக எல்லார் கையிலும் ஒரு பாத்திரம்
இருக்கும்ன்னா பாத்துக்குங்க!
பஸ் நிக்கும் இடத்தில் ஒரு சாயபு கடை இருக்கும். அதுதான் அந்த ஊருக்கு ’வால் மார்ட்’. பெரிசுன்னு நினைக்காதிங்க், ஒரு சின்ன குடிசையில் கடை இருக்கும். பாட்டி எங்களை வேலை பாக்கச் சொல்லவேணுங்குறதுக்காக எதையாவது வாங்கி வரச் சொல்லுவாங்க.
கடைக்கார முஸ்லிம் எங்களைப் பார்த்து, “என்ன நீங்கள்ளாம் மண்டை
உடைஞ்ச அய்யர் வீட்டுப் பசங்களா?’ ன்னு கேள்வி கேட்டுட்டு சாமனை
கொடுப்பார்.

ஸ்ரீனிவாசப் பெருமாள்
பெருமாள் வீதிஉலா
ஸ்ரீனிவாசப் பெருமாள் மூலவருடன்
நாங்களும், ‘ஆமாம்’ ,ன்னு சொல்லிட்டு வாங்கி வருவோம், ஆனா இன்னிக்கு வரைக்கும் எங்கள் மூதாதையரில் யாருக்கு எப்போது மண்டை உடைந்ததுன்னு எங்கள் யாருக்குமே தெரியாத ’ஸஸ்பென்ஸ்’.
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் ஊர் பெருமையை.
அப்படிப்பட்ட இன்னம்பூரில் ஸ்ரீனிவாசப்பெருமாளுக்கு ஒவ்வொரு
சிரவணத்தின் போதும் ஒவ்வொருவர் மண்டகப்படி நடக்கும். பெருமாள்

அக்கிரஹார வீதியில் உலா வருவார், வீட்டின் முன் நின்று அருள் பாலிப்பார்.
பின்னர் கோயிலின் முன் தீபம் ஏற்றுவார்கள், அர்ச்சனை முடிந்து புளியோதரை சுண்டல் பிரசாதம் வினியோகம் ஆகும்.
இந்த மாதச் ச்ரவணம் பாட்டியின் ஆணைப்படி, என்னோடது. போனேன்,
எல்லாம் நடக்கிறது எப்போதும் போல், ஆனால் அக்கிரஹாரத்தில் தான்
பேர் சொல்ல ஒரு பிராமணரைத் தவிர, வெறிச்சோடி, களையிழந்து
நிற்கிறது அக்கிரஹாரம். யாரைக் குறை கூறுவது, என்னையும் சேர்த்துத்தான்!!!
கேள்விபட்டேன், இன்ன்ம்பூரில் பல அடுக்கு ஃப்ளாட் கட்டப்போகிறார்களாம்! ஒரு நல்ல் ஊர் சிதைக்கபட இருக்கிறது!!!!!!!
எங்கிருக்கு இன்னம்பூர்?
கும்பகோணம்-ஸ்வாமிமலை செல்லும் பாதையில், புளியஞ்சேரியில் இறங்கி ரெண்டு கிலோமீட்டர் நடந்தால் இன்னம்பூர் வந்துவிடும்.
கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் 6ம் நம்பர் பஸ் திருபிறம்பியம் பஸ்ஸில்
இன்னம்பூர் என்று கேட்டு இறங்கிக் கொள்ளலாம்.
சிவனடியார்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய இடம், ஒரு முறை தான்
பார்த்து விட்டு வாருங்களேன்!!!!
இன்னம்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேக காட்சிகளின் வீடியோ லின்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
http://www.youtube.com/watch?v=iD_4
4If5aNc

வெள்ளி, ஜனவரி 11

கணக்கு விளையாட்டு

game show model



ஒரு சின்ன ஜோக்.
(a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன்
”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுதிக் காட்டினானே
பார்க்கணும்.
(a      +     b)n போதுமா சார், இல்லை இப்படி வேணுமா சார்?
(a           +          b)n     போதுமா சார், இல்லை இப்படி வேணுமா சார்?
(a               +          b)n     போதுமா சார்?
எப்படி இருக்கு பையன் புத்திசாலித்தனம்!!!!!
இன்னொரு தடவை, ஆசிரியர் பையனிடம்,
”1+1=2,                 2+2=4 ”,    என்ன சரியா?
”சரி சார்”.
”இப்ப சொல்லு,  4+4  எத்தனை?”
”என்ன சார் நீங்க,   ஈசியான கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிட்டு,
கஷ்டமான் கேள்விக்கு பதிலை எங்க்ளிடம் கேட்கிறீங்க” ன்னு சொன்னானே பார்க்கணும்!!!
இந்த கணக்கையாவது போடுவியான்னு பாருன்னு ஒரு படத்தை கொடுத்து இதுலெ ’x’ , எங்கிருக்குன்னு காமீ-ன்னு சொன்ன உடனே,

”இதோ இருக்கு பாருங்க சார்”
“என்ன கொடுமை சார்.”
இது மாதிரி கணக்கு பற்றிய ஜோக் நிறைய  சொல்லிக்கிட்டே போகலாம்.
ஏன்னா, நிறைய பேருக்கு கணக்குன்னா வேப்பெண்ணை சாப்பிடறது
மாதிரி கசக்கும்.
ஆனா இந்தச் சுட்டிக்கு கணக்கு அல்வா மாதிரி, ஈசியாக உள்ள போயிடும்.
ஆமாங்க, அவங்க  ஸ்ரேயான்னு பேரு. ஐந்தாவது வகுப்புதான் படிக்கிறாங்க.
அவங்க வகுப்புலே அவங்க ஆசிரியர்,
“கணக்குலே ஒரு கேம், அதாங்க  ஒரு விளையாட்டு தயார் பண்ணனும்.
அத கடையிலே போய் எல்லாம் வாங்கக்கூடாது. சொந்தமா மூளையைப்
பயன்படுத்தணும். நாலைந்து பேராவது விளையாடும்படி  இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும் இருக்கணும்”, போன்ற நிபந்தனையெல்லாம் சொல்லி
”யார் தயார்ன்னு”, கேட்டு இருக்காங்க. உடனே ஸ்ரேயா எழுந்து,
“நான் ரெடி பண்றேன், மிஸ்” சொல்லிட்டு அடுத்த ரெண்டு நாட்களுக்குள்ளே தயார் பண்ணிட்டாங்க்ன்னா பாருங்க.
அது சரிதான்யா, அந்த விளையாட்டு என்னன்னு கேட்கிறீங்க, தெரியுது,
அதத் தான் சொல்லப்போறேன்.
விளையாட்டு இதுதான்.
சதுரமான ஒரு போர்டு. அதுலெ சின்னச்சின்னதா
சதுரமான கட்டங்களை வரைந்து கொள்ளணும். முதல் கட்டம் start ன்னு
சொல்லக்கூடிய கட்டம். அடுத்தடுத்த கட்டங்கள்ள, சில இடங்களில்,
pick a card,  move two spaces, roll the dice, move 4 places left,
SIGN +, SIGN -,SIGN%,SIGN Multiplication, போன்றவற்றை
இடது புறத்தில் ஆரம்பித்து வலது புறமாகவும், மேலிருந்து கீழாகவும்
நம்ம வசதிக்கு ஏற்ப இடைவெளி விட்டு வரைந்து கொள்ளணும். (படம்-1)


படம்-1

முன்னதாக, நிறைய அட்டைகளில், பெருக்கல், கூட்டல், கழித்தல் மற்றும் வகுத்தல் போன்றவற்றை பயன்படுத்தி விடையைக் கண்டுபிடிக்கும் விதமாக தயார் செய்து கொள்ளவேண்டும். (படம்-2).

படம்-2,3

SIGN+ மாதிரி கட்டங்களுக்கு அடியில், பதில் சொல்லும்படியான
கஷ்டமான கேள்விகள் எழுதி, அதற்கு என நான்கு அட்டைகளில் பதில் தயார் செய்து கொள்ளவேண்டும். (படம்-3)
எப்படி விளையாடுவது?
சொக்கட்டான் காய்களை பயன்படுத்தி, யார் அதிகமான எண் பெறுகிறாறோ அவர் முதலில் ஆரம்பிக்க வேண்டும்.
STARTல் ஆரம்பித்து, இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாகவும்,
மேலிருந்து கீழாகவும் செல்லும்படி, அவரவர்கள் பெறும் எண்களுக்கு
ஏற்ப, காய்களை நகர்த்த வேண்டும். எந்தக் கட்டத்தில் வருகிறார்களோ
அந்தக் கட்டத்தில் உள்ள நிபந்தனைக்கு பதில் சொல்ல வேண்டும்.
பதில் சரியாக இருந்தால் இரண்டு கட்டங்கள் வலது புறமாக நகர வேண்டும்.
தவறான பதில என்றால், அவர் தன்னுடைய இரண்டு முறைகளை
இழக்கிறார்.
 SIGN+ மாதிரி கட்டங்களுக்கு வரும்போது, அதன் அடியில் உள்ள
கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால், அவருக்கு ஒரு சிறப்பு அட்டை கொடுக்க வேண்டும்.
தவறான பதில் என்றால்  தன்னுடைய இருமுறைகளை இழப்பார்.
யார் முதலில் நான்கு சிறப்பு அட்டைகளை முதலில் பெறுகிறார்களோ
அவர் வென்றவர் ஆகிறார்.
இந்த விளையாட்டில் என்ன சிறப்பு எனில்,
இந்த விளையாட்டை வயது ஏற்ப, படிப்புக்கு ஏற்ப, விளையாடும் நபர்களூக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பது தான்.
மிக சிறப்பான முறையில் விளையாட்டை அமைத்தத்ற்காக, ஸ்ரேயா ஆசிரியரிடம் பாராட்டு பெற்றுள்ளாள்.

Thumbnailநீங்களும் தான் தயார் செய்து ஒருமுறை விளையாடிப் பாருஙகளேன்,
அதற்குப் பிறகு எப்போது விடுமுறை வரும், விளையாடலாம் என்று
ஆவலோடு இருப்பீர்கள்.
இது பற்றிய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன், பாருங்கள்!!!!!


 http://www.youtube.com/watch?v=-kK06P3QyMQ&feature=share&list=UUqkakT_bOPdaTjy6mGY3ltw