ஞாயிறு, ஜூலை 28

தர்ப்பணம் செய்யணுமா?

”வாப்பா, கோபாலா.எங்கே இவ்வளவு தூரம்?”
”ராமசாமி, சும்மா பார்த்துட்டு போகாலாம்ன்னு வந்தேன், ஆமா,
என்னப்பா பண்ணிக்கொண்டு இருக்கே?”
“இன்னிக்கு அமாவாசை, அதனால் த்ர்ப்பணம் பண்ணிண்டுருக்கேன்”.
“எதுக்கு த்ர்ப்பணம் பண்ணனும்?’
‘இது என்னப்பா கேள்வி? நம்ம தகப்பனார், தாயார், முன்னோர் ஆகியோருக்கு  அமாவாசை, கிரஹணம், அவர்கள் இறந்த திதி ஆகிய நாட்களில் தர்ப்பணம் பண்ணா போற வழிக்கு புண்ணீயம்ன்னு பெரியவர்கள் சொல்லி இருக்க்றது உனக்குத் தெரியாதா? இதென்ன புதுசா கேட்கிறே?”
”யார் போற வழிக்கு?”
“இதென்ன கேள்வி? அவர்களுக்குத் தான்.”
”அதில்லைப்பா, அவர்கள் தான் போய் சேர்ந்துட்டாங்களே, அப்பறம் அவர்களுக்கு எங்கே புண்ணியம் போய் சேரப் போறது?”
“இதென்ன விதண்டாவாதம் பேசறே?”.
"நான் சொல்லல்லை இதெ.”
“பின்ன யார் சொன்னாங்க?”.
“சென்ற ஞாயிறு அன்று திருவங்கத்தில் உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகளின் உபன்யாசம் ‘வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே’ என்ற தலைப்பில் பேசினார். அப்ப எதுக்குத் தர்ப்பணம், திதி இதெல்லாம் செயறது என்பதைப் பற்றியும், பாபம், புண்ணீயம் என்பதைப்
பற்றியும் பேசினார். அப்பத்தான் பாபத்தையும், புண்ணியத்தையும் தொலத்தாத்தான் வைகுந்தம் போகமுடியும். நாம் பண்ணற தர்ப்பணம், முன்னோருக்கு கொடுக்கிற திதி இவையெல்லாம் அவர்களுக்கு போய் சேராது. நம்ம கர்மத்தை தொலைத்தால் தான் நாம் வைகுந்தம் போக முடியுமாம். நம்ம முன்னோர்கள் அவர்கள் கர்மத்தை  லைத்திருந்தார்கள்
என்றால் அவர்கள் வைகுந்தம் போய் இருப்பார்களாம். நாம எள்ளும் தண்ணியும் இறைத்தால் நமக்குத்தான் புண்ணியம். அவர்களுக்கு அப்படியே போய்ச் சேராதாம்.
”பின்ன எப்படிப் போய் சேருமாம்”.
”அப்பறம் ஒரு உதாரணம் கொடுத்தார் பாரு, சூப்பர்.”
“என்ன?”
“இப்ப நம்ம செல்லுங்கற கைபேசியிலே பேசத்தானே செய்யறோம், மற்ற பக்கத்திலெ இருக்கிறவங்களுக்கு அப்படியே போய்ச் சேருதா?”
“அதெப்படி போய்ச் சேரும்?’. 
”அப்ப என்ன நடக்குது அங்க?”
“ஒலியை மின் அலைகளா மாற்றி அதன் அதிர்வெண்ணையும் அதிகரித்து, வேறொரு அதிர்வெண்ணோடு கலந்து ஏரியல் மூலமா அனுப்புறாங்க. மற்ற பக்கத்திலே இதெ தலைகீழா மாற்றி மீண்டும் ஒலி அலைகளா மாற்றின பிறகு நம் காதிலெ விழுது இல்லையா? (இதுக்குப் பேரு ஆங்கிலத்தில் modulation and demodulation என்று சொல்வார்கள்). அதுபோலத்தான் நாம எள்ளு தண்ணி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் செய்த கர்மவினைப்படி இப்ப அவர்கள் என்ன பிறவி எடுத்து இருக்காங்களோ அதற்கு ஏற்றாற்போல், உதாரணத்துக்கு, அதாவது மாடு ஜன்மம் எனில் புல்லாக, போய் சேருமாம்.”
“பிரமாதமா இருக்கே, ஏன் விதண்டாவாதம் பண்ணறவங்களுக்கு கூட இது சரியாப் படுமே, இல்ல!
“அதோட விடல ஸ்வாமிகள், அந்த மாதிரி இறந்தவங்களுக்கு காரியம் ஸ்ரிங்கத்தில் பண்ணா விஷேஷம், அதுக்காக திருமங்கை ஆழ்வார், பெருமாளிடம் வேண்டி ஒரு படித்துறை கட்டி இருக்கான்னு சொல்லி
அதுக்கான் கதையையும் சொன்னார். 

(அந்தக் கதை ஊர் கூடி தேர் இழுப்போம் அன்ற தலைப்பில் முன்னர் எழுதி உள்ளோம்).”
”அதோடு இல்லாமல் அந்த காரியங்கள் செய்ய தன்னார்வ தொண்டு அமைப்பையும் நிறுவி கட்டடங்கள் கட்டிக் கொண்டு இருக்கா, அதுக்கு எல்லாரும் நிதி உதவி செய்யாணுன்னு வேண்டி கேட்டார்கள். நம்முடைய பொண்ணு பையன் வெளினாட்டுலே இருந்தா அவர்களிடம் இருந்தும் நிதி கேட்டு கொடுங்கன்னு வேண்டி கேட்டார்கள்”
“செய்ய வேண்டியது தான் அப்பா. அந்த விலாசம் சொல்லு, உடனே ஒரு தொகையை கொடுத்து போற காலத்துக்கு புண்ணியத்தைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்வோம்”. 

இது தான் அந்த அட்ரஸ்:
               "ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் ட்ரஸ்ட்"
 2008 ஆண்டு பதிவு செய்யப்பட்டு  முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. கொள்ளிடக்கரையில் 11000 சதுர அடி, 
ஒரு தர்ம சிந்தனை  கொண்ட குடும்பம் மூலமாக தானமாக பெறப்பட்டு, ட்ரஸ்ட் பெயரில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
நித்ய விதிகளுக்கு அறைகள், கிணறு, கரைப்பதற்கு குளம், தீட்டு இல்லாமல் காரியங்கள்  நடத்த தனியான இடம், 
கழிவறைகள், தடையில்லாத மின்சாரம் போன்றவைகளுக்கு  நன்கொடைகள் எதிர்பார்க்கிறார்கள்.
ராமனுக்கு அணில் செய்தது போல், ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். இதில் அளிக்கப்படும் நன்கொடைகள் 
80G பிரிவின் படி வருமான வரி விலக்கு உண்டாம்.
மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
                 ஸ்ரீ திருமங்கை மன்னன் சாரிடபிள் டிரஸ்ட்
                 23, ராஜாஜி தெரு, ரெங்கநகர், ஸ்ரீரங்கம்,திருச்சி-620006
                 போன்:0431-2433078,
                E-Mail:stmmtrust@yahoo.com
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக