ஒரு சின்ன ஜோக். (a+b)n விரிவாக்கம் செய்ன்னு பையனிடம் கேட்டேன் ”இது என்ன சார் கஷ்டம், இப்ப பாருங்க சார்”,ன்னு எழுதிக் காட்டினானே பார்க்கணும். (a + b)n போதுமா சார், இல்லை இப்படி வேணுமா சார்? (a + b)n போதுமா சார், இல்லை இப்படி வேணுமா சார்? (a + b)n போதுமா சார்? எப்படி இருக்கு பையன் புத்திசாலித்தனம்!!!!! இன்னொரு தடவை, ஆசிரியர் பையனிடம், ”1+1=2, 2+2=4 ”, என்ன சரியா? ”சரி சார்”. ”இப்ப சொல்லு, 4+4 எத்தனை?” ”என்ன சார் நீங்க, ஈசியான கேள்விக்கெல்லாம் நீங்க பதில் சொல்லிட்டு, கஷ்டமான் கேள்விக்கு பதிலை எங்க்ளிடம் கேட்கிறீங்க” ன்னு சொன்னானே பார்க்கணும்!!! இந்த கணக்கையாவது போடுவியான்னு பாருன்னு ஒரு படத்தை கொடுத்து இதுலெ ’x’ , எங்கிருக்குன்னு காமீ-ன்னு சொன்ன உடனே, ”இதோ இருக்கு பாருங்க சார்” “என்ன கொடுமை சார்.” இது மாதிரி கணக்கு பற்றிய ஜோக் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். ஏன்னா, நிறைய பேருக்கு கணக்குன்னா வேப்பெண்ணை சாப்பிடறது மாதிரி கசக்கும். ஆனா இந்தச் சுட்டிக்கு கணக்கு அல்வா மாதிரி, ஈசியாக உள்ள போயிடும். ஆமாங்க, அவங்க ஸ்ரேயான்னு பேரு. ஐந்தாவது வகுப்புதான் படிக்கிறாங்க. அவங்க வகுப்புலே அவங்க ஆசிரியர், “கணக்குலே ஒரு கேம், அதாங்க ஒரு விளையாட்டு தயார் பண்ணனும். அத கடையிலே போய் எல்லாம் வாங்கக்கூடாது. சொந்தமா மூளையைப் பயன்படுத்தணும். நாலைந்து பேராவது விளையாடும்படி இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும் இருக்கணும்”, போன்ற நிபந்தனையெல்லாம் சொல்லி ”யார் தயார்ன்னு”, கேட்டு இருக்காங்க. உடனே ஸ்ரேயா எழுந்து, “நான் ரெடி பண்றேன், மிஸ்” சொல்லிட்டு அடுத்த ரெண்டு நாட்களுக்குள்ளே தயார் பண்ணிட்டாங்க்ன்னா பாருங்க. அது சரிதான்யா, அந்த விளையாட்டு என்னன்னு கேட்கிறீங்க, தெரியுது, அதத் தான் சொல்லப்போறேன். விளையாட்டு இதுதான். சதுரமான ஒரு போர்டு. அதுலெ சின்னச்சின்னதா சதுரமான கட்டங்களை வரைந்து கொள்ளணும். முதல் கட்டம் start ன்னு சொல்லக்கூடிய கட்டம். அடுத்தடுத்த கட்டங்கள்ள, சில இடங்களில், pick a card, move two spaces, roll the dice, move 4 places left, SIGN +, SIGN -,SIGN%,SIGN Multiplication, போன்றவற்றை இடது புறத்தில் ஆரம்பித்து வலது புறமாகவும், மேலிருந்து கீழாகவும் நம்ம வசதிக்கு ஏற்ப இடைவெளி விட்டு வரைந்து கொள்ளணும். (படம்-1)
படம்-1
முன்னதாக, நிறைய அட்டைகளில், பெருக்கல், கூட்டல், கழித்தல் மற்றும் வகுத்தல் போன்றவற்றை பயன்படுத்தி விடையைக் கண்டுபிடிக்கும் விதமாக தயார் செய்து கொள்ளவேண்டும். (படம்-2).
படம்-2,3
SIGN+ மாதிரி கட்டங்களுக்கு அடியில், பதில் சொல்லும்படியான கஷ்டமான கேள்விகள் எழுதி, அதற்கு என நான்கு அட்டைகளில் பதில் தயார் செய்து கொள்ளவேண்டும். (படம்-3) எப்படி விளையாடுவது? சொக்கட்டான் காய்களை பயன்படுத்தி, யார் அதிகமான எண் பெறுகிறாறோ அவர் முதலில் ஆரம்பிக்க வேண்டும். STARTல் ஆரம்பித்து, இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாகவும், மேலிருந்து கீழாகவும் செல்லும்படி, அவரவர்கள் பெறும் எண்களுக்கு ஏற்ப, காய்களை நகர்த்த வேண்டும். எந்தக் கட்டத்தில் வருகிறார்களோ அந்தக் கட்டத்தில் உள்ள நிபந்தனைக்கு பதில் சொல்ல வேண்டும். பதில் சரியாக இருந்தால் இரண்டு கட்டங்கள் வலது புறமாக நகர வேண்டும். தவறான பதில என்றால், அவர் தன்னுடைய இரண்டு முறைகளை இழக்கிறார். SIGN+ மாதிரி கட்டங்களுக்கு வரும்போது, அதன் அடியில் உள்ள கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால், அவருக்கு ஒரு சிறப்பு அட்டை கொடுக்க வேண்டும். தவறான பதில் என்றால் தன்னுடைய இருமுறைகளை இழப்பார். யார் முதலில் நான்கு சிறப்பு அட்டைகளை முதலில் பெறுகிறார்களோ அவர் வென்றவர் ஆகிறார். இந்த விளையாட்டில் என்ன சிறப்பு எனில், இந்த விளையாட்டை வயது ஏற்ப, படிப்புக்கு ஏற்ப, விளையாடும் நபர்களூக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பது தான். மிக சிறப்பான முறையில் விளையாட்டை அமைத்தத்ற்காக, ஸ்ரேயா ஆசிரியரிடம் பாராட்டு பெற்றுள்ளாள். நீங்களும் தான் தயார் செய்து ஒருமுறை விளையாடிப் பாருஙகளேன், அதற்குப் பிறகு எப்போது விடுமுறை வரும், விளையாடலாம் என்று ஆவலோடு இருப்பீர்கள். இது பற்றிய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன், பாருங்கள்!!!!! http://www.youtube.com/watch?v=-kK06P3QyMQ&feature=share&list=UUqkakT_bOPdaTjy6mGY3ltw
”தாத்தா, ஐ யம் கமிங் டு சீயங்கம், தாத்தா.” முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு பேரன் என்னிடம் வந்து கூறினான். "என்னடி சொல்றான், இவன்”, பேரன் சொல்லும் மழலை எனக்கு புரியாததால் என் பெண்ணிடம் கேட்டேன். அவனுக்கு வயது மூணு தான். நான் என் பெண்ணுக்கு எல்லா அப்பாக்களும் அல்லது அம்மாக்களும் செய்யும் உதவிக்காக (ஆறு மாத கோர்ஸ், அதுக்குப் பிறகு இங்கு இருக்க விடமாட்டார்கள்) அமெரிக்கா வந்த இடத்தில், கோர்ஸ் நடக்கும் தருவாயில், என் பேரன் என்னிடம் பேசியது தான் மேலே சொன்ன தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வாக்கியம். “என்னப்பா, இது கூடவா உனக்கு புரியவில்லை, அவன் உன்னோட ஸ்ரீரங்கத்துக்கு வரானாம்.” “ஏண்டா, உன் அம்மா, அப்பா, அக்கா யாரும் வரமாட்டார்கள். நீ மட்டும் வரயா?” இது நான். “நோ,நோ, ஐ யம் கமிங் டு சீயங்கம்”. அந்த ’நோ’ வை நீட்டிச் சொன்ன அழகைப் பார்க்கவேண்டும். “அங்க வந்து என்னடா பண்ணபோறாய்?’ “சீயங்கம், ஒம்மாச்சி, காப்பாத்து” “ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பெருமாள் கிட்ட காப்பாத்துன்னு கேட்கப் போறானாம்” ஆனால் ஆறு மாதத்துக்கு முன்னால். விமான நிலையத்தில் வந்து இறங்கி வீட்டுக்கு வந்தவுடன், ”தாத்தாகிட்ட போடா, இனிமேல் நாங்க ஆபிஸ் போன பிறகு தாத்தா தாண்டா உன்னோடு இருப்பா” என் பெண் தன் பையனிடம் கெஞ்சினாள். “நோ,நோ”, என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கிட்ட வருவதற்கு அஞ்சினான் பேரன். “என்னப்பா இது, இப்படி பண்ணறான்”. “விடுடி, பாத்துக்கலாம், ரெண்டு நாள் ஆனா எல்லாம் சரியாப் போயிடும்” சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, பெண்ணும் மாப்பிள்ளையும் வேலைக்குச் கிளம்பும் வரை பேரன் படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல் இருக்கவே, “என்னப்பா பண்றது இப்ப?” “அவனை எழுப்பி அவனிடம் ’நாங்கள் வேலைக்குப் போகப்போகிறோம், தாத்தாவுடன் இரு’ என்று சொல்லிவிட்டுப் போங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்,” என்று என் பெண்ணை சமாதானப் படுத்தினேன். அவர்கள் பையனை சமாதானப் படுத்திவிட்டு ஆபீஸ் போன பிறகு, ”ஹேய், இங்க வாடா, பால் தரவா?” நான் பேரனிடம் பயம் கலந்த மரியாதையுடன் கெஞ்சினேன். “யெஸ் தாத்தா, ஐ டிரின்க் மில்க், கிவ் மீ”, என்று நான் எதிர்பார்க்காத வண்ணம் பாலை வாங்கி கிடுகிடுன்னு சாப்பிட்டான். “அப்பா, அம்மா, அக்காவெல்லாம் எங்கேன்னு தெரியுமாடா?” “அம்மா ஆபீஸ், அப்பா ஆபீஸ், அக்கா ஃபூல்”. என்றானே பாக்கணும். ஸ்கூலுக்கு அக்கா போயிருக்காங்கிறதைத் தான், ”ஃபூல்” என்று சொல்றானு சாயங்காலம் பெண் மொழி பெயர்த்த பிறகு தான் எனக்கு அவன் பேச்சுப் புரிபட்டது. பெண்ணும், மாப்பிள்ளையும் ஆபீஸிலிருந்து மணிக்கொருதரம் பேரன் என்ன பண்றான்னு விஜாரித்துக் கொண்டே இருந்தார்கள். பத்து மணிக்கு சாப்பிட்டான். சிறிது நேரத்திலேயே, ‘ஆவ் கொண்டா தாத்தா’, என்றான். ’என்னடா சொல்றான் இவன்’, ஒன்னும் புரியாமல் நான் இருப்பதப் பார்த்து அவனே நேரே படுக்கை அறைக்குப் போனான், போர்வையை எடுத்துக் கொண்டு வந்தான், என் அருகில் வந்து, இது கூடத் தெரியவில்லையா என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘ஆவ் போத்தி விடு தாத்தா’ன்னு சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். மறுநாள், ‘தாத்தா, ஐ ஷூட் யூ”, என்று சொல்லிக்கொண்டு ஒரு துப்பாக்கியை காண்பித்து, அதை பிளாஸ்டிக் குண்டுகளால் நிரப்பச் சொன்னான். நானும் எதோ விளையாட்டுத் தானே என்று நிரப்பிக் கொடுத்தேன். அத்தோடு விட்டானா? இல்லை! என்னைக் குறிவைத்து சுட வேண்டியது, மீண்டும் நிரப்ப வேண்டியது. இதையே மீண்டும், மீண்டும் செய்ய வைத்து எனக்கு எப்படா நிறுத்துவான் என்று ஆகிவிட்டது. என்னடா இவன் பேரனுக்கு இதுகூட செய்யக் கூடாதா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது! நீங்கள் நினைப்பது போல துப்பாக்கியில் குண்டை நிரப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் அதை செய்வதற்குள் எனக்கு போதும் போதென்றாகிவிட்டது. ரெண்டு நாள் ஆகியிருக்கும். சாப்பாடு சாப்பிட்டு விட்டு படுக்கும் போது, ‘தாத்தா, யூ ஈட் தாத்தா, ஐ ஸ்லீப்’, என்றானே பாக்கணும். நாம எப்படிப் பழகறோமோ அதுக்குத் தகுந்தாற்போல் குழந்தைகள் தங்களை மாற்றிக் கொண்டு விடுகின்றன்ர் என்பது அப்போது தான் எனக்குப் புரிந்தது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று பெரியவர்கள் சொன்னது சரிதான் போல. அன்னைக்கு விடுமுறை என்பதால் எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். அப்போதும் போல நான் பேரனை பால் சாப்பிட கூப்பிட்டேன். ‘நோ, ஐ யம் நாட் கமிங், ஐ வில் ஈட் அம்மா, யூ கோ அவுட்’, என்று சொல்லிக் கொண்டு அம்மாவிடம் போய் பால் சாப்பிடுவேன் என்று போய் விட்டான். நடுநடுவில் எனக்கு டைம் அவுட் கொடுத்துவிடுவான். அப்படின்னா என்ன்ங்கிரிங்களா? என்னை ஒரு சேரில் உட்காத்தி சிறிது நேரம் யாரும் என்னோடு பேசக் கூடாது. அவன் அப்பா, அம்மாவிடம் செய்ய முடியாததை என்னிடம் செய்து பார்த்து விடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இது மாதிரி பல சேட்டைகள்!!! வீட்டில் அவர்கள் இருந்து விட்டால் என்னைப் பொருட்படுத்த மாட்டான். அன்று பூரா எனக்கு ஒரு மாதிரி இருக்கும். பெண்ணும் ‘வருத்தப் படாதே அப்பா, குழந்தைகள்னா அப்படித்தான் இருக்கும், நாளைக்கே உன்னிடம் வந்து விடுவான் பார்’ என்று என்னை சமாதானப்படுத்துவாள். எனக்கும் இதுதான் யதார்த்தம், அதுக்குத் தகுந்தார்போல் நம்ம வாழ்க்கையை மாத்திக் கொள்ளணும் என்று புரிந்து கொள்வேன். கிளம்பும் நாளும் வந்தது. “என்னடா, ஆர் யு கமிங் டு சீயங்கம், நாளைக்கு நான் ஊருக்குப் போகப் போகிறேன்,’ என்றேன். “நோ தாத்தா, ஐ யம் நாட் கமிங், யூ கோ”. என்றானே பாக்கணும். எனக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. பேரனுடன் இருந்த அந்த ஆறு மாதங்களை மனதில் அசைபோட்டுக் கொண்டு கண்களில் நீர் மல்க, சென்னை நோக்கி, விமானத்தில் ஏறினேன். அடுத்த தடவை பார்க்கும் போது அவனும் பெரியவனாகி விடுவான், நமக்கும் வயதாகிவிடும், மீண்டும் எப்போது இந்த அனுபவம் கிடைக்கும் என்று நினைப்பில், இதனை எல்லா தாத்தா பாட்டிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன்.