வியாழன், மார்ச் 8

ராமானுஜா அநு யாத்திரை அயோதயா இரண்டாம் பகுதி.

அயோதயா இரண்டாம் பகுதி.
அயோத்தியில் பார்க்கவேண்டிய இடங்கள் அநேகம். அவற்றில் பலவற்றை முந்தைய பகுதியில் பார்த்தோம்.
சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இடம் குப்த்தார் காட் என்ற படித்துறை.15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிலசமயங்களில், கூட யாராவது நம்முடன் வருவதாகச் சொன்னால் தட்டிக் கழிப்போம். ஆனால் ராமன் அப்படியில்லை. தன்னுடைய அந்திம காலம் முடிந்துவிட்டதை உணர்ந்த ராமன் வைகுந்தம ஏகிய இடம் குப்த்தார் காட் ஆகும். தன்னுடன் கூட புல் பூண்டுகளைக்கூட அழைத்துக்கொண்டு ஶ்ரீவைகுந்தம் சென்ற இடம் தான் குப்த்தார்காட் ஆகும்.



ப்படி பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ள அயோத்தி நகருக்கு அலகாபாத்தில் இருந்து காலை வந்து சேர்ந்தோம். அவரவரகளுக்கு ஒகுக்கப்பட்ட அறைகளில் சாமான்களை வைத்தோம். இன்னும் பொழுது விடியவில்லை. நாம் வந்து சேர்ந்த்தை எப்படியோ கண்டு கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள், தலா பத்து ரூபாய் என்ற கட்டணத்தில் எட்டு பேரை ஏற்றிக்கொண்டு சரயு ந்திக்கரைக்கு ஸ்நானம் செய்ய அழைத்துச்சென்றனர்.
நீர் சலசலவென ஓடிக்கொண்டு இருந்தது.வண்டல் மண், காலை வைத்ததும் இழுத்தது. ஜாக்கிரதையாக இறங்கி ஆற அமர நீராடினோம்.
இந்த யாத்திரையில் இதுதான் விஷேஷம். அகோபிலத்தில் தொடங்கி நைமிசாரணயத்தில் முடியும் வரை, எங்கெல்லாம் நதி இருக்கிறதோ அங்கெல்லாம் நதிகளில் தான் ஸ்நானம். கோதாவரி, மஹாநதி, பல்குனி நதி, கங்கை, யமுனை, சரஸ்வதி, சரய நதி, கடைசியாக நைமிஸாரணயத்தில கோமதி நதி என பல நதிகளில் நீராடும் பாக்கியம் கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் நான் இருக்கும் காவிரியில் அதிகமாக நீராடமாட்டேன். அதற்கு பிராயசித்தம் தான் போலிருக்கு, இந்த மாதிரி பல நதிகளில் நீராடி பாவத்தை தீரத்தோம் போலிருக்கு???
சரயுவை எங்கள் காமிராவில் வெவ்வேறு கோணங்களில் படமெடுத்துக்கொண்டோம்.
ஸ்வாமிகள் முன்னறே எங்களுக்கு சொன்ன மாதிரி, உடைகளை மாற்றிக்கொண்டு, காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு, நான் முன்னர் சொன்ன இடங்களை பார்த்து வர தயாரானோம்.
அயோத்தி என்றதும் உங்களுக்கு ஞாபகம் வரவேண்டுமே!
ராம் ஜன்ம பூமி தானே என்று சொல்லத் தோணுதா?
இல்லை, இல்லை!,,
பின்ன என்னய்யா?
ஆஞ்சநேயர், ஆம், குரங்குகள் தான்!!!!
தடுக்கி விழுந்தால் குரங்குகள் மேல தான் விழவேண்டும். இல்லை, இல்லை, குரங்குகள் தான் நம்மை தடுத்து ஆட் கொள்கின்றன.
கொஞ்சம் அசந்தால், நம்ம கையில் உள்ள பொருள் அதன் கைக்கு மாறிவிடும். ஜாக்கிரதை!!!
என்னுடைய நல்ல வேஷ்டியை கிழித்துவிட்டது என்றால் பாரத்துக்கொள்ளுங்கள!!!
இது மாதிரி ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அனுபவம்.
சரி, விஷயத்துக்கு வருவோம், ஆட்டோவை நாள் வாடகைக்கு பேசிக்கொண்டோம். முதலில் நாங்க போனது ராமனுக்கு கோவில் கட்ட தேவையான அத்தனை தூண்கள், சிற்பங்கள் எல்லாம் தயாராக இருக்கும் இடம். பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமனுக்கு கோயில் கட்டத் தேவையான அத்தனை பொருட்களும் நம்பர் இடப்பட்டு தயாராக உள்ளன. பார்க்க வேண்டிய இடம். உணர்ச்சிகளை தூண்டும் இடம்.


ராம் ஜன்ம பூமி: ராமன் பிறந்த இடம். ஒருவரே உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவு கொண்ட கம்பி கேட்டின் வழியே பலத்த பாதுகாப்பு வளையங்களை மீறி  பல வளைவுகளைக் கடந்து சென்றால் ஓரு கொட்டகையில்
பால ராமர்,  லக்ஷ்மணன் சமேத விக்கிரஹங்கள் அலங்காரத்துடன் காட்சியளிக்கிறார். பார்க்க கஷ்டமாக உள்ளது. எப்போ கேஸ் முடிந்து கோவில் கட்டப்படுமோ தெரியவில்லை, வேண்டிக்கொண்டோம் கூடிய சீக்கிரம் கோவில் எழும்ப வேண்டும்.
கனக பவன் ஸீதை, ராமனின் அந்தப்புரம் ஸீதை மற்றும் ராமனின் பழைய சிறிய மூர்த்திகளும், சிங்காதனத்தில் பெரிய மூர்த்திகளும் வைக்கப்பட்டுள்ளன.
வால்மீகி பவன் என்ற இடத்தில வால்மீகி ராமாயணம் முழுவதும் சலவைக்கல்லில் எழுதப்பட்டுள்ளது. ராமர், ஸீதை, லக்ஷ்மணன் விக்கிரஹங்கள்வைக்கப்பட்டுள்ளன.
சார் தாம் என்ற இடம், இந்தியாவின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பகுதி ஆகிய இடங்களின் முக்கியமான கோவிலகளான முறையே பூரி ஜெகன்னாதன், குவாரகா கிருஷ்ணர், ராமேஸ்வரம், கேதாரநாத் ஸ்வாமிகளின் உருவங்கள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. பார்க்க வேண்டிய இடம்.
ராமன், லக்ஷ்மணன், பரதன், சதருகணன் ஆகியோர் குருவோடு தங்கி படிக்கும் இடம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அம்மாஜி மந்திர் எனப்படும் தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் கோயிலில் ஶ்ரீரங்கநாதர் போன்ற விக்கிரஹங்கள்வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.
ஏன், அயோத்திய தடுக்கி விழுந்தால் கோயில்கள் தான்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு ஸ்வாமிகள் கொடுத்த தங்கும் அறைக்கு வந்து, மதிய உணவை ருசி பார்த்தோம்.
மாலையில் ஶ்ரீதா கல்யாணம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்து இருந்தார்கள், (அந்த மாதிரி ஒவ்வொரு இடத்திலேயும் அந்தந்த இடத்துக்கு ஏற்ப, அதில் சிறந்து விளங்கும் பண்டிதர்கள் மூலமாக செய்வது, இந்த யாத்திரையில் விஷேஷம்.), அதையும் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.
அன்று இரவே பெட்டி படுக்கைகள் சகிதம் எங்களின் கடைசி திவ்ய தேசத்தை நோக்கி கிளம்பினோம்.
எந்த ஊர்?

பார்ப்போம் அடுத்த பகுதியில்!!!!!!





















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக