செவ்வாய், ஜூலை 23

எப்படி இருக்க வேண்டும் உறவுகள்?





ஒரு தகப்பனார் தன்னுடைய வயதான காலத்தில் தன் சொத்துக்களை
தன் இரு பையன்களுக்கும் சமமாக எழுதி வைத்து விட்டு இறந்து 
போனார். ஒருவனுக்குக் கலாயாணமாகி குழந்தைகள் உள்ளனர்.
மற்றவன் பிரம்மச்சாரி.
கல்யாணமான பையன் தன் மனைவியிடம்,
“கமலா,என் தம்பி ராகவன் கலயாணமாகவில்லை. அவனுக்கு என்று
வாரிசுகளும் இல்லை. வியாதி என்று கடைசி காலத்தில் வந்தால் 
அவன் கஷ்டப் படுவான், நமக்கோ குழந்தைகள் உள்ளனர்.
கடைசி காலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் காப்பாற்றும். எனவே
அப்பா நமக்கு என்று கொடுத்த சொத்தை ராகவனுக்குக் கொடுக்கலாம்
என்று நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறாய்?”
”இதில் என்ன அப்பா சந்தேகம்.  இவ்வளவு நாட்கள் சொத்தை வைத்துக்
கொண்டிருந்த்தே தப்பு உடனே சித்தப்பாவுக்கு மாற்றி எழுதி விடுங்கள்”
அம்மா பதில் சொல்ல வருவதற்குள் குழந்தைகள் இருவரும் கோரசாக
அப்பாவுக்கு பதில் சொன்னார்கள்.
“அமாங்க, குழந்தைகள் சொல்வது தான் கரக்ட், போஙக உடனே மச்சினரிடம் கொண்டு போய் கொடுங்க”, மனைவி கமலா தன் கணவரிடம் சொன்னாள்.
”இதோ தம்பியை பார்க்கக் கிளம்பறேன்”.
”என்னங்க, வாசலில் யார் வந்திகிருக்கா பாருங்க?”, சட்டையை போட்டுக்கொண்டு கிளம்ப இருந்த கணவனை பார்த்து மனைவி சொன்னாள்.
“வாங்க சித்தப்பா, உங்களைப் பத்தித்தான் இப்ப பேசிகிட்டு இருந்தோம்,
நீங்களே வந்துட்டிங்க”, குழந்தைகள் வாசலில் சித்தப்பாவை பார்த்து
சந்தோஷத்தில் வரவேற்றனர்.
“என்ன அண்ணா, மன்னி, பசங்களா எல்லோரும் நலம் தானே”, ராகவன்
எல்லோரையும் குசலம் விஜாரித்தான்.
“நலம்தான் ராகவா, நீ எப்படி இருக்காய்? கமலா, தம்பிக்கு சாப்பிட சூடா
ஏதாவது கொண்டா. உன்னைப் பார்க்கத்தான் நானே கிளம்பிக்கொண்டு 
இருந்தேன். அதென்ன கையில் என்ன பை?”
“நலம்தான் அண்ணா, ஒண்ணும் இல்ல, குழந்தைகள், மன்னி, மற்றும்
உன்னைப் பாக்கணும் போல இருந்தது, அதான் கிளம்பி வந்துட்டேன்”
“காபியை சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க, தம்பி”, மச்சினரிடம் காபியை
கொடுத்துக் கொண்டே கமலா கூறினாள்.
”காபி நன்னாக இருக்கு மன்னி”.
“அது சரி என்ன விஷயம், உடம்பு ஏதும் சரியில்லையா ராகவா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு
அதெ உடனே செயல்படுத்துடலாம்ன்னு தான் வந்தேன். நீங்க தப்பா
நினைக்க கூடாது”.
“அப்படி என்னடா தலை போற விஷயம், உடனே சொல்லாட்டா என்ன,
போன்ல சொல்லி இருக்கலாமே?”
“அதானே தம்பி, மெதுவா சொல்லிருக்கலாமே”.
“இல்ல மன்னி, அண்ணா. நல்ல காரியங்களை தள்ளிப் போடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. அப்படித் தள்ளிப் போட்டா சமயங்களில் மனசு மாறி செய்யாம போயிடலாம். அதான் உடனே கிளம்பி வந்துட்டேன் அண்ணா”.
“என்ன சித்தப்பா பீடிகை எல்லாம் பலமா இருக்கு?”
”அப்படி இல்ல குழந்தைகளா, இப்ப எனக்கு யார் இருக்கா உஙகளை விட்டா? கடைசி காலத்திலே உங்க காலடியிலே வந்து விழுந்திட மாட்டேனா? நீங்க, அண்ணி, அண்ணா எல்லாரும் என்ன கரை சேர்த்துட மாட்டீங்களா?”
ஷாக்காகி, “திடீரென்னு அதுக்கு என்ன வந்ததுங்க?” மன்னி.
“அப்படி இல்லை மன்னி, நெருப்புன்னா வாய் வெந்துடுமா, எதுக்கும்
முன்னெச்சரிக்கையாக இருக்கணும் இல்லையா? அதோட அண்ணாவுக்கும் பெரிய குடும்பம், ரெண்டு குழந்தைகள், இவர்களுக்கு கல்யாணம் பண்ண வேண்டும், அதுக்கெல்லாம் செலவு அதிகமாகும்”.
“அதனால,”
“அதனால யோசிச்சேன், நானோ சம்பாதிக்கிறேன் அது எனக்குப் 
போறும். அப்பா கொடுத்த சொத்த வச்சுண்டு நான் என்ன
பண்ணப்போறேன், அத ரெண்டு கொழந்தைகள் பேருலெ மாத்தி
எடுத்துண்டு வந்திருக்கேன், மறுப்பு சொல்லாம வாங்கிக்கணும்”.
இப்படி சொல்லிக் கொண்டே பையைத் திறந்து டாகுமெண்டுகளை
குழந்தைகளை கூப்பிட்டு கொடுத்தான் ராகவன்.
குழந்தைகள்,அண்ணா, மன்னி, தம்பியை நினத்து வாயடைத்து நின்றார்கள்.
உறவுகள் இப்படி அல்லவா இருக்கவேண்டும்!!!!!!
எங்கேயோ கேட்டது தான்!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக